இந்த ஆண்டு சபரிமலை யில் வரலாறு காணாத கூட் டத்தில் சிக்கி பலர் மூச்சுத்திணற, மூன்று பக்தர்கள் பலியான சம்பவம் கேரள அரசியலில் பரபரப்பை பற்றவைத்துள்ளது. இவ்விவகாரத்தில் கேரள அரசுக் கெதிராக அரசியல் செய்வதாக காங்கிரஸ், பா.ஜ.க.வினரை ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டது. நடை திறந்த முதல் 3 நாட்களில் வழக்கம்போலிருந்த கூட்டம், அடுத்தடுத்த நாட்களில், கேரளா அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் எதிர்பார்த்ததைவிட எண்ணிக்கை அதிகரிக்க, கூட் டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை திணறியது. பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பல மடங்கு அதிகரித்ததால் அந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் போக, சுவாமி தரிசனத்துக்காக 16 முதல் 26 மணி நேரம்வரை காத்திருக்கும் சூழல் முதன்முறையாக சபரி மலையில் உருவானது. கூட்டத்தில் சிக்கிய பக்தர்களில், பத்மபிரியா என்ற சிறுமி உள்ளிட்ட மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரியை சேர்ந்த பக்தர் ஸ்ரீஜி, "30 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வருகிறேன். இந்த முறை தான் க்யூவில் நின்று சாமி தரிசனம் செய்தேன். திருப்பதியைப் போல இங்கும், மரக்கூட்டத்தி லிருந்து சன்னிதானம் வரை 'டைனமிக் க்யூ' முறையை கொண்டுவந்ததால் தான் இந்த முறை பம்பையிலிருந்து கணபதி கோவில், நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரி பீடம் வரை பக்தர்கள் 20 மணி நேரத்துக்கு காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இந்த டைனமிக் க்யூ முறை மூலம் பக்தர்களைக் காத்திருக்க வைப்பதால் மலைக்கு வரும் பக்தர்களுக்கு அச்சம் தான் ஏற்படும்.
அதேபோல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆன்லைன் புக்கிங் அதிகம் தான். அதோடு, நிலக்கல் மற்றும் பம்பையிலிருந்து 25 ஆயிரம் பேர் வரை ஸ்பாட் புக்கிங் செய்ததும், காட்டுப்பாதை வழியாக 5 ஆயிரம் பேர்வரை வந்து செல் வதும்கூட கூட்டம் அதிகரிப் பதற்கான காரணமாகும்'' என்றார்.
"இந்துக்களின் நம்பிக் கையை தகர்க்க வேண்டுமென்றே பக்தர்களின் பாதுகாப்புக்கு முறையான ஏற்பாடுகளை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி யினர் செய்யவில்லை'' என்று கொதித்தார் பா.ஜ.க. மாநில செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ்.
"சபரி மலை சீசனுக்கு முன் நடத்தப்பட வேண்டிய அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒரே ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்டது. கூட்டத்தில் சரியான முடி வெடுக்கத் தவறிவிட்டனர். பாதுகாப்புக்கான போலீசாரும் போதுமானதாக இல்லை'' என்று குற்றம்சாட்டினார்.
இவ் விவகாரத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் பொய்யான தகவல்களைக்கூறி அரசியல் செய்வதாக தேவசம் போர்டு நிர்வாகிகள் தெரிவித்த னர்.