“பத்து வருஷத்துக்கு முன்னால சாத்தூர் தொகுதில அ.தி.மு.க.வுக்கு விழுந்த வாக்கு சதவீதம் 58.32. அப்ப தி.மு.க.வுக்கு கிடைச்சது 39.07 சதவீத வாக்குகள்தான். கடந்த சட்டமன் றத் தேர்தல்ல.. இந்தத் தொகுதில தி.மு.க. கூட்டணில இருந்த ம.தி.மு.க. பெற்ற வாக்கு சதவீதம் 38.68. அ.தி. மு.க. 32.85 சதவீத வாக்குகளைப் பெற்றது.

ss

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்ல, மாவட்ட பஞ்சாயத்து வார்டுல திமுக 76.83 சதவீத வாக்குகளும், அதிமுக 15.54 சதவீதம் வாக்குகளும் வாங்கி யிருக்கு. அதாவது... தோல்வி யுற்ற அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமியைக் காட்டி லும் ஐந்து மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் தி.மு.க. வேட்பாளர் பகவதி திருவேங்கடசாமி. உள் ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெறுவது வழக்கம் தான். அதே நேரத்தில், தோல்வி என்றாலும் கவுரவமான தோல்வியாகத்தானே இருந்திருக்க வேண்டும். இந்த அளவுக்கு மோசமாகவா இருக்கவேண்டும்? அ.தி.மு.க.வுக்கு ஏன் இந்த வீழ்ச்சி?

கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம், "விருதுநகர் கிழக்கு மாவட்டத்துல தேவையில்லாத பிரச்சனை ஓடிட்டிருக்கு. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜிக்கும் முன்னாள் அ.தி.மு.க. சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் மொதல்ல பிரச்சனையாச்சு. ராஜவர்மன் கட்சிய விட்டுப் போனாரு. அப்பத்தான் முன்னாள் சபாநாயகர் காளி முத்தண்ணன் தம்பி ரவிச்சந்திரனை கிழக்கு மாவட்ட செயலாளராக்கி, சாத்தூர்ல போட்டியிட சீட்டும் வாங்கித் தந்தாரு ராஜேந்திரபாலாஜி. சாத்தூர்ல தோற்றுப்போன சோகத்துல இருந்த ரவிச்சந்திரனுக்கு, திரும்பவும் ராஜவர்மனை ராஜேந்திரபாலாஜி கட்சிக்குள்ள கொண்டுவந்தது அறவே பிடிக்கல. என்னைக் கேட்காம ராஜவர்மனை எப்படி கட்சில சேர்க்கலாம்கிற கோபம் தலைக்கேறிருச்சு.

Advertisment

இதப்பத்தி ராஜேந்திரபாலாஜிகிட்ட நிர்வாகிகள் சொன்னப்ப... "முன்னாள் எம்.எல்.ஏ. ஒருத்தரு திரும்பவும் கட்சிக்கு வர்றாருன்னா அது கட்சிக்கு பலம்தானே? தலைமை சொல்லித் தானே ராஜவர்மனை திரும்பவும் கட்சில சேர்த்திருக்கோம். கிழக்கு மாவட்டத்துல கட்சி வேலை எம்புட்டோ இருக்கு. அதைப் பார்க்காம என்னைக் கேட்கலைன்னு உங்க மாவட்டச் செயலாளர் குற்றம் சொல்லிட்டிருந்தா நல்லாவா இருக்கு'ன்னு அவரோட நியாயத்த சொன்னாரு.

