நினைவிருக்கிறதா... அந்த புகைப்படம்.
ஆப்பிரிக்க கண்டத்தின் பெரிய நாடாக இருந்து, பிரிட்டிஷாரால் தெற்கு சூடான், வடக்கு சூடான் என பிரித்தாளப்பட்டது. தெற்கை தேத்திவிட்ட பிரிட்டிஷார், வடக்கை வாட விட்டனர். அதன் விளைவு... வெள்ளையர்கள் வெளியேறிய பின்னும் வறுமை, பசி, பட்டினி என உள்நாட்டுக் கலவரம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்துவருகிறது.
1990-களில் "நியூயார்க் டைம்ஸ்' பத்தி ரிகைக்காக தென்னாப்பிரிக்க வெள்ளைக்கார போட்டோகிராபர் கெவின் கார்ட்டர் பல புகைப்படங்களை எடுத்தார். அதில் ஒரு புகைப்படம் உலகை அதிரச் செய்தது.
நடக்க சக்தியில்லாத, நல்ல உணவு கிடைக்காத ஒரு சிறுமி தரையில் ஊர்ந்து, ஊர்ந்து செல்வாள். அவளைவிட பெரிதான ஒரு பிணந்தின்னிக் கழுகு, அவளை கொத்தித் தின்ன... அவளின் பின்னாலே நிற்கும்.
அந்தப் புகைப்படத் தைப் பார்த்து உலகமே கலங்கிப்போனது. சூடா னின் பஞ்சம் உலகத்திற்கு தெரிய வந்தது. அத் துடன்... "அந்தக் குழந் தையை காப்பாற்ற முயற்சிக்காமல் கேமரா கோணம் பார்த்துக் கொண்டிருந்த கெவினும் இன்னொரு பிணந் தின்னிக் கழுகுதான்' என கடுமையான விமர்சனம் எழுந்தது. உலகின் சிறந்த புகைப்படத்திற்கான புலிட்சர் விருது அந்தப் புகைப்படத்திற்கு கிடைத்த போதும்... கடும் விமர்சனங்களால் 33 வயதில் தற்கொலை செய்துகொண்டார் கெவின்.
அந்தப் பசி -பஞ்சம் -கொடுமை இன்னும் தீர்ந்தபாடில்லை!
ஒருவேளை சோற்றுக்காக; தங்களை காக்கவேண்டிய சொந்த ராணுவத் தினரின் பாலியல் துன்புறுத்தலுக்கு இரையாகிக்கொண்டிருக்கிறார்கள் வடக்கு சூடான் பெண்கள். இந்தக் கொடுமையை "தி கார்டியன்' பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.
உணவு கையிருப்பிற்காக நாடு முழுவதும் உள்ள உணவு பதனிடும் தொழிற்சாலைகளில் மாட்டிறைச்சி பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வயதான பெற்றோர், சிறு குழந்தைகளின் பசியைப் போக்க, இந்த இறைச்சி தொழிற்சாலை யை முற்றுகையிடுகிறார்கள் பெண்கள். ஆனால், அங்கே காவலிருக்கும் ராணுவ வீரர்கள், அந்தப் பெண்களில் தங்களின் பாலியல் இச்சையைத் தீர்க் கும் பெண்களுக்கே இறைச்சி உணவு தருகிறார்கள்.
"எதிரிக்கும் கூட இந்த நிலைமை வரக் கூடாது; எங்களோட குழந்தைங்களின் பசியைத் தீர்க்க இதவிட்டா வேறு வழி தெரியல. ராணுவ வீரர்களோட இச்சைக்கு உடன்படலைன்னா... சித்ரவதை செய்வாங்க'' என தங்களின் வேதனை யைச் சொல்லியிருக்காங்க பாதிக்கப்பட்ட பெண்கள்.
தொடர் கலவரத்தால் வீட்டை விட்டு வெளியேறியவர்களின் வீடுகளில் புகுந்து அங்குள்ள சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்று விற்பனை செய்து, அந்தப் பணத்தில் குடும்பத்திற்கு தேவையான உணவைப் பெறு கிறார்கள். ஆனால்... இப்படி கைவிடப்பட்ட வீட்டுக்குள் நுழைவதற்கும், ராணுவ வீரர்களுடன் உறவுகொள்ளச் சம்மதிக்கும் பெண்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஏற்கனவே ஆப்பிரிக்க பெண்கள் ஈகஒபஞதஒந எனப்படும் பெண்ணுறுப்பின் பாலியல் உச்சமடையும் உறுப்பