சிவகங்கையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 11-ஆம் தேதி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார். மதுரை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் ஆகியோர் அவருக்கு வரவேற்பளிக்க காத்திருந்தனர். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

rr

விமானத்திலிருந்து இறங்கி பேருந்து மூலம் விமான நிலைய வளாகத்திற்குள் வந்துகொண்டி ருந்தபோது சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, எம்.வையாபுரி பட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடியை தன் செல்போனால் லைவ் வீடியோ எடுத்துக் கொண்டே, “"என்னுடன் விமான நிலைய பேருந்தில் நிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியுடன் பயணித்துக்கொண்டு இருக்கேன்''’என்று சொல்லிவிட்டு, "எடப்பாடியார் துரோகத்தின் அடை யாளம்''’என்று சத்தமாகக் கூப்பிட்டு, "சின்னம்மா விற்கு துரோகம் செய்தவர். தென்மாவட்ட மக்களுக்கு எதிராக 10.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்த துரோகி'' என்று சத்தமிட... எடப்பாடி யுடன் கூடவந்த பாதுகாவலர்கள் அவரது செல்போனை பறிக்க முயன்றனர். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியது.

மதுரை விமான நிலைய வளாகத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், மணிகண்டன் ஆகியோர் அந்த நபரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இந்த நிலையில், விமான நிலைய பாதுகாப்பு போலீசார் அவரை மீட்டு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த தகவலறிந்து மதுரை விமான நிலை யத்தில் கூடிய அ.ம.மு.க.வினர், ராஜேஸ்வரனை விடுதலை செய்யுமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மதியம் 4 மணி ஆனநிலையில் ராஜேஸ்வரனிடம் “"புகார் கொடுக்கப்பட்டால் விசாரணைக்கு வரவேண்டும்'’என எழுதி வாங்கிக்கொண்டு விமான நிலையத்திலிருந்து அவனியாபுரம் போலீசார் அவரை விடுவித்தனர்.

"தங்கள் கட்சியின் தலைவர் எடப்பாடியை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்ட அ.ம.மு.க.வை சேர்ந்த இராஜேஸ்வரனை கைதுசெய்யவேண்டும்' என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் புகார் கொடுக்க, செல்லூர் ராஜுவோ, “"தி.மு.க. ஆட்சியில் எங்கள் தலைவர் எடப்பாடியாரை ஒருவன் குடித்துவிட்டு ஒருமையில் பேசுகிறான். புகாரின் அடிப்படையில் அவனை கைது பண்ண வேண்டும்''’என்றார்.

மறுநாள், அ.ம.மு.க.வைச் சேர்ந்த இராஜேஸ்வரனை அடித்த 6 பேரை இது வரை கைதுசெய்யாத தி.மு.க. அரசின் காவல் துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று சிவகங்கையை சேர்ந்த வழக்கறிஞர் குருமுருகானந் தம், எடப்பாடி உள்ளிட்ட 6 நபர்களையும் கைதுசெய்ய வேண்டும் என்று புகார் கொடுக்க, எடப்பாடி பழனிச் சாமி, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், டநஞ கிருஷ்ணன் உள்ளிட்ட 6 நபர்கள் மீது மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

எடப்பாடி மீது வழக்கு பதிந்ததை கண்டித்து மார்ச் 13 அன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். "மதுரை தொண்டர் கள் ஜெயிலுக்குப் போக பயந்தவர்கள் அல்ல. நாங்கள் பல ஜெயில்களைப் பார்த்தவர்கள். எங்களிடம் இதுபோன்று பூச்சாண்டி காட்டாதீர்கள். அ.தி.மு.க. எதற்கும் அஞ்சாது. எடப்பாடி பழனிச்சாமி மீது தவறான வழக்கு பதிவுசெய்த காவல் துறை அதிகாரி மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஆர்.பி.உதயகுமார் கொந்தளித்தார்.

Advertisment

r

இத்தனை பரபரப்புக்கும் காரணமான இராஜேஸ்வரனிடம், "ஏன் அப்படிப் பேசினீர்கள்?'' என கேட்டபோது, "சார் நான் சிங்கப்பூரில் வேலை செய்துவருகிறேன். அ.ம.மு.க.வின் வெளிநாடுவாழ் தமிழர்கள் பிரிவு செயலாளராக உள்ளேன். தற்போது விடுமுறைக்கு என் சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன். அந்த நொடிவரை நான் சாதாரணமாகத்தான் இருந்தேன் 11-ஆம் தேதி காலை இண்டிகோ விமான பேருந்தில் ஏறியவுடன், அதே பேருந்தில் எடப்பாடியா ரைப் பார்த்ததும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் சின்னம்மா காலடியில் தவழ்ந்து வந்ததுதான் ஞாபகத்திற்கு வந்துபோனது. இதை அவர் காதில் படும்படி சொல்லவேண்டும் என்று தோன்றியது. எனவே தான் அதை லைவ் வீடியோவாக நேருக்கு நேர் அவர் முகத்தைப் பார்த்து "சின்னம்மா வின் துரோகி, 10.5% இட ஒதுக்கீடு கொடுத்து தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்' என்று சொன்னேன். எடப்பாடி அவர் அருகிலிருந்த பாதுகாவலரிடம் ஏதோ முணுமுணுத்தார். உடனே பி.எஸ்.ஓ கிருஷ்ணன் என் செல்போனைப் பறித்து என் பிடறியைப் பிடித்து தள்ளிகொண்டே வந்து போலீஸிடம் ஒப்படைத்தார்.

அப்போது வெளியே இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண் டன், சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில் நாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் மற்றும் ஊர் பெயர் தெரியாத நபர்கள் என்னை அடித்து என் விலை யுயர்ந்த செல்போனை பிடுங்கினர். என் கைவிரல் முறிந்துள்ளது. துரோகிகள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை''’என்றார்.

Advertisment