th

(10) மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு!

மிழ்நாடு -ஆஸ்திரேலியா -மடகாஸ்கர் ஆகிய இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே பெரும் நிலப்பரப்பாக இருந்த லெமூரியா கண்டம் என்கிற குமரிக்கண்டம், கடற்கோள்களால் அழிந்தது பற்றிய ஆராய்ச்சிகளையும், பண்டைய தமிழ் இலக்கியச் சான்றுகளைப் பற்றியும் கடந்த அத்தியாயத்தில் பார்த் தோம்.

இந்த மூன்று நாடுகளுக்கும் இருக்கிற, இருந்த ஒற்றுமைகளைப் பார்ப்போம். அதிலும் குறிப்பாக தமிழனின் கலாச்சாரமான "ஏறு தழுவுதல்' மடகாஸ்கர் நாட்டிலும் இருப்பது வியப்புக்குரியதாகவும், பல கேள்விகளுக்கு விடையாகவும் இருக்கிறது.

Advertisment

இந்த மூன்று நாடுகளின் கடல் சார்ந்த நிலப்பரப்பில் மட்டும் பனைமரங்கள் ஒரு தொடர்ச்சியாக வளர்ந்திருக்கின்றன. தமிழ் நாட்டின் தேசிய மரமான பனைமரம், தமிழர் வாழ்வில் எந்த அளவிற்கு கலந்திருந்தது என்பதை நாம் அறிவோம்.

ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி ஒரு பிரமிப்பான ஒற்றுமை உண்டு. லெமூர் குரங்குகள் ஒரு வலுவான கோட்பாட்டை உருவாக்கியதைப் போல, ஏறு தழுவுதலும் மனித இனம் தோன்றிய நிலப்பரப்பைப் பற்றிய புதிய கோட்பாட்டைத் தருகிறது.

Advertisment

மடகாஸ்கரில் பெட்ஸிலியோ என்ற இனத்தைச் சார்ந்த மக்கள், சாவிகா என்ற விளையாட்டை விளையாடுகிறார்கள். நெல் வயல்களில் பயிரிடத் தொடங்கும் காலத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. அதன்படி அவர்கள் பெரும் சொத்தாக மதிக்கும் செபு என்ற காளைகளைப் பிடிக்கும் ஆண்களையே அந்த இனத்துப் பெண்கள் திருமணம் செய்கிறார்கள். இது காலம் காலமாக அவர்களது வழக்கமாக இருந்து வருகிறது. செபு மாடுகளும் நம்மூர் மாடுகளைப் போலவே உடல்வாகு பெற்றிக்கின்றன. தமிழ்நாட்டின் முல்லைநிலத்தின் ஏறு தழுவுதல் கடல் தாண்டி மடகாஸ்கரில் விளையாடுவது எப்படி? அப்படியே ஏறு தழுவுதலை விளையாடினாலும் காளையைப் பிடிக்கும் ஆண்மகனையே திருமணம் செய்யும் தமிழ்ப்பெண்களின் கலாச் சாரத்தை, கடல் தாண்டி வேறொரு இனம் பின்தொடர வாய்ப்புகள் இல்லையே? அப்படியானால் தமிழ்நாட்டையும் மடகாஸ்கரையும் இணைக்கும் ஒரு பொது நிலப்பரப்பு இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டுதானே?

மடகாஸ்கர் நாணயங்களில் மாட்டு உருவம் பொறித்திருக்கிறார்கள். மடகாஸ்கர் ரூபாய் நோட்டுகளில் ஏறுதழுவுதல் படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. ஆநிரை கவர்தல் சார்ந்த கலாச்சார வழக்கமும் தென்படுகிறது. இவையெல்லாம் மடகாஸ்கருக்கும் நமக்கும் இருக்கும் பழமையான உறவை உறுதி செய்கிறது.

மேற்கூறியவைகளை தொகுத்துப் பார்க்கும் போது லெமூர் குரங்குகள் இருநிலத்திலும் இருப்பதைப் போல, ஏறு தழுவுதல் இருநிலத்திலும் இருப்பதும் குமரிகண்டம் இருந்ததற்கான ஒரு வரலாற்று ஆவணம்.

