ந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பழைய கோவில்களும் நாட்டை ஆண்ட மன்னர் களால் உருவாக்கப்பட்டன. அரசாங்க வருவாயை பெறுவதற்காகவே கோவில் களை தாங்களாகவே முன்வந்து வலிய நிறுவினர். ஆக, கோவில்களின் வருமானம் அரசாங்கத்தின் வருமானமாகும். அவ் வகையில் சாணக்கியர் காலத்திலேயே கோவில்கள் பொது நிறுவனங்களாக(Public Institutions) மாறிவிட்டன.

அர்த்த சாஸ்திரம் என்ற பொரு ளாதார நூலின் ஆசிரியர் சாணக்கியர் என்ற கௌடில்யர், சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்களைப் பற்றி கூறியது தற்சமயம் சிந்திக்கத்தக்கது. கோவில்களை தனியார் பக்தர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று அரசியல் முழக்கமாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முழங்கிவரும் வேளையில் குறிப்பிடத்தக்கது சாணக்கியரின் கூற்றாகும்.

ch

இவரது அர்த்த சாஸ்திரம், மனு ஸ்மிருதிக்கும், யக்ஞ வால்கீயா ஆகிய வற்றிற்கும் முன்பே எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது சந்திரகுப்தர் காலத்திற்கு முன்பு நந்த வம்சத்தின் இறுதி காலகட்டத்தில் மகத நாட்டை ஆண்ட அஜாத சத்ரு, அதாவது கி.மு. 494-462 காலத்தில் கௌடில்யர் அர்த்த சாஸ்திரம் எழுதியிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பகர்கின்றனர்.

Advertisment

இவரை அரசரை உருவாக்குபவர் (King maker) என்பர். அரசு நிர்வாகத்திலுள்ள நுட்பங்களையும், அரசர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரது கடமைகளையும், இராஜதந்திர முறைகளையும் எடுத்தியம்புவதில் சாணக்கியர் ஒரு மிகப்பெரிய மதி யூகி என்பர். ஒருமுறை கலைஞரை சாணக்கியர் என்று அழைக்கும்பொழுது, அவர் தன்னை "சாக்ரடீஸ்' என்று விளிப்பதில்தான் பெருமை கொள்வதாக கூறினார். கலைஞருக்கு சாணக்கியத் தனத்தில் விருப்பமில்லை. ஏனெனில் சாணக்கியம் என்பது அறமன்று, என்று கருதினார்.

1933-ல் பி. சிதம்பரம்பிள்ளை தனது "கோவில் நுழைவு உரிமை' (Right to Temple Entry) நூலில் காணப்படும் அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், எந்த அளவிற்கு சாணக்கியர் நேர்மையான பிராமணனாக இருந்தார் என்பதை அறிவிக்கும் சான்றாக உள்ளது என்று பாராட்டுகிறார்.

Advertisment

மேலும், அவர் அரசாங்கத்தின் வருமானத் திற்கு பல்வேறு வழிமுறைகளைக் கூறுகிறார்.

rrஇரவில் ஓர் இடத்தில் ஒரு கடவுள் சிலை யையோ, பலிபீடத்தையோ அல்லது துறவிகளுக்கான ஒரு புதிய இடத்தையே ஏற்படுத்தி, ஒரு கெட்ட "சகுனம்' (An Evil Omen) ஏற்பட்டுவிட்டது என்று கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி ஊர்வலங்கள், கூட்டங்கள். நடத்தி, தீமையிலிருந்து பேரழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அதிக நன்கொடைகள் சாமிக்குக் காணிக்கையாகப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறார்.

அரசனுடைய நிலைத்த வாழ்விற்கு பல்வேறு முறைகளில் வருமானத்தைப் பெருக்க சாணக்கியர் கூறுவதாவது:

1. முதலில் ஒரு பொய்யான பீதியை மக்களிடையே பரவவிட வேண்டும்.

அதாவது, ஒரு மரத்தில் கெட்ட ஆவி தோன்றியுள்ளது (An Evil Spirit has appearad on a tree) என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மன்னனைச் சார்ந்த ஒருவனை ஓரிடத்தில் மறைந்து இருக்கச் செய்து பல குரல்களில் பேய்ச் சத்தம் எழுப்ப ஏற்பாடு செய்யவேண்டும்.

