ssனிமொழி மீண்டும் களமிறங்கியதால், தனது நட்சத்திரத் தகுதியைத் தூத்துக்குடி தொகுதி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த முறை அவர் இங்கு 3,47,209 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி மகுடம் சூடினார். இந்தமுறை, குறைந்த பட்சம் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என இலக்கை வைத்துக்கொண்டு, களத்தில் ஓடியாடிக்கொண்டு இருக்கிறார்.

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திக்குளம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது தூத்துக்குடி மக்களவை. இவற்றில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி மட்டும் அ.தி.மு.க. வசம் உள்ளது. 2019-ல் இருந்த அதே கூட்டணி பலத்தோடும், இரண்டு அமைச்சர்கள், மேயர் என பலம் வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளோடும் களத்திலிருக்கின் றார் கனிமொழி. இவர்களோடு, அ.தி.மு.க.வில் இங்கு களமிறங்கியிருப்பவர், புத்தூர் கட்டு வைத்தியரான பண்டாரவிளை சிவசாமி வேலு மணி. இங்கு பா.ஜ.க. அணியில் த.மா.கா. விஜய சீலனும், நாம் தமிழர் சார்பில் பல் மருத்துவர் ரொவினாரூத்தும் களத்திலிருக்கிறார்கள். எனவே தொகுதியில் புழுதி பறந்துகொண்டிருக்கிறது.

tt

தொகுதியில் இந்துக்கள் 72 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 21 சதவீதமும், இஸ்லாமியர்கள் 7 சதவீதமும் இருக்கின்றனர். சாதிரீதியாக கணக்கிட்டால் நாடார் சமூகத்தினர் 25 சத வீதமும், பட்டியலினத்தவர்கள் 21.5 சதவீதமும் முக்குலத்தோர் 10 சதவீதமும், நாயக்கர் 7 சதவீதமும், பிள்ளைமார், மீனவர், யாதவர் ஆகியோர் தலா 5 சதவீதமும், ரெட்டியார் சமூகத்தினர் 3 சதவீதமும் அருந்ததியர் 2.5 சதவீதமும், ஆசாரி 2 சதவீதமும் என பல்வேறு சமூகத்தினர்கள் விரவிக் கிடக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடியது, இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கான பணிகளைத் தொடங்கியது உள்ளிட்ட சாதனைகளைக் கூறி தி.மு.க. வாக்குகளை சேகரிக்க, "தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கள்ளக் கூட்டணி' என அ.தி.மு.க. சைடில் வார் ரீல் ஓட்டுகிறது.

Advertisment

நம்மிடம் பேசிய ஸ்ரீவைகுண்டம் வேணு கோபால், “"ரூ.25 கோடி செலவழிப்பேன் என்றபடி, தி நகர் சத்யா மூலம் தூத்துக்குடி வேட்பாளராக வந்திருக்கிறார் அ.தி.மு.க. சிவசாமி வேலுமணி. இவர், அ.தி.மு.க.வின் தெற்கு மா.செ.வான சண்முகநாதனின் சொந்த அக்காள் மகன். எனினும், இந்த இரண்டுபேருக்கும் இடையில் அவ்வளவு ஏழாம் பொருத்தம். வடக்கு மா.செ. கடம்பூர் ராஜூவின் தயவு இருந்தால் போதுமென, தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில்கூட சண்முகநாதனைப் புறக்கணித்து விட்டு, நடக்கிறார் சிவசாமி வேலுமணி. இதனால் சண்முகநாதனின் ஆதரவாளர்கள் இவர்மீது கடுப்பிலிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சண்முக நாதனே கோபமடைந்து, "உனக்கு எவம்லே சீட் கொடுத்தான்?' என பொதுமேடையிலேயே பகிரங்கமாகக் குரல் எழுப்பினார்'' என்கிறார்.

தூத்துக்குடி லயன்ஸ்டோன் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் "கனிமொழியிடம் தோத்து விடுவோம் என மனதளவில் பாதிக்கப்பட்டுட்டாரு அ.தி.மு.க. வேட்பாளர். அதனால் பணத்தை வெளியில் எடுப்பதில்லை. எனக்கு மாநகர மா.செ. பதவி வேணும் என அடம்பிடிக்கும் சித.செல்லப் பாண்டியும், சண்முகநாதன் மற்றும் கடம்பூர் ராஜூவும் தனித்தனியாக ஆவர்த்தனம் செய்ய, எந்தப் பக்கம் போவது? என்கின்ற வேதனையிலேயே சோர்ந்து விடுகின்றார்'' என்கிறார்.

tt

Advertisment

தலைவரும் நானே, தொண்டனும் நானே’ என்பது போல, பா.ஜ.க. கூட்டணியில் த.மா.கா. வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தன்னந் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறார்.. மாவட் டத்தில் கட்சி ரீதியாக மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கியிருக்கும் பா.ஜ.க. வினரோ, "எதுக்குப்பா நம்ம காசை செலவழிக்கணும். வேட்பாளர் காசை அவிழ்க்கட்டும். அதன்பிறகு நாம் வாக்குகளை சேகரிக்கலாம்'' என பா.ஜ.க. தரப்பினர் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

விளாத்திக்குளத்தில் ச.ம.உ. மார்க்கண்டேயன், கோவில்பட்டியில் நகர்மன்றத் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரை நம்பி வாக்குகளை அறுவடை செய்துவருகிறார் கனிமொழி. தூத்துக்குடி மாநகராட்சிக்கான 60 வார்டுகளில் (இதில் 8 வார்டுகள் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி) தனித்தனியாக கூட்டம் போட்டு வட்டச்செய லாளர்கள் முதற்கொண்டு அனைவரையும் கரன்சி மழையில் நீராட்டியிருக்கிறார் மேயர் ஜெகன் பெரியசாமி.

அதேவேளையில், எதைப் பற்றியும் கவலைப் படாமல் தன்னுடைய தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமாக விட்டமின் "ப'’வை வாரியிறைத்திருக்கிறார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். "எப்படியும் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் விளாத்திக்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசமும், கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் பகுதிகளில் ஓரளவு கணிசமான வாக்குகளும் தி.மு.க.விற்கு கிடைக்கும்' என்கிறார்கள் பலரும்.

"சுணங்காமல் இன்னும் வேகம் காட்டினால், கனிமொழி வைத்திருக்கும் டார்கெட் நிச்சயம் நிறைவேறும்'' என்கிறார் தி.மு.க. நிர்வாகியான ஜெயபால்.

இங்கே வெற்றிக்கனியைப் பறிக்கும் வேகத் தில் இருக்கிறார் கனிமொழி. எனவே, முத்துநகர் தொகுதியான தூத்துக்குடியில், சூரியத் தரப்பிடம், கூடுதல் உற் சாகத்தை இப்போதே பார்க்கமுடி கிறது.

படங்கள்: விவேக்