18-ஆவது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட வுள்ள பரபரப்பான சூழ்நிலையில் கட்சிகளுக்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. அதற்குள் தஞ்சை தொகுதி வேட்பாளர் யார் என்ற பேச்சுக்களும் அடிபடத் தொடங்கியுள்ளது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்) ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும்.

dd

இதுவரை வென்றவர்கள்

1952-ல் காங்கிரஸின் ஆர். வெங்கட்ராமன் இத்தொகுதியில் வென்றார். பின் காங்கிரஸ், தி.மு.க. என மாறி மாறி வென்றுகொண்டிருந்த தொகுதியில், 1977-ல் அ.தி.மு.க.வுக்கு மாறிய எஸ்.டி.சோமசுந்தரத்தால் அ.தி.மு.க வென்றது. 1996 முதல் தொடர்ச்சியாக தி.மு.க.வின் பழனிமாணிக்கமே வென்ற இத்தொகுதியில் 2014-ல் அ.தி.மு.க.வின் பரசுராமன் வென்றார். மீண்டும் 2019-ல் தி.மு.க.வின் பழனிமாணிக்கம் வசமே இத்தொகுதியை தஞ்சாவூர்க்காரர்கள் ஒப்படைத்தனர்.

இந்தத் தொகுதியில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., த.மா.கா., அ.ம.மு.க. என பல கட்சிகளும் காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றன. கட்சித் தலைமைகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இந்தத் தொகுதியைப் பெற பேசிக்கொண்டிருக் கிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் யாரெல்லாம் சீட்டுக்காகக் காத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்..

தற்போதைய எம்.பி.யும், 6-வது முறையாக எம்.பி.யாக இருப்பவருமான எஸ்.எஸ்.பழணிமாணிக்கம், மீண்டும் தனக்கே சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தொகுதிக்கு செலவு செய்யத் தயாராகவும் இருக்கிறார். அதே நேரத்தில், தனக்கு இல்லை என்றால் தன் தம்பி ராஜ்குமாருக்கு சீட் கேட்கும் முடிவில் இருக்கிறார். ஆனால் ராஜ்குமார் எனக்கு சீட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகக் கூறுகிறார்கள். அதனால் கட்சித் தலைமை தனக்கே சீட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் காத் திருக்கிறார் பழனிமாணிக்கம்.

Advertisment

இந்தமுறை தங்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று கலைஞர் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ள மாநகர துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாஜி ச.ம.உ. திருவோணம் மகேஷ் கிருஷ்ணசாமி, பட்டுக்கோட்டை பழஞ்சூர் செல்வம், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த வழக்கறிஞர் அருள்நம்பி இப்படி ஏராளமானவர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் மன்னார்குடி அரசுக் கல்லூரிப் பேரசிரியரும் லண்டன் தொழிலதிபரின் மனைவியுமான ராதிகா மணிமாறன், புதுமுகமான தனக்கு தான் சீட் கிடைக்கும் என்றும், எவ்வளவு செலவு செய்யவும் தயாராக உள்ளதாகவும் கூறி கிச்சன் கேபினட் மூலம் முயற்சி செய்துகொண்டி ருக்கிறார்.

தி.மு.க. உள்கட்சி பூசல்களைப் பயன்படுத்தி சில முறை வெற்றிபெற்ற அ.தி.மு.க.வில், தற்போது போட்டியிட்டால் எப்படி இருக்குமோ என்ற மனநிலை ஓடத் தொடங்கியுள்ளது. அதிலும் வைத்திலிங்கம் ஓ.பி.எஸ். அணியில் இருப்பதாலும், டெல்டாவில் கட்சி உடைந்துகிடப்பதாலும் சற்று தயக்கம் ஏற்பட்டிருந்தாலும்கூட, வைத்திலிங்கத்தின் வளர்ப்பாக இருந்து தற்போது அ.தி.மு.க.விலேயே தங்கிவிட்ட காந்தி, பகுதிச் செயலாளர் சரவணன், ஒரத்தநாடு மா.சேகர், தஞ்சை தெற்கு மா.செ. பட்டுக்கோட்டை மாஜி சி.வி.சேகர், காங்கிரஸ் கட்சியிலிருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த திருஞானசம்பந்தம் ஆகியோரும் சீட்டுக்காக முயற்சி செய்து வருகின்றனர். ஓ.பி.எஸ். அணியில் அறிவுடைநம்பியை வேட்பாள ராக்கலாமா என்று ஆலோசனை நடக்கிறது.