sattur

ரவிச்சந்திரனுக்கோ ஆத்திரம் குறைஞ்சபாடில்ல. மாவட்ட செயலாளரான என்னைக் கேட்காம எப்படி கட்சில சேர்க்கலாம்னு, அவரோட ஆட்கள கூட்டிக்கிட்டு போயி, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வரைக்கும் புலம்பிட்டு வந்தாரு. இவரோட பேச்சு தலைமைகிட்ட எடுபடல. ரவிச்சந்திரனை, ராஜேந்திரபாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் எதிரான நிலைய எடுக்க வச்சது, இங்கே ஒன்றிய செயலாளரா இருக்கிற சண்முகக்கனிதான். ஏன்னா... அரசியல்ல ராஜவர்மனோட வளர்ச்சி, சண்முகக்கனிக்கு பிடிக்காமப் போனதுதான். நிஜத்தை சொல்லணும்னா, இந்த ரவிச்சந்திரனோ, சண்முகக்கனியோ, கட்சி மட்டத்துல, தொண்டர்கள்கிட்ட, சொல்லிக்கிற அளவுக்கு செல்வாக்கு இல்லாதவங்க. ஆனாலும்... ஊராட்சித் தேர்தல் நடக்கிற இந்த நேரத்துல, ஒரு ஸ்டண்ட் அடிச்சு பார்த்துடணும்னு திட்டம் போட்டாங்க.

Advertisment

இங்கே ஏ.ராமலிங்கபுரம் அ.தி.மு.க. கிளைச்செயலாளரா இருக்கிற வீரோவு ரெட்டி, ராஜேந்திரபாலாஜிகிட்ட அப்பப்ப செலவுக்கு பணம் வாங்குறவரு. அவரோட பிள்ளைங்க படிப்புச் செலவுக்குகூட ராஜேந்திரபாலாஜி நெறய பணம் கொடுத்திருக்காரு. ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு கை நீட்டுற அவர வச்சு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி அண்ணன் கண்ணு முன்னால, ராஜேந்திரபாலாஜிய டென்ஷன் ஆக்கணும்கிறதுதான் திட்டம்.

ஊராட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த வழியா எடப்பாடி அண்ணன் வந்தப்ப, அவரு இருந்த காருல தான் ராஜேந்திரபாலாஜி யும் இருந்தாரு. இந்த வீரோவுரெட்டி என்ன பண்ணுனாருன்னா.. அவங்க வந்த காருகிட்ட போயி, கே.டி.ஆர். ஒழிகன்னு சத்தமா கத்தினாரு. எடப்பாடி அண்ணன் பக்கத்துல இருக்கிறப்ப, தன்கிட்ட பணம் வாங்குற வீரோவுரெட்டி போட்ட ஒழிக கோஷத்த கேட்டு, கோபத்துல காரைவிட்டு இறங்கி திட்டினாரு ராஜேந்திரபாலாஜி. அவரு திரும்பவும் காருல ஏறி கிளம்பின பிறகு, வீரோவு ரெட் டிய கட்சிக்காரங்க அடிச்சதும் விலக்கிவிட்டதும், காருல ஏற்றி அப்புறம் இறக்கிவிட்டதும், போலீஸ் கண்ணு முன்னாலதான் நடந்துச்சு.

அந்தக் களேபரத்துல, சாத்தூர் அ.தி.மு.க. நகரச்செய லாளர் இளங்கோவை, ரவிச்சந்திரன், சண்முகக்கனி தரப்பு தாக்கியதும் நடந்துச்சு. ஆனாலும், ராஜேந்திரபாலாஜி மேலயும் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், அவதூறாகப் பேசுதல், ஆள்கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாச்சு. உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்ச பிறகுதான், ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீனே கிடைச்சது.

