கோயில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் முக்கியமான கோயில்களில் ஒன்று காஞ்சிபுரம் ஏகாம்ப ரேஸ்வரர் கோயில். இந்த கோயிலின் செயல் அலுவலரான வேதமூர்த்தி, பெண் ஒருவரை பாலியல்ரீதியில் துன்புறுத்தும் சி.சி.டி.வி. வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களுக்கு முன்பு கோயில் கருவறையில் அர்ச்சகர் தேவநாதன், கோயிலுக்கு வரும் ஒரு பெண்ணிடம், பாலுறவில் ஈடுபட்டதை அவரே தன் செல்போன் கேமராவில் பதிவுசெய்திருந்தார். அந்த வீடியோ வெளியாகி தமி ழகத்தையே பரபரப்பாகியது.
பிரசித்திபெற்ற காஞ்சி புரம் ஏகாம்பரேஸ்வரர் திருக் கோயிலின் செயல் அலுவலர் வேதமூர்த்தி மீது கோயில் உண்டியல் முறைகேடு தொடர் பாக வழக்கொன்று இருக்கிறது. இந்நிலையில் அங்கு பணி யாற்றும் ஒரு பெண்ணிடம் பாலியல்ரீதியாக துன்புறுத்த லில் ஈடுபட்டதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஜனவரி 8-ஆம் தேதி பகல் வேளையில் அற நிலையத்துறையைச் சார்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள் ளது), ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளே அறநிலையத்துறை அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்தார். அந்த நேரத் தில் வேதமூர்த்தி, சாந்தியை பாலியல்ரீதியில் துன்புறுத்தி யுள்ளார்.
அவரது செயலால் மன வேதனையடைந்த சாந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். அப்போது கோயில் ஊழியர்கள் சாந்தி யைத் தடுத்துநிறுத்தியுள்ளனர். சற்று சமநிலைக்கு வந்த சாந்தி தன் கோபத்தின் எதிரொலி யாக செயல் அலுவலர் வேதமூர்த்தியை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதுதொடர்பாக அறநிலையத்துறை இணை ஆணையரான வான்மதியிடம் புகார் தெரிவித்துள்ளார் சாந்தி. ஆனால் இணை ஆணையரோ புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் உன் பெயர் கெட்டுவிடும் என்று சாந்தியை சமாதானப்படுத்தி அனுப்பி யுள்ளார்.
இந்த நிலையில் யார் மூலமோ 12 நாள் கழித்து இந்த சி.சி.டி.வி. வீடியோ வெளி யானது. வீடியோவில் வேத மூர்த்தி சாந்திக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதும் அந்த பெண் ஊழியர் அங்கி ருந்து பதற்றமாகச் செல்வதும் தெளிவாகத் தெரிகிறது,
தற்போது இணை ஆணையர் வான்மதி, பாதிக்கப்பட்ட சாந்தியையும் வேதமூர்த்தியையும் விசாரணை செய்துவருகின்றார். வேத மூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அவரிடம் கேட்டோம். "அந்த மாதிரி எந்த விஷயமும் இங்கு நடக்க வில்லை.’ முடிந்தால் செய்தி போட்டுக்கொள்'' என்று மிரட்டல்விடுக்கும் தோரணை யிலே பேசினார்.
வேலைசெய்யும் இடத் தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை வெளியே கொண்டுவந்தால் அவர்கள் உயரதிகாரிகளின் பழிவாங்கும் படலத்தில் சிக்குகிறார்கள். இதனால் தான் பல வேதமூர்த்திகளின் லீலைகள் இன்னும் வெளியே தெரிவதில்லை.