மிழகத்தில், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் முதியோர்களிடம் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர் என்பதற்கான பிரத்யேக எண்ணைச் சமர்ப்பிக்கச் சொல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார்கள் கிளம்பியுள்ளன.

சேலம் தாதகாப்பட்டி பென்ஷன் லைன் வேலு தெரு, 54-வது கோட்டத்தில் வசிப்பவர் குணசேகரன் (67). ஆதரவற்ற இவர், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ், உதவித்தொகை கோரி, ஆன்லைன் மூலம் கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்திருந்தார். இவருடைய விண்ணப்பத்தை ஆய்வுசெய்த வருவாய் ஆய்வாளர் தசரதன், இவருக்குச் சொந்தமாக வீடு இருப்பதாக வும், மகள்கள் பொருளாதார உதவி செய்வதாகவும் வி.ஏ.ஓ. அளித்த அறிக்கையின் அடிப்படையில் குணசேகரனின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

ff

இதுதொடர்பாக நாம் பாதிக்கப்பட்ட குணசேகரனின் வீட்டிற்குச் சென்று பார்த்தோம்.

Advertisment

சிதிலமடைந்த சுவர்களும், ஓடுகள் பெயர்ந்த மேற்கூரையும், மழைநீர் பொத்துக்கொண்டு ஊற்றும் நிலையிலும் காட்சியளித்தது அவருடைய வீடு. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியை மட்டுமே நம்பியிருக்கும் வீட்டில் குணசேக ரன் ஒண்டிக்கட்டையாக வசிக் கிறார். குடிநீரை பாதுகாப்பாக சேமித்துவைக்கக்கூட பெரிய அளவில் குடங்களோ, பாத்தி ரங்களோ இல்லாமல் காலி பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமித்து வைத்திருந்தார்.

முதியோர் உதவித்தொகை பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து அவரிடம் பேசினோம்.

"நான் ஆரம்பத்தில் சைக்கிள் பழுதுபார்க்கும் வேலை செய்துவந்தேன். ஆஸ்துமா, இதய நோய் பிரச்சினைகள் காரணமாக சைக்கிள் யூடியூப்புக்கு காத்து அடிக்க முடியாமல் சிரமப்பட்டதால் அந்த வேலையையும் விட்டுவிட்டேன்.

Advertisment

என் சம்சாரம் செத்துப்போயி 25 வருஷம் ஆச்சுங்க. எனக்கு ரெண்டும் பொட்டப்புள்ளைங்க தான். திருமணமாகிச் சென்றுவிட்ட அவங்களும் எனக்குக் கொடுத்து உதவுற நிலைமையில இல்லீங்க. அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் நூறு, இருநூறு ரூபாயை வெச்சிக்கிட்டு மருந்து, மாத்திரைகள் வாங்கிக்குவேன். ரேஷன் கடையில் மாசம் 12 கிலோ அரிசி கிடைப்பதால் அதை வைத்து வயித்த கழுவிக்கிறேன்.

ss

இப்போது நான் குடியிருக்கும் இந்த 1000 சதுர அடி வீட்டில் பாகம் கேட்டு சகோதரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனால் வீட்டை யாரும் பராமரிப்பதில்லை.

முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப் பித்தபோது வி.ஏ.ஓ. கார்த்திக் என்பவர் நேரில் வந்து என்கிட்டயும், அக்கம்பக்கத்திலும் விசாரிச் சிட்டுப் போனாருங்க. அவர் எனக்கு உதவித்தொகை கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்திருப்பதாகச் சொன்னாரு. ஆனால் வருவாய் ஆய்வாளர் தசரதன், ஏதோ எதிர்பார்ப்பின்பேரில் என் விண்ணப்பத்தை ரத்து செஞ்சுட்டாரு. மறுபடியும் ஜமாபந்தி மூலமாக உதவித்தொகை கேட்டு மனு போட்டிருந்தேன். ஏதோ வறுமைக்கோடு நம்பர் இருக்குதுன்னும், அந்த நம்பர் கொடுக்காததால் தான் என் மனுவை ரத்து செய்ததாகவும் சொன் னார். என்னை மாதிரி ஏதுமில்லாத ஒண்டிக்கட்டை முதியோர்களுக்கு அரசுதானே துணை இருக் கணும்?'' என கண்ணீர் சிந்தினார் குணசேகரன்.

முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான விதிகள் குறித்து வருவாய்த்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். "இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் தமிழக அரசு மாதம் 1,200 ரூபாய் வழங்குகிறது. இந்த உதவியைப் பெறுவதற்கு 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருத்தல் வேண்டும். வாரிசு களால் பொருளாதார உதவியோ, வேறெந்த வழிகளி லும் வருமானம் பெறக்கூடியவராகவோ இருக்கக் கூடாது. வேலைசெய்து பிழைக்கும் உடல் திறனற்றவ ராக இருத்தல் வேண்டும். வீட்டின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவராக இருத்தல் வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர் என்ற பிரத்யேக எண் யாருக்கும் வழங்கப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.17 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப் படுகிறது. இந்தத் திட்டத்தின் காரணமாக, கடந்த ஓராண்டாக முதியோர் ஓய்வூதியத் தொகை திட்டத்தை தமிழக அரசு கிட்டத்தட்ட நிறுத்தி விட்டது. நிதிப் பற்றாக்குறை காரணமாக புதிதாக யாருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கப் படுவதில்லை. லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப் பங்கள் முதியோர் உதவித்தொகை கேட்டு குவிந்துகிடக்கின்றன'' என்கிறார்கள்.

இதையடுத்து நாம் சேலம் துயர் துடைப்புப் பிரிவு வட்டாட்சியர் மனோகரனிடம் கேட்டதற்கு, "முதியோர் உதவித்தொகை தொடர்பான கணினி மென்பொருளில், விண்ணப்பதாரர் வறுமைக்கோட் டிற்குக் கீழே வசிக்கிறார் என்பதற்கான பிரத்யேக எண் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது அப்படியொரு எண் தரப்படுவதில்லை. ஆனாலும் மென்பொருளில் இந்த நிரலை பூர்த்தி செய்தால் தான் விண்ணப்பத்தை கணக்கில் எடுத்துக்கொள் ளும். இந்தப் பிரச்சனையை அரசுதான் சரி செய்ய வேண்டும். குணசேகரனை மூன்றாவது முறையாக விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். சிறப்பு மனுவாக பரிந்துரை செய்கிறேன்'' என்றார்.

குடும்பத் தலைவிகளின் உரிமையைக் காப் பதில் கவனம் செலுத்தும் திராவிட மாடல் அரசு, ஆதரவற்ற முதியோர்களுக்கும் கரம்கொடுத்து துணை நிற்கவேண்டும்.