சரி, ரவிச்சந்திரன் தரப்பு தூண்டிவிட்டு ராஜேந்திரபாலாஜி மேல கேஸ் போடவச்ச வீரோவு ரெட்டியோட நிலைமை இப்ப என்ன தெரியுமா? எட்டு வருஷத்துக்கு முன்னால வேலை வாங்கித் தர்றேன்னு தி.மு.க. கிளைச் செயலாளர்கிட்ட பணம் வாங்கிருக்காரு. வேலை வாங்கித் தரவுமில்லை. பணத்தையும் திரும்பக் கொடுக்கல. மோசடி புகார்ல இப்ப தலைமறைவா இருக்காரு வீரோவுரெட்டி.

sattur

கட்சி நிர்வாகிகளுக்குள் நடக்கிற ‘ஈகோ ஃபைட்,’ இங்கே விருதுநகர் கிழக்கு மாவட்டத்துல, அ.தி.மு.க.ங்கிற கட்சியே இல்லாத மாதிரி பண்ணிருச்சு. ராஜவர்மனை கட்சில சேர்த்தா சேர்த்துட்டுப் போகட்டும்னு ரவிச்சந்திரன் நினைச்சிருந்தா, உள்ளாட்சித் தேர்தல்ல இத்தனை மோசமான தோல்வி ஏற்பட் டிருக்காது. கட்சிய பலப்படுத்த முடியலைன்னாலும், பலவீனப் படுத்திட்டாங்க. ராஜேந்திரபாலாஜி, ராஜவர்மன், இளங்கோ மாதிரியான கட்சி முக்கியஸ்தர்களை பகைச்சுக்கிட்டு, உள் ளாட்சித் தேர்தல்ல என்ன ஓட்டு வாங்க முடியும்? சாதாரண தொண் டனும் தெரிஞ்சு வச்சிருக்கிற இந்த விஷயத்தைக்கூட தெரிஞ் சிக்காம இருக்கிறவங்க கையிலதான், இந்த மாவட்டம் இருக்கு.

சாத்தூர் கட்சி ஆபீஸ்ல ராஜேந்திரபாலாஜி படம் இருக்கவே கூடாதுன்னு, கழற்றி வீசும்படி செஞ்சாரு. கட்சித் தொண்டன் ஒருத்தன் ரவிச்சந்திரனைப் பார்த்துக் கேட்கிறான்... ராஜேந்திரபாலாஜி செய்தி மந்திரியா இருக்கிறப்ப, உங்க மருமகனுக்கு ஏ.பி.ஆர்.ஓ. வேலை போட்டுக் கொடுத்தாருல்ல. அதை ரிசைன் பண்ணச் சொல்ல வேண்டியதுதானே? உயர்கல்வி அமைச்சரா பழனியப்பன் இருந்தப்ப, உங்க வீட்டுக்காரம்மாவுக்கு துணைவேந்தர் பதவி கிடைக்கிறதுக்கு சிபாரிசு பண்ணுனது ராஜேந்திரபாலாஜிதானே? அவங்கள ராஜினாமா பண்ணச் சொல்லுவீங்களா? ராஜேந்திரபாலாஜி யை ராஜவர்மன் பேசாத பேச்சா? அவரே ராஜவர்மனை ஏத்துக்கிட்டாரு. ரவிச்சந்திரன் முரண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம்? கட்சிதான் காணாமப் போய்க்கிட்டி ருக்கு''’என்று ரொம்பவே நொந்துகொண்டார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் குமுறலுக்கு விளக்கம்பெற, விருதுநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனைத் தொடர்புகொண் டோம். நமது அழைப்பை ஏற்காமல், தொடர்ந்து நம்மைத் தவிர்த்தபடியே இருந்தார்.

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு மாவட்டம்... தொகுதிக்குத் தொகுதி... இதே ரீதியிலான விவகாரங்கள் உள்ளன. உயர்மட்டத் தலைவர்களிடமும் இத்தகைய பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்குகின்றன.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சிக்கு இது பொன்விழா ஆண்டு. அரசியலில் 50 ஆண்டுகள் நிலைத்தது மட்டுமின்றி, அதில் அதிக ஆண்டுகள்... அதாவது 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பெருமையும் அ.தி.மு.க.வுக்கு உண்டு. ஜெயலலிதா மாதிரி ஒரு தலைமை கிடைக்காவிட்டால், பொன்விழா ஆண்டு சிறக்காது என குமுறுகிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.