வெற்றிகரமாக ஆறு!
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் கதாநாயகர்களின் விருப்ப நாயகியாக இருக்கும் த்ரிஷா, ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத் துள்ளார். தமிழில் அஜித்தின் "விடா முயற்சி', தெலுங்கில் சிரஞ்சீவியின் "விஷ்வம்பரா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிரபாஸின் ‘"ஸ்பிரிட்'’ மற்றும் சல்மான்கானின் ஒரு படம் பேச்சு வார்த்தையில் உள்ளது. இப்படி தொடர்ந்து முன்னணி நடிகர் களுடன் பயணித்துவரும் த்ரிஷா, அவர்களிடம் நற்பெயரை வாங்கியுள்ளார். இதனால் ஹீரோக்கள் தங்க ளது அடுத்த படத்திற்கும் த்ரிஷாவையே புக் பண்ண சொல்லி பரிந் துரைக்கின்றனர். அந்த வகையில் அஜித் தற்போது தனது அடுத்த படமான ‘"குட் -பேட் -அக்லி'யில் த்ரிஷாவை நடிக்க வைக்க படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் பேசியுள்ளார். அவரும் த்ரிஷாவிடம் கதை சொல்லி ஓ.கே. வாங்கியுள்ளார். விரைவில் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பட மாக்கப்படவுள்ளது. இதன் மூலம் அஜித்துடன் ஆறாவது முறையாக த்ரிஷா இணைந்து நடிக்கவுள்ளார். ‘"குட் -பேட் -அக்லி'’ படத்திற்கு முன் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள ‘"விடாமுயற்சி'’ படத்திலும் த்ரிஷாதான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய சம்பளம்!
"ஜவான்' படத்திற்கு பிறகு அட்லீயின் மார்க்கெட் ராக்கெட் ஸ்பீடில் எகிறியுள்ள நிலையில் டாப் நடிகர்கள் சல்மான்கான், அல்லுஅர்ஜுன், விஜய் என அனைவரும் அவரை அழைத்து கதை கேட்டனர். இதில் அல்லு அர்ஜூன் படம் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சல்மான்கான் படம் தற்போது தொடங்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை ஆர்.ஆர்.ஆர்’ படம்போல் இரண்டு கதாபாத்திரங்களை மையக்கருவாகக் கொண்டு எழுதப் பட்டுள்ளதாம். அதில் ஒரு கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்க இன்னொரு பாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இதற்காக கமல்ஹாசனுக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதேபோல் பிரபாஸ், அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான "கல்கி' படத்தில் பெரிய சம்பளத்துடன் கமல் நடித்திருந்தார்.
பார்ட் 2 பிஸி!
சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்திவந்த செல்வராகவன், தற்போது அதற்கு முழுக்கு போட்டுவிட்டார். இப்போது மீண்டும் பழையபடி இயக்குநராக முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார். தான் ஹிட் கொடுத்த படங்களின் பார்ட் 2-வை அடுத்தடுத்து எடுக்க திட்டமிட்டுள்ளார். அதில் முதல் படமாக "7ஜி ரெயின்போ காலனி' பார்ட் 2-வை ஆரம்பித்த அவர் தற்போது 50 சதவிகித படப்பிடிப்பை முடித்துள்ளார். மீதமுள்ள படப்பிடிப்பை இன்னும் சில மாதங்களில் முடித்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிடும் ப்ளானில் உள்ளார். இப்படத்தை அடுத்து "புதுப்பேட்டை' பார்ட்-2வை எடுக்கவுள்ளார் செல்வராகவன். முன்னதாக தனுஷை வைத்து "ஆயிரத்தில் ஒருவன்' பார்ட் 2-வை தொடங்கவிருப்பதாக அறிவித்திருந்தார்... அந்தப் படம் பின்பு கைவிடப்பட்டது.
ரீடேக் ரசிகை!
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் "கொடி', "தள்ளிப் போகாதே' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் "சைரன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித் திருந்தார். இப்போது மாரி செல்வ ராஜ் -த்ருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் "பைசன்', பிரதீப் ரங்கநாதன் -அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் "ட்ரா கன்'’படத்திலும் நடித்துவருகிறார். இரு படப்பிடிப்பிலும் ரீ டேக் எடுத்தால் மகிழ்ச்சியோடு அடுத்த டேக்கிற்கு ரெடியாகிவிடு கிறாராம் அனுபமா. ஏனென்றால், "சவாலான வேடங்களில் நடிக்கும் போது அதிக ரீடேக் எடுத்தால் தான் அக்கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய் அதற்கு உயிரூட்ட முடியும்' என்கிறார்.
-கவிதாசன் ஜெ.