கல்யாணமான ஒரு வருடத்தில் மருமகளிடம் துணை நடிகை விஜி, வரதட்சணை கேட்டுத் தொந்தரவு செய்வதாக நமக்கு புகார் வரவே, இதுகுறித்து விசாரித்தோம்.
திரைத்துறையில் கதாநாயகி கனவில் வந்து துணை நடிகையாக முடிந்துபோன நடிகை விஜி. விஜி, கன்னியாகுமரி மாவட்டம் வட்டக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையில் துணை நடிகையாக சில படங்களில் நடித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் தூத்துக்குடி பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நகை, மனை, பணம் என அத்தனையும் பிடுங்கிக்கொண்டு அவரை அடித்துவிரட்டியுள்ளார்.
பிறகு கொடுங்கையூர் கணேசன், வட்டக்கோட்டை வர்கீஸ், பூந்தமல்லி சிங்காரவேலன், சேலம் கண்ணன் என பல பேரிடம் பழக்கமாகி, அவர்களிடம் பல லட்சங்களை ஏமாற்றி யுள்ளார். இந்நிலையில் சென்னை கொடுங்கையூரில் தன் முதல் மகனுக்கு இடமும் வீடும் உள்ளதாகக் கூறி சென்னை யைச் சேர்ந்த காவல்துறையில் பணியாற்றும் நபரின் குடும்பத்தில் பெண் எடுத்தார். 11 லட்சம் ரொக்கம், 16 பவுன் நகை என அத்தனையும் பெற்றுக்கொண்டு, ஒரு வருடத்திற்குள் மீண்டும் வீட்டிலிருந்து பணம் வாங்கிக்கொடுக்கும்படி மருமகளை, விஜி டார்ச்சர் செய்துள்ளார்.
வீட்டிலிருந்து பணம் வாங்கி வரமுடியாதபோது, அந்தப் பெண்ணை ‘"என்னுடன் வா! அந்தப் பணத்தை நீயே சம்பாதிக்க வழிசெய்துகொடுப்பேன்''’ என கேவலமான முறையிலும் பேசியிருக் கிறார். இதனால் ஆத்திரமான அவரது மருமகள், விஜி மீது அம்பத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத் துள்ளார்.
இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்துவரும் சூழ்நிலையில், துணை நடிகை பேசிய ஆபாச வீடியோ, ஏமாற்றிய நபர்களிடம் "உன்னால் என்னை என்ன செய்ய முடியும்' எனப் பேசும் ஆடியோ போன்றவை வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து துணை நடிகை விஜியிடம் கேட்டபோது, “"இது எல்லாமே என் மீது கூறப்படும் அபாண்டமான குற்றச்சாட்டுகள். நான் யாரிடமும் முறைகேடான வழியில் பணமோ, நகையோ ஏமாற்றிப் பிடுங்கவில்லை. எனது சொத்துகள் எல்லாம் எனது உழைப்பால் சம்பாதிக்கப்பட்டவை. நான் மருமகளிடம் எந்த வரதட்சணையும் கேட்கவில்லை. எனது சொத்தைத்தான் அவர்கள் என்னிடமிருந்து எழுதிக் கேட்டனர். அதைத் தர மறுத்ததால் வரதட்சணை வழக்கில் என்னைச் சிக்கவைக்கப் பார்க்கின்றனர்''’ என்கிறார்.