டிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த "மாஸ்டர்' பட பாணியில், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் நடந்த கொலை பதைபதைக்க வைக்கிறது. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில், அவனை கொடூரமாக அடித்துக்கொன்ற சீர்திருத்தப்பள்ளி அதிகாரிகள் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் பிரியாவிடம் பேசினோம். "என் பூர்வீகம் மதுரை. சமீபத்தில் என் கணவர் இறந்துட்டார். எங்களுக்கு 3 ஆண், 3 பெண் குழந்தைகள். மூத்த மகன் கோகுல்ஸ்ரீயைத் தான் கொடூரமா அடிச்சுக் கொன்னுட்டாங்க.

ff

Advertisment

கோகுல்ஸ்ரீ குன்றத்தூரில் ஒரு பேன்சி ஸ்டோரில் வேலை செய்துவந்தான். தாம்பரத்தை அடுத்த கன்னடபாளையம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கு அருகே உள்ள செட்டில் நான் தங்கியிருக்கிறேன். மற்ற குழந்தைகளை ஹாஸ்ட லி−ல் சேர்த்து படிக்க வைத்து வருகிறேன். போன டிசம்பர் 28ஆம் தேதி பொத்தேரியில் நண்பர்களைப் பார்க்கப் போன கோகுல்ஸ்ரீயை, 29ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்துட்டதா, 30ஆம் தேதி காலைல பாலுங்கற போலீஸ் போன்ல சொன்னார். பிறகு அவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைச்சுட்டாங்க. அதுக்கப்புறம் சாயந்திரம் 5 மணிக்கு சீர்திருத்தப் பள்ளியிலருந்து போன் போட்டு, "உன் மகன் பூரி, மோர் சாப்பிட்டதால் ஃபுட் பாய்சனாகி வலி−ப்பு வந்ததால் அவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க''ன்னு சொன்னார். அடுத்து சீரியஸா ஐ.சி.யூ.வுல இருக்குறதா சொன்னவங்க, கொஞ்ச நேரத்துலயே செத்துட்டதா சொல்லிட்டாங்க.

ff

Advertisment

இரவு 8 மணிக்கு நாங்க செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மார்ச்சுவரிக்கு போனப்ப, என் பையனைப் பார்க்கவிடல. என்னை ராத்திரி அங்க தங்கக்கூடாதுன்னு சொல்−லி, சாந்திங்கிறவரோட அக்கா வீட்டிற்கு கூட்டிட்டுப்போயி அங்க அடைச்சுவைச்சாங்க. செல்போனையும் பிடுங்கிட்டாங்க. மறுநாளில் மதியம் போல என்னை மார்ச்சுவரிக்கு சாந்தி கூட்டிட்டுப் போனாங்க. என் மகன் இறந்த நிலையில், அவனோட உடம்பு முழுக்க காயம் இருந்துச்சு. நடு மூக்கில், உதட்டில் கிழிஞ்சு இருந்துச்சு. சித்ரவதை செய்து அடிச்சுக் கொன்ன மாதிரி தெரிஞ்சது.

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரான சிவகுமார் என்னிடம், "கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்தால், என் மகன் இறந்ததற்குக் கிடைக்கும் நிவாரணம் கூட கிடைக்காதுன்னும், என்னோட மத்த பசங்களோட படிப்பை நிறுத்தி, கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்'னும் மிரட்டினார்.

பின்ன அங்கிருந்து தப்பிச்சு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் போய் புகார் மனு கொடுத்து, தற்கொலை பண்ணிப்பேன்னு சொன்ன பிறகு விஷயம் தெரிஞ்சுவந்த செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அதிகாரியும், மாவட்ட ஆட்சியரும் என் மனுவை வாங்கினாங்க. பிரேதப் பரிசோதனையில் என் மகனை சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

ff

அதுதொடர்பா 6 பேரை கைது பண்ணியிருக்காங்க. இதில் தொடர்புடைய அதிகாரிகள் இன்னும் சிலர் வெளிலதான் இருக்காங்க. அவங்களையும் தண்டிக்கணும்" என்றார் கதறியபடி.

இச்சம்பவத்தில் என்ன நடந்ததென்று புலனாய்வு செய்ததில், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு இரண்டாவது முறையாக திருட்டு வழக்கில் வந்துசேர்ந்த கோகுல்ஸ்ரீயை சூப்பரின்ட்டெண்ட் மோகன், ஹானஸ்ட்ராஜிடம் சொல்−லி கண்டிக்கும்படி கூறியிருக்கிறார். அதன்படி ஹானஸ்ட்ராஜ் கோகுல்ஸ்ரீயை அடிக்கும்போது வலி−தாங்காமல் அவரது கையை கோகுல்ஸ்ரீ கடித்திருக்கி றான். உடனே வெறிகொண்ட ஹானஸ்ட்ராஜ், மோகனிடம் கூற, துணை சூப்பரின்ட்டெண்ட் சந்திரபாபு, சரண்ராஜ், விஜயகுமார், வித்யாசாகர் ஆகியோர் சேர்ந்து, சிறுவனை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் மயங்கிவிழுந்து கோகுல்ஸ்ரீ இறந்திருக்கிறான். அவன் இறந்ததை உறுதிப்படுத்த, அவனின் கண்களில் மிளகாய்த்தூள் மற்றும் எலுமிச்சை சாறைப் பிழிந்துள்ளனர். சலனமில்லாததால் இறந்தது உறுதியாக, அதன் பின்னரே ஃபுட் பாய்சனென்று கதை கட்டியுள்ளனர். இதுகுறித்து ரகசிய ஆடியோவும் நமக்குக் கிடைத்துள்ளது.

dd

மக்கள் கண்காணிப்பக மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் கூறுகையில், "ஒருவர் கொலைக் குற்றமே செய்திருந்தாலும் அவரைத் துன்புறுத்தி கொடூரமாகக் கொலை செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர் சீர்திருத்தப் பள்ளி அதிகாரிகளான மோகன், சந்திரபாபு, சரண்ராஜ், விஜயகுமார், ஹானஸ்ட்ராஜ், வித்யாசாகரைத் தவிர்த்து, இதற்கு உடந்தையாக இருந்த பாலாஜி, கொலையை மறைக்க முயன்ற ஜெயராஜ், சாந்தி, சரஸ்வதி மற்றும் கோகுல்ஸ்ரீயின் அம்மாவை மிரட்டிய அதிகாரி சிவக்குமார் ஆகியோரையும் கைதுசெய்ய வேண்டும். ஃபுட் மேனேஜர் பாலாஜிக்கு எல்லாம் தெரியுமென்பதால், சம்பவம் நடந்ததற்கு அடுத்தநாளே அவர் செங்கல்பட்டிலி−ருந்து கெல்லீஸ் காப்பகத்திற்கு மாற்றப்பட்டார். அதேபோல், துறை அமைச்சர் கீதாஜீவனுக்கு இந்த விவகாரமே தெரியாமல் மறைத்திருக்கிறார்கள்'' என்றார்.