சர்ப்ரைஸ் சிம்பு!

சிம்பு தனது ரசிகர்களுக்கு தீனி போட்டே ஆகவேண்டும் என்ற முடிவெடுத்து, அதற்காக கடுமையாக உழைத்தும் வருகிறார். அந்த வகையில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு நீளமாக முடிவளர்த்தல், தாய்லாந்து சென்று தற்காப்புக் கலை கற்றல், தீவிர உடற்பயிற்சி என புது முயற்சிகளை மேற்கொண் டுள்ளார். இப்படம் கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு கதா பாத்திரத்தில் திருநங்கை யாக நடிக்கிறார். அதற் காக சில பயிற்சி களையும் எடுத்து வருகிறார். புதிதாக சில விஷயங்களும் படத்தில் சர்ப்ரைஸாக இருக்கிறதாம். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில்... அதிலும் ஏதாவது வித்தியாசம் காட்ட தீவிர டிஸ்கஷன் நடைபெற்று வருகிறது. இதைப்போல் ஒவ்வொரு விஷயத்திலும் சிம்பு தலையிட்டு தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

மூன்று படம் மிஸ்ஸிங்!

vv

Advertisment

"பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு மணிரத்னத்தின் நெருங்கிய வட்டாரத்தில் இணைந்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. அதனால்தான் கமலை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் "தக் லைஃப்' படத்தில், முக்கிய கதாபாத்திரம் என்றதும் உடனே ஓடி வந்துவிட்டார். இப்படத்திற்காக மூன்று படங்களைத் தவிர்த்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. அதில் ஒன்றாக லீட் ரோலில் கார் ரேஸ் கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் படத்தைத் தவிர்த்துவிட்டார். "96' பட இயக்குநர் பிரேம் குமாரின் மனைவி தனா பிரேம் இயக்கும் இப்படத்தி லிருந்து, ஐஸ்வர்யா லட்சுமி விலகிவிட்டதால் தற்போது வேறொரு கதாநாயகியை படக்குழு தேடிவருகிறது. இப்படத்திற்கு கொடுத்திருந்த கால்ஷீட்டைத்தான் மணிரத்னம் படத்திற்கு மாற்றிவிட்டார். இதேபோல் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஒரு படமும், மற்றொரு படத்தையும் ஐஸ்வர்யா லட்சுமி தவிர்த்துவிட்டார்

வில்லனுக்கு வலை!

பா.ரஞ்சித் இயக்கும் "தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம், அதன் வெளியீட்டிற் குக் காத்துக்கொண்டிருக்கிறார். ஜனவரியி லிருந்து ஏப்ரலுக்கு போன படம் தற்போது இன்னும் தள்ளிப்போகவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இப்படத்தை தொடர்ந்து, தற்போது சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் நடித்துவருகிறார். அவரது 62வது படமாக உருவாகி வரும் இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகிறது. ரியாஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். படத்தில் மொத்தம் மூன்று வில்லன்கள். கதைப்படி ஒரு வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க மற்றொரு கதாபாத்திரத்திற்கு பகத்பாசிலிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல் இன்னுமொரு கதாபாத்தி ரத்திற்கு தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோ ஒருவ ருடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

Advertisment

dd

தங்கை திவ்யா!

நீண்ட இடை வெளிக்குப் பிறகு விக்ரம்பிரபுவின் "ரெய்டு' படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத் தார் ஸ்ரீதிவ்யா. படம் சரியாகப் போகாத தால், அடுத்த பட வாய்ப்பில்லாமல் தவித்துவருகிறார். சமீ பத்தில் பிரேம்குமார் இயக் கத்தில் கார்த்தி நடித்துவரும் படத்தில் ஹீரோயினாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கவில்லையாம், மாறாக கார்த்திக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக் கிறாராம். கதாநாயகியை விட தங்கை கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருப்பதாலும், இவரது கதாபாத்திரத்தை சுற்றித்தான் கதை நகர்வதாகவும் சொல்லப்பட்டதை கருத்தில் வைத்துத்தான், தங்கை கதாபாத்திரத்திற்கு ஓ.கே. சொல்லியுள்ளார்.

நடிப்புக்கு பிரேக்!

மணிகண்டன் ஹீரோவாக நடித்த "குட் நைட்', "லவ்வர்' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து ஹீரோ பட வாய்ப்பு வந்து குவிய... அதற்கு சிறிது பிரேக் விட்டுவிட்டு இயக்குநராக முயற்சி எடுத்துவருகிறார். அதில் விஜய்சேதுபதியை இயக்க அவரிடம் ஓ.கே. வாங்கி வைத்துள்ளார். இப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால், பா.ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

லிகவிதாசன் ஜெ.