இது மேலைநாட்டு தியரிகளையும், வடநாட்டு நம்பிக்கைகளையும் சுக்குநூறாக உடைக்கிறது. ஒருவேளை, ஏறு தழுவுதல் இத்தகைய வரலாற்று ஆவணமாக இருப்பதால் கூட அதை தடை செய்வதற்கு ஒரு சிலரால் கடும் முயற்சி எடுக்கப் படுகிறது என்று தோன்றுகிறது... ஆனால் நிதர்சனம் என்னவென்றால், எத்தனைமுறை போட்டுப் புதைத்தாலும் உண்மை மீண்டும் மீண்டும் முளைத்து எழும்... ஏனெனில் உண்மை என்பது ஒரு வீரிய விதை. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை.

tt

ஏறுதழுவுதலைப் பற்றிய தொடர் எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் பாலமேடு அரவிந்த்ராஜ் என்ற மாடுபிடி வீரரின் இறப்புச் செய்தி மிகுந்த துயரத்தைக் கொடுக்கிறது. மாடு பிடிவீரர்களின் பரவலான கோரிக்கையை இங்கே பதிவுசெய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பெரும்பாலும் ஏழ்மையில் இருக்கும் மாடுபிடி வீரர்களுக்கான இன்ஷூரன்ஸ் தேவை வெகு நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடக்கும் ஒரு நாளுக்கு மட்டுமான இன்ஷூரன்ஸ் திட்டத்தை செயல் படுத்தினால், அவர்களுடைய மருத்துவத் தேவைக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும். சிறு ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் மருத்துவ வசதியை அரசுத் தரப்பில் ஏற்படுத்திக் கொடுப்பதும் தேவையாக இருக்கிறது.

மாடுபிடிவீரர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல், ஜல்லிக்கட்டை நன்முறையில் ஊக்குவிப்பதற்கு சிறந்த வழி. கிட்டத்தட்ட எல்லா விளையாட்டுக்களும் விளையாட்டுத் துறையின் கோட்டா முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டு, சிறந்த வீரர்களுக்கு அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன. அதே போல் இந்த பாரம்பரிய விளையாட்டில் சிறந்த மாடுபிடிவீரராகத் தேர்ந்தெடுக்கப்படு பவருக்கு, தகுதியின் அடிப்படையில் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகள் அளிக்கலாம் அல்லது வேலை வாய்ப் பில் முன்னுரிமையோ அல்லது வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடோ அளிக்கலாம்.

மாடுபிடி வீரர்கள் டோக்கன் பதிவு செய்து, மெடிக்கல் செக்கப் செய்து, அதிகாலையில் வாடிக்குள் நுழைய வரிசைப் படுத்துகிறார்கள். வீரர்கள் வாடிக்குள் நுழைந்து வெளியேற மதியம் ஆகிவிடுகிறது. அதுவரை உணவு அருந்தாமல் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து மாடுபிடிக்கிறார்கள். அவர்களுக்கான உணவுத் தேவை நிறைவேற்றப்படுவதில்லை....

வாடிக்குள் ஒரு பேட்ச்சில் நிற்கும் மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை குறைக் கப்பட்டிருக்கிறது, இதனால் காட்டு மாடுகள் அவிழ்க்கப் படும் போது வீரர்கள் காயம்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. மாடு பிடிவீரர்களின் எணணிக்கையை அதி கப்படுத்த வேண்டும். மாடுபிடி வீரர்களுக்கான, மாடுகளுக்கான டோக்கன் வழங்கும் முறையில் விதிமுறை களை மாற்றியமைத் தலும் தேவையாக இருக்கிறது. வீரர் களுக்கு நிரந்தர அடை யாள அட்டை வழங்கலாம். மாடு களுக்கான டோக்கன்களை ஆன்லைனில் கொடுக்கலாம். முறைகேடுகளும், குழப்பங்களும் தவிர்க்கப்படும்.

(ஆட்டம் தொடரும்...)

குமரிக்கண்டத்தில் ஒரு தாய் மக்களாக உருவாகி, ஒன்றாகக் குழுமி வாழ்ந்த மொத்த மனித இனமும் ஒரே மொழி பேசியதாகவும், அது தமிழின் ஆதி வடிவம் எனவும் குறிப்புகள் இருக்கிறது... ஆரம்பகால மனித வரலாற்றை விளக்கும் யூதர்களின் பைபிளான ஜெனிசிஸ் நூலில் மனித இனம் ஆரம்பத்தில் மொத்தமாக ஒரே மொழி பேசியதாகவும், அவர்களுக்குள் பாகுபாடு உருவாக்கும் பொருட்டு அதில் கலப்புகள் ஏற்படுத்தியதாகவும் எழுதியிருக் கிறார்கள். இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், நாக்கை மடக்கிப் பேசத் தொடங்கிய மனிதன் முதலில் பேசியது ஒரு மொழியே! அதற்குப்பின் அந்த மொழியிலிருந்து பல கிளை மொழிகள் பிரிந்து... பிரிந்து, இன்று பலநூறு மொழிகளாக திரிந்திருக்கிறது, ஒரு வேரிலிருந்து தண்டாக எழும்பி வரும் மரம், பிறகு படிப்படியாக கிளைகளாக பிரிந்து, பலவாறாக விரிந்து படர்தல் போல...!