மிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அதேபோல் தேர்தல் களத்திலும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதால் சீட் வாங்கிவிட்டால் வெற்றி உறுதி என்ற கனவோடு உ.பிகளும், தி.மு.க. கூட்டணிக் கட்சியினரும் உற்சாகத்தில் மல்லுக்கட்டிக்கொண்டு போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வாங்கிக் கொண்டிருக் கிறார்கள்.

t

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளும் மதுரை மாவட்டத்தில் உள்ள, சோழவந்தான், உசிலம்பட்டி என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் சேர்த்து ஆறு சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது தான் தேனி பாராளுமன்றத் தொகுதி யாக உள்ளது. இதில் ஆண்டிப்பட்டி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். அதேபோல் போடி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றிருக்கிறார் கள். டி.டி.வி.தினகரன் முதன் முறையாக தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற் றுள்ளது. இந்த தேனி பாராளுமன்றத் தொகுதி யைப் பொறுத்தவரை அ.தி. மு.க. தான் அதிக முறை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தி.மு.கவும், காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியை தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரசுக்கு ஒதுக்கியதன் பேரில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறங்கி, ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத்திடம் குறைந்த ஓட்டு வித்தி யாசத்தில் தோல்வியைத் தழுவினார். அப்படி யிருந்தும் இம்முறை தேனியில் போட்டியிட காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை. எனவே இத்தொகுதியில் போட்டியிட உ.பி.க்கள் மல்லுக்கட்டி வருகிறார்கள்.

ttஇது சம்பந்தமாக தேனி மாவட்ட பொறுப்பிலுள்ள சில உ.பி.க்களிடம் கேட்டபோது, "தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளில் தேனி மாவட்டத்தில் மட்டும் நான்கு தொகுதிகள் இருப்பதால் இந்த தொகுதிகளில் இருக்கக்கூடிய கட்சிப் பொறுப்பாளர்களில் ஒருவரைத்தான் வேட்பாளராக தலைமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு எங்க மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும் பரிந்துரை செய்வார். அதன் அடிப்படையில் தான் ஓ.பி.எஸ்.சை எதிர்த்து அரசியல் செய்துகொண்டு கட்சியை வளர்த்துவரும் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கத்தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளரும் மாநில தீர் மானக்குழு இணைச் செயலாளருமான ஜெயக் குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கம்பம் செல்வேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஆரூணின் இரண்டாவது மகனான இம்ரான் உள்பட சில கட்சிப் பொறுப்பாளர்களும், புதுமுகங்களும் சீட் கேட்டு வருகிறார்கள்.

Advertisment

இதில் தலைவரும், அமைச்சர் உதயநிதியும் யாருக்கு சீட் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு கட்சிப் பணியாற்றி வெற்றி பெற வைப் போம். இச்சூழலில், மதுரை மாவட்டத்திலுள்ள இரண்டு தொகுதிகளான சோழவந்தானும், உசிலம்பட்டியும் தேனி பாராளுமன்றத் தொகுதிக்குள் இருப்பதைக் கண்டு திடீரென பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான மூர்த்தி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான சேடபட்டி முத்தையாவின் மகனான மணிமாறனுக்கு தேனி பாராளுமன்றத் தொகுதியில் சீட் வாங்கிக்கொடுக்கும் முயற்சியில் இறங்கி வருவதாக கட்சிக்காரர்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. நான்கு தொகுதிகள் கொண்ட தேனி பாராளுமன்றத் தொகுதிகளில் இருக்கக்கூடிய ஒருவருக்கு சீட் கொடுத்தால் தான் தொகுதி வளர்ச்சி அடை யுமே தவிர, மதுரையிலிருந்து வந்து போட்டியிட்டு வெல்பவரால் ஒட்டுமொத்த தொகுதிக்கும் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை. எனவே அதை எங்களால் ஏற்க இயலாது.

ஏற்கெனவே 2014 பாராளுமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன் முத்து ராமலிங்கம் போட்டியிட்டு தோல்வியைத் தழுவி னார். அதன்பின் இரண்டு முறை கூட்டணிக் கட்சிக்கு தொகுதி போய்விட்டது. இந்த முறையாவது எங்க மாவட்டத்தில் இருக்கக்கூடிய கட்சிப் பொறுப்பாளர்களில் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெறப் போகிறார் என்ற நம்பிக்கையோடு இருந்து வருகிறோம். அந்த அளவுக்கு எங்க பொறுப்பு அமைச்சர் ஐ.பி.யின் ஆலோ சனையின் பேரில் மாவட்டத்திலுள்ள இரண்டு மாவட்டச் செயலாளர் களான தங்கத்தமிழ்ச்செல்வனும், கம்பம் இராமகிருஷ்ணனும் கட்சியை வலுவாக வளர்த்து வருகிறார்கள்.

அதன்மூலம் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் சூரியன் உதயமாகப் போவது உறுதி. தேனி பாராளு மன்றத் தொகுதியைப் பொறுத்த வரை தேனி மாவட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் அல்லது புதுமுகங்களில் ஒருவ ரைத்தான் வேட்பாளராக தலைமை அறிவிக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்போடு இருக்கிறோம்'' என்று எதிர்பார்ப்பை வெளிப்படுத்து கிறார்கள் உ.பி.க்கள்.

Advertisment

தேனியில் வேட்பாளர் தேர்வு திருப்தியாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

-சக்தி

tt