"மனித உரிமைக்காக, கருத்துரிமைக்காக அனைத்து சமூக செயற்பாட்டாளர்களும் கை கோர்க்கும் நேரம் இது' விருது வழங்கும் விழாவில் நக்கீரன் ஆசிரியர் குறிப்பிட்டார்!
மதுரையில் நீதியரசர் கிருஷ்ணய்யர் மற்றும் நீதியரசர் பகவதி பெயரில் 2023ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, சோக்கோ அறக்கட்ட ளையின் தலைவர் மஹபூப் பாட்ஷா மற்றும் வழக்கறிஞர் கோமதி ஆகியோரின் ஏற்பாட் டில் நடைபெற்றது. இதில் மனித உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் தொண்டாற்றிய பல்வேறு துறைகளைச் சார்ந்த வர்களுக்கு, சிறப்பு விருந்தின ரான நமது ஆசிரியர் நக்கீரன் கோபால், விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
மதுரையில் 1980ல் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரால் நிறு வப்பட்ட சோக்கோ அறக் கட்டளையை, கடந்த 30 வரு டங்களுக்கும் மேலாக வழக்கறிஞர் மஹபூப் பாட்ஷா நன்முறையில் நடத்தி வருகிறார். இந்த அறக் கட்டளை கொத்தடிமைகள் மீட்பு, நிலமற்ற, ஆதரவற்ற ஏழை களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் தன்னலமற்ற சேவையை ஆற்றி வருகிறது. அதுமட்டுமல்லாமல், இச்சமூகத்தில் பல்வேறு துறை களில் தன்னலம் கருதாமல், சாதாரண விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்கான பணிகளைச் செய்துவரும் சமூக செயற்பாட்டாளர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் கொடுத்து சிறப்பித்துவரும் நிலையில், நடப்பு 2023ம் ஆண்டுக்கான நீதிபதி கிருஷ்ணய்யர் மற்றும் நீதிபதி பி.என்.பகவதி பெயரில் விருதுகள் அறிவிக்கப்பட்டு, ஜனவரி 27ஆம் தேதி, நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களால் வழங்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி யின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட் டாளருமான மறைந்த அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கும், மனித உரி மைக் களத்தில் தொடர்ந்து இயங்கி வரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் காவல்துறை உதவி காவல் ஆணையருமான பி.பாலசுப்பிரமணி யத்திற்கும், பேராசிரியர் ஆர்.விஜய குமாருக்கும், சிறை சீர்திருத்தத் திற்கான விருது கே.ஆர்.ராஜாவுக் கும், மனித உரிமை பத்திரிகையாள ருக்கான விருது டி.எஸ்.எஸ்.மணிக் கும், மனித உரிமை மற்றும் சமூக விடு தலைக்குப் பாடு பட்ட ஷீலு பிரான் சிஸ், கொரோனா காலத்தில் இறந்த பிரேதங்களை அடக்கம் செய்து தொண்டாற்றிய முஜிபுர் ரஹ்மான், ஏழை புற்றுநோயாளிகளுக்கு தன்னலமற்ற தொண்டாற்றும் டாக்டர் ஜெ.ஜெபசிங், விளிம்பு நிலை மக்களுக்கான மருத்துவத் தொண்டாற்றிய சமூக செயற்பாட் டாளர் டாக்டர் வாசிம் ஷா, பாண்டியன் கமல், டாக்டர் சண்முக பிரியா, ஆர்.எம்.ஆர்.சாந்திலால் ஆகியோ ருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
சமூக செயற்பாட்டாளர் களுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றிய நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள் பேசிய போது, "பத்ம பூஷன் விருது களைக் காட்டிலும் நீதிபதி கிருஷ்ணய்யர் பெயரில் வழங்கும் இந்த விருது மிகவும் உயர்ந்தது 1997ல் எனக்கு சோக்கோ சார்பில், உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா விடமிருந்து இந்த விருதினை நான் வாங்கினேன்'' என்று நினைவுகூர்ந்தவர், நக்கீரனைப் பற்றி சொல்லும் போது வீரப்பனைப் பற்றி சொல்வார்கள். ஆனால் 1990 களில் அந்த 16 ஆயிரம் கிலோ மீட்டர் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த 6 லட்சம் மக்களுக் கான உரிமைக்காக போராடு வதற்காகத்தான் களத்தில் நாங்கள் நின்றோம். எங்க ளோடு அன்று களத்தில் நின் றது இந்த சோக்கோ அறக் கட்டளை.
அன்று சித்ரவதைக்கு ஆளான மக்களுக்காக சதாசிவ கமிஷன் கொண்டுவரபட்டது. ஆக, மனித உரிமை எங்கெல் லாம் மீறப்படுகிறதோ, அங் கெல்லாம் நக்கீரன் இருக்கும். இன்றைக்கும் ஸ்ரீமதி விசயத்தில் அவர்கள் பக்கம் ஒன்றிய அரசு இருப்பதால் யாரும் சொல்லப் பயந்தனர். ஆனால் நக்கீரன் இன்றளவும் நீதியின் பக்கம் இருக்கும். எவரும் தொட முடியாத விசயம்... தொடப் பயப்படும் விசயம் என் றாலும், நக்கீரன்தான் முன்னாடி நிற்கும். அது நித்தியானந்தா முதல் காஞ்சி சங்கராச்சாரியார் வரை... தற்போது ஈஷா வரை... நாம் தான் முன்னாடி நிற்போம். மனித உரிமைக்காக விளிம்பு நிலை மக்களின் பக்கம் நக்கீரன் நிற்கும். நமக்கு இன்னும் நிறைய கடமைகள் இருக்கிறது. வரலாற் றை மாற்ற ஒரு கூட்டம் ரெடியா இருக்கு. குஜராத் கலவரத்தை டாகுமெண்ட்ரியா எடுத்து பி.பி.சி. வெளியிட்டிருக்கு. அதற்கு ஒன்றிய அரசு தடை போட்டி ருக்கு. தடை, வாய்ப்பூட்டுச் சட்டம், கருத்துரிமை பறிப்பு... இவையெல்லாம் காலம் கால மாக இருந்தாலும், தற்போது அதிகமாகி இருக்கிறது. எனவே நாம் விழித்துக்கொள்ள வேண் டிய நேரம் இது. நாம் எல்லோ ரும் ஒன்று சேர்ந்து மனித உரி மைக்காகக் கைகோர்க்க வேண் டிய நேரம் இது. எனவே இது போன்ற விருதுகள், வரும் தலைமுறைக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்'' என்று பேசினார்.