மிழகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ராணுவத் தலைமை தளபதி விபத்து பற்றிய மர்மங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பித் துள்ளன. அந்த விபத்து எப்படி நடந்தது என கண்டறிவதற்காக இந்திய ராணுவம் ஏர் மார்ஷல் மனதேந்திரசிங் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக் கப்பட்டது. அந்த விசாரணைக் குழு தனது முதல் அறிக்கையை இந்திய ராணுவத்திடம் அளித்துள்ளது. அடுத்த வாரம் தனது முழு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. முதல் கட்ட விசாரணை அறிக்கையில் பிபின் ராவத் மரணமடைந்த விபத்து மனிதன் செய்த தவறு மற்றும் தொழில்நுட்பக் கோளாறு என அந்த விசாரணைக் கமிட்டி தெரிவித்துள்ளது.

2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் ராணுவ தலைமை தளபதி சுலைமானியை, அமெரிக்கா பாக்தாத் ஏர்போர்ட்டில் வைத்து அவர் பயணம் செய்த காரை டிரோன் மூலம் தாக்கி அழித்தது.

bb

Advertisment

அதற்குப் பிறகு நடந்த பெரிய விபத்து பிபின் ராவத் மரணம்தான். சுலைமானி கொல்லப்பட்டதற்கு பிறகு ராணுவத் தளபதிகளுக்கு மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகமெங்கும் உள்ள ராணுவம் செய்தது. அதேபோல் பிபின் ராவத்துக்கும் செய்யப்பட்டிருந்தது. அதை யெல்லாம் தாண்டி பிபின் ராவத் மரணமடைந்தார்.

அதற்குக் காரணம், மோசமான வானிலை என்று சொல்லப்பட்டது. ஆனால், ஏர் மார்ஷல் மனதேந்திர சிங் அறிக்கையில் மோசமான வானிலை என்பது மூன்றாவது காரணமாக சொல்லப்படு கிறது.

மனிதத் தவறு, தொழில் நுட்பக் கோளாறு ஆகியவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த தொழில்நுட்பக் கோளாறு எப்படி உருவானது? அந்நிய நாட்டு சக்திகள் பிபின் ராவத்தை கொல்ல தொழில் நுட்பக் கோளாறுகளை அவர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் ஏற்படுத்தியதா? மோசமான வானிலையில் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட பயங் கரத்தை சமாளிக்க முடியாமல் விமானி விபத்து ஏற்படுத்தி னாரா? என்பது வரும் வாரத் தில் தெரிய வரும் என்கிறார் கள் ராணுவத்தைச் சார்ந்தவர் கள்.

ஆனால் பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்ட ரான எம்.ஐ.17 வி 5, காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பயணம் செய்யக்கூடியது.

மோசமான வானிலையை சமாளிக்கக்கூடிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது. பைலட்டால் விமானத்தை ஓட்ட முடியவில்லையென்றால், ஆட்டோ பைலட் என்கிற தொழில்நுட்பத்தின் மூலம் விமானத்தை செலுத்த முடியும்.

கும்மிருட்டிலும் பயணிக் கக்கூடிய நைட் விஷன் கொண்ட இந்த ஹெலிகாப்டரின் பெட் ரோல் டேங்க், எந்த சூழலிலும் தீப்பிடிக்காத பாலி யூரித்தீன் என்கிற பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டது.

இந்த விபத்து மர்மங்கள் பற்றி இந்திய ராணுவம் விரிவாக விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதை சர்வதேச நாடுகள் உன் னிப்பாக கவனித்துக்கொண்டிருக் கின்றன.

ஏனென்றால் ரஷ்ய தயாரிப்பான இந்த ஹெலி காப்டரை ரஷ்யா உள்பட உலகம் முழுவதும் உள்ள 60 நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதில் மனிதத்தவறும் தொழில்நுட்பத் தவறும் அவ்வளவு சீக்கிரம் நடந்துவிடாது என்கிறார்கள் ராணுவத் தொழில்நுட்ப வல்லுநர்கள்.