ர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டுகளில் 139 போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் மிகமுக்கியமாகப் பார்க்கவேண்டியது, பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த விவகாரத்தில் சிக்கிய 6 பேர் ஆசிரியர்களாகவே இருந்தனர்.

இந்நிலையில், இதே மாவட்டத்து பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது மாணவரின் அம்மாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், மாணவரின் அம்மாவின் செல்பேசி எண்ணை பெறுவதற்காக மாணவனை அடித்துள்ளதாகவும் குறிப்பிட்டு நக்கீரன் அலுவலகத்துக்கு ஆடியோப் பதிவுடன் கூடிய புகார் வந்திருந்தது. அந்த ஆடியோவை கேட்டு அதிர்ந்துபோனோம்.

a

அதில் மாணவரின் அம்மா, பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஒரு ஆசிரியையிடம் அதுகுறித்து விசாரிக்கும்போது, திருலோகசுந்தர் என்ற ஆசிரியரைப் பற்றி பேச்சு வரவும், “"மேடம் உங்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லணும். நீங்க யாருகிட்டயும் சொல்லக்கூடாது, அது என் உயிருக்கே ஆபத்தா முடியும். அதே திருலோகசுந்தர் ஆசிரியர் தான் என்னை தப்பாக அழைத்தார்'' என்று குறிப்பிடுகிறார்.

அந்த ஆடியோவில் சொல்லப்பட்ட ஆசிரியர் திருலோகசுந்தர், தர்மபுரியிலுள்ள இலக்கியம்பட்டி பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். அவரிடம் படித்த மாணவரின் தாயார் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கணவரை இழந்தவர் என்பதால் அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள பலமுறை முயன்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவரிடம் பேச வாய்ப்பில்லாததால் மாணவனை அடித்து மிரட்டி அம்மாவின் செல்பேசி எண்ணைப் பெற்று, தகாத வார்த்தைகளால் பேசி அழைத்துள்ளார். அதையடுத்து, "என் தம்பி பத்திரிகையில் பணிபுரிகிறான், அவனிடம் சொன்னால் நீ அவ்வளவுதான்'' என்று மிரட்டியபிறகு, அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிக்கே சென்றவர் களை, நுழைவாயிலிலேயே தடுத்து, சமாதானம் பேசி அனுப்பியுள்ளனர்.

Advertisment

பள்ளித் தலைமையாசிரியரிடம் பேசினோம். ஆடியோ, வீடியோ பதிவு எதுவும் செய்யவில்லை யென்று செல்போனை அவர்முன் வைத்தபிறகே பேசத்தொடங்கினார்.

"சார் அவனை பற்றி விசாரித்தீங்களா? எல்லோருமே சொல்லியிருப்பார்களே? அவன் அப்படித்தான். பள்ளி மாணவிகளுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்து அடிவாங்கியவன்தான் இந்த திருலோகசுந்தர். இதில் இவன் மட்டுமில்லை, ஒரு டீமே உள்ளது. இவங்களுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் இவங்க மேல போக்ஸோவெல்லாம் பதியாது. எது நடந்தாலும் மூடி மறைத்துவிடு வார்கள். இதை நான்தான் சொன்னேனென்று தெரிந்தால் என்னையே வேலையைவிட்டு தூக்கிடு வாங்க. அந்தளவிற்கு பவர்புல் டீம்'' என்றார்.

ss

Advertisment

"சரி, யார் அந்த டீம்?'' என விசாரிக்க, திருலோகசுந்தரிடமிருந்தே தொடங்கினோம். இவர் பத்தாண்டுகளுக்கு முன்பாக தொப்பூர் பள்ளியில் பணிபுரிந்துள்ளார். அந்த பள்ளியில் அப்போது பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருந்தவரிடம் விசாரித்தோம்... அப்போது 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அவ்வப்போது பாலியல் சீண்டல் செய்து ஒருநாள் ஆபாச வீடியோவை அந்த மாணவியிடம் காட்டியுள்ளான். உடனே மாணவி கத்தியுள்ளார். பிறகு அது பிரச்சனையாக வெடித்து காவல் நிலையம் வரை சென்று வழக்குப் போடாமலே காப்பாற்றியிருக் கிறார்கள். அதன்பிறகு தமனம்பட்டி பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். அங்கேயும் இதேபோல சில்மிஷம் செய்து ஊர் மக்களே கட்டிவைத்து அடித்துள்ளனர். பிறகு தர்மபுரி அரசியல் பிரமுகர் ஒருவர் வந்து காப்பாற்றியுள்ளார். அதன்பிறகு இலக்கம்பட்டிக்கு வந்தபிறகும் பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். இந்த திருலோகசுந்தருக்கு குணசேகரன் என்ற நண்பர். இவரும் அதகப்பாடி மற்றும் பாலக்கோடு பள்ளிகளில் பாலியல் விவகாரத்தில் சிக்கியவர் தான். ஆனால் இவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். காரணம், செந்தில்வேல் என்பவர் குணசேகரனுக்கு நண்பராம். இந்த செந்தில்வேலும் இதே கேஸ் தான். இவர் பணிபுரியும் பள்ளியில் இவர் பேச்சைக் கேட்காவிட்டால் யாரும் பணிபுரிய முடியாதாம். உடனே பணியிட மாற்றம் அவர்களுக்கு வந்துவிடுமாம்.

அந்தளவிற்கு எப்படி செல்வாக்கு வந்திருக்குமென விசாரித்தபோது தான், செந்தில்வேலுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் மாமா உறவுமுறை. செஞ்சி ராமச்சந்திரனும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் பங்காளிகளாம். இதனால் அன்பழகன், தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவரும் விசுவாசியுமான கல்வித்துறை இணை இயக்குனர் பொன்குமார் மூலமாக இந்த விவகாரத்தை முடித்துத் தரச்சொல்லி பேசினால் உடனடியாக உயரதிகாரிகள் சொல்வதைக் கேட்டு தர்மபுரி சி.இ.ஓ. நடவடிக்கை எடுப்பாராம். பாலியல் விவகாரங்களில் சிக்கும் இந்த நெட்வொர்க்கிலிருக்கும் ஆசிரியர்களை முழுக்க முழுக்க காப்பாற்றுவது இந்த அ.தி.மு.க. மாஜி தான் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

இப்படி குற்றம் செய்பவர்களை ஒன்றுசேர்ந்து காப்பாற்றிவிடுவதன் காரணம் வெறுமனே சொந்தபந்தம் என்பதால் மட்டுமல்ல, இங்குள்ள பள்ளித் தொடர்பை வைத்து வேறொரு விவகாரமும் நடப்பதாக ஆசிரியர்களே கிசுகிசுத்தனர்.

எனவே அரசு இவ்விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, தர்மபுரியிலுள்ள பள்ளிகள் அனைத்தையும் தனி டீம் அமைத்து, இங்குள்ள மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் குறைகளைக் கேட்டறிந் தால், இப்பகுதியில் நடக்கும் அனைத்து விவகாரங்களும் வெட்டவெளிச்சமாவதோடு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு பாதுகாப்பான சூழல் உருவாகும் என்கிறார்கள். ஆசிரியர்கள் என்ற போர்வையில் பாலியல் சேட்டைகளில் ஈடுபடும் கும்பல்களை அரசு களை யெடுக்கப் போகிறதா? வேடிக்கை பார்க்கப் போகிறதா?

-சே