எனவே, கோபங்கொண்ட பேயைச் சாந்தப்படுத்துவதற்கும், நாட்டை அமைதிக்கு கொண்டு வருவதற்கும், பேரழிவிலிருந்து நாட்டைக் காப்பதற்கும் மக்கள் தயாராக வேண்டும் என்று சாமியார்- மாறு வேடத்தில் இருக்கும் அரசர்களுடைய ஏவலாளிகள் மக்களிடையே பரப்புரை செய்யவேண்டும்.

மக்கள் தாராளமாக வழங்கும் அல்லது கடவுளர்களுக்குச் செலுத்தும் காணிக்கைகளால் கெட்ட ஆவி நாட்டைவிட்டு விரட்டப்படுவதாக ஒரு புறத்தில் கூறப்பட வேண்டும்.

அதே நேரத்தில் அரசனுடைய கருவூலம் விரைவாக நிரம்பி விடும். இதுவே, அரசின் வருமானம் பெருக்கச் செய்ய சாணக்கியரின் தந்திர உபதேசம் ஆகும்.

2. அடுத்து, புனித நீர் பல்வேறு தீமைகளைப் போக்கப் பயன்படும் என்று விளம்பரம் செய்து வசூல் செய்யவேண்டும்.

அரசனுடைய தோட்டத்தில் உள்ள புனித மரங்களின் காலந்தவறிய பூக்கள், பழங்கள் கடவுள் வருகையைக் குறிக்கின்றன என்று மக்களிடம் தெரிவிக்கவேண்டும். இதன்மூலம் மக்களிடையே பக்தி வெறியை அதிகரிக்கச் செய்யவேண்டும்.

இவ்வாறு பல்வேறு யுக்திகளைப் பயன் படுத்தி மூட நம்பிக்கைகளையும், பழக்க- வழக்கங் களையும் மக்களிடையே வளர்த்தெடுத்து நிலை பெறச் செய்யவேண்டும். இதன்மூலம் அரசாங்கத் தின் வருவாயைப் பெருக்க முடியும் என்று கூறுகிறார்.

3. மேலும், அவர்கூறும் மற்றொரு தந்திரம் பாம்பைப் பற்றியதாகும். இது இன்றளவும் காணப்படும் பாம்பு மோசடியாகும். பல தலையுள்ள பாம்பு என்ற விளம்பரப்படுத்தி பணத்திற்காக மக்களை ஏமாற்றுவதாகும்.

ஒரு பொந்தில் பசியால் மயக்கமடைந்த பாம்பைப் படுக்க வைத்துவிடவேண்டும். நகராமல் மயக்கத்தில் நிலைகொண்டிருக்கும் அப்பாம்பைப் போன்ற பல தலைகளை உடல் முழுவதும் வரைந்து பல ஓட்டைகள் மூலம் பார்க்கச் செய்து, பாம்பிற்குப் பல தலைகள் உள்ளன என மக்களை நம்பச் செய்வது. இதை நம்ப மறுக்கும் மக்களில் சிலரின்மீது மயக்க மருந்து கலக்கப்பட்ட நீரைத் தெளித்து மயக்கமடையச் செய்து விடுவர்.

பல தலை உள்ள நாகத்தை நம்ப மறுத்து கேள்வி கேட்கும் நபர், கடவுன் சாபத்திற்குப் பலியாகி உணர்ச்சியற்றவனான் என நம்பச் செய்வர்.

அதைப்போல் சாதி நீக்கம் செய்யப்பட்டவ னைப் பாம்பைவிட்டுக் கடிக்கச் செய்து விடுவர். பின்னர், அவனைப் பிழைக்கச் செய்ய பரிகாரங்கள் செய்யவேண்டும் எனக் காரணம்காட்டி பணம் வசூலிப்பர். ஆக, அனைத்து கோவில் வருமானங் களும் அரசனுடைய கருவூலத்தைச் சென்றடைய வேண்டும்.

அந்த அரசு வருமானத்தில் ஏதேனும் ஊழல் நடப்பதற்குக் காரணமாக இருந்தால், அவர்களை சாணக்கியர் காலத்தில் தூக்கிலிட்டனர் யாரேனும் என்பது முக்கியச் செய்தியாகும்.

அக்காலத்தில் கோவில்கள் என்பது அரசர்கள் வருமானம் பெறுவதற்கு நடத்தப்பட்ட நிறுவனங்களாகும்.

இதுவே "சாணக்கியன் காலத்திய கோவில் பண்பாடாகும்.