இதற்கிடையில் பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்துவிட்டால் ஓ.பி.எஸ். அணியின் ஆதரவும் கிடைக்கும், அடுத்து நம்ம இன மக்களும் இருக்கிறார்கள்... அதனால் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கூறி டி.டி.வி.தினகரனை தஞ்சை தொகுதியில் களமிறக்க அ.ம.மு.க. முயன்று வருகிறது. அ.ம.மு.க.வில் வழக்கறிஞர் வேலு கார்த்தியும் நம்பிக்கையோடு இருக்கிறார். அதே கூட்டணியில் பா.ஜ.க. வேட்பாளராக நான் தான் போட்டியிடுவேன், கூட்டணிக்குக் கொடுக்கக்கூடாது என்று கருப்பு முருகானந்தம் முயன்று வருகிறார்.

Advertisment

அதேபோல பா.ஜ.க சார்பில் பூண்டி வெங்கடேசனும் சீட்டுக்காக முயன்று வருகிறார். மேலும் த.மா.கா.வுக்கு சீட்டு ஒதுக்கினால் பட்டுக்கோட்டை மாஜி என்.ஆர்.ரெங்க ராஜனை வேட்பாளராக்க கட்சித் தலைமை முடிவுசெய்துள்ளது.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியானதுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் வழக்கமாக நிற்கும் தி.மு.கவிடமிருந்து காங்கிரஸ் கட்சி தஞ்சை தொகுதியைப் பெற்று தனக்கு வேட்பாளராகும் வாய்ப்பைத் தரவேண்டும் என்று கிருஷ்ணசாமி வாண்டையார் முயற்சிக்கிறார்.

இப்படி பல கட்சிகளிலும் வேட்பாளர்கள் யார் என்பது பற்றிய போட்டிகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், மக்களும் வேறொரு கணக்கோடு தேர்தலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

-இரா.பகத்சிங்

dd

திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம், தாராபுரம், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம் என இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்றத் தொகுதியாகத் திகழ்கிறது ஈரோடு. இங்கு ஏறக்குறைய 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

நெசவாளர்கள் கணிசமாக உள்ள இந்த ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில். சிட்டிங் எம்.பி.யாக இருப்பவர், உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்ற ம.தி. மு.க. கணேசமூர்த்தி. ஏற்கனவே 2014ல் அ.தி. மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் கணேசமூர்த்தி. ஆக இரண்டு முறை எம்.பி.யாக தொடர்ந்து இருப்பதால், தொகுதி மக்களிடம் நன்கு பரிட்சயம் கொண் டவராக இவர் இருக்கிறார். விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக போராடியவர் என்ப தால், அவர்கள் மத்தியில் கணேசமூர்த்திக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது. கணேச மூர்த்தி மீண்டும் ஒருமுறை இத்தொகுதியில் போட்டியிட சீட்டை எதிர்பார்க்கிறார்.

அமைப்பு ரீதியாக தாராபுரம், காங்கே யம், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு என இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு கூடுதலாகவே வாக்கு வாங்கி இருக்கிறது. ஈரோடு மேற்கு மற்றும் குமாரபாளையம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சம பலத்தோடு உள்ளன. இந்த நிலையில், இந்தமுறை ஈரோட்டை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கக்கூடாது என்கிற குரல் தி.மு.க.வினர் மத்தியில் வலுத்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து இங்கு சீட் வாங்க தி.மு.க. தரப்பில் இப்போதே பலரும் முண்டி யடிக்கின்றனர். குறிப்பாக, திருப்பூர் தி.மு.க. தெற்கு மா.செ.வான இல.பத்மநாபன், சுற்றுச் சூழல் அணி நிர்வாகியான கார்த்திகேய சிவசேனாதிபதி, இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் பிரகாஷ், ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு வாசகம், நெசவாளர் அணி எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம், முன்னாள் எம்.பி. கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், குமார பாளையம் ஒ.செ.யான வெப்படைசெல்வராஜ் ஆகியோர், சீட் ரேஸில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தொகுதியில் அதிக பலத்தோடு இருப்பவர்கள் கவுண் டர் சமூகத்தினர். அதற்கு அடுத்து பட்டியலின சமூகத்தினரும், முதலியார் சமூகத்தினரும் உள்ளனர். இவர்களையடுத்து வேட்டுவ கவுண்டர், வன்னியர், செட்டியார், நாடார் உள்ளிட்ட பிரிவினரும் கணிசமாக இருக்கின்றனர்.

இளைஞரணியைச் சேர்ந்தவர் களுக்கு வாய்ப்பு அதிகம் வழங்க வேண்டும் என்ற பெருவிருப்பம் அவர்கள் மத்தியில் இருக்கிறது. அதேபோல், தி.மு.க.வில் முதலியார் சமூகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் இல்லை என்று அவர்கள் தரப்பில் தொடர்ந்து குரல்கொடுத்து வரு கின்றனர். எனவே மாநில இளைஞ ரணி துணைச் செயலாளரான கே.ஈ.பிரகாஷ் அல்லது முதலியார் சமூகத்தைச் சேர்ந்த திருவாசகம், இந்த இருவரில் ஒருவருக்கே சீட் இருக்கும் என்ற நம்பிக்கை தி.மு.க. வினர் மத்தியில் நிலவிவருகிறது.

இதேபோல் அ.தி.மு.க. தரப் பிலும் கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, மொடக்குறிச்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான சரஸ்வதியின் மருமகனும் முன்னாள் திருச்செங் கோடு தொகுதி அ.தி.மு.க. எம்.பி. யும், தற்போதைய பா.ஜ.க. பிரமுக ருமான சௌந்தரத்தின் மகனுமான அசோக்குமார், தற்போது அ.தி.மு.க. வில் சீட்டை எதிர்பார்த்திருக்கிறார்.

இவர் அண்மையில் எடப் பாடியைச் சந்தித்து, "எனக்கு எம்.பி. சீட் கொடுங்க மாமா'’என்று கேட்டு, அதை உறுதிப்படுத்திக்கொண்டு, பா.ஜ.க.வுக்கு டாடா காண்பித்து விட்டு அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். இந்த ஆற்றல் அசோக்குமார் அ.தி.மு.க.வின் வேட்பாளராகப் போகிறார் என்ற டாக் அடிபடு வதால், தொகுதியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் குஷியாகியிருக்கிறார்கள். காரணம் வேறு யார் நின்றாலும் செலவு செய்வது மிகவும் கடினம் என்பதுதான். இவர் நூறு கோடி யானாலும் நான் செலவு செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

இதற்கிடையே, "எப்பா இந்த அசோக்குமாரை நம்பமுடியாது, நீங்க யாராவது நில்லுங்கள்' என முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.வி.ராமலிங்கத் திடம் எடப்பாடி கூறியதாகவும், அதற்கு ராமலிங்கம், "அண்ணா.... போதும்ணா... எனக்கு தேர்தல்ல நிக்கிற ஆசையே இல்லை...' என கும்பிடு போட்டதாகவும் சொல்கிறார்கள். எனவே அங்கே இலைத்தரப்பில் ஆற்றல் அசோக்தான் வேட்பாளர் என்பது ஏறத்தாழ உறுதியாகவிட்டது.

தனித்துக் களம்காணும் நாம் தமிழர் கட்சியோ, கார்மேகம் என்பவரை களத்தில் இறக்கியுள்ளது. பா.ஜ.க. தரப்பிலோ, அக்கட்சியின் சீனியர் நிர்வாகியான வக்கீல் பழனிச்சாமி பெயர் அடிபடுகிறது. மேலும் பா.ஜ.க. கூட்டணிக்குள் வந்திருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு தொகுதியை குறிவைத்திருக்கிறதாம். ஜி.கே.வாசனோ தங்கள் இளைஞரணிப் பிரமுகரான யுவராஜை இங்கு களமிறக்க நினைக்க... அவர் "நான் நிற்கவில்லை... என்னை விட்ருங்க'’என ஒதுங்கிக்கொண்டாராம். ஆகவே முன்னாள் எம்.எல்.ஏ.வான விடியல் சேகர் பெயரை பரிசீலித்து வருகிறாராம் வாசன்.

பலரும் பலவித எதிர்பார்ப்பில் வரிந்துகட்டுவதால், ஈரோடு சீட் ரேஸில், பரபரப்பாக புழுதி பறந்து கொண்டிருக்கிறது.

-ஜீவாதங்கவேல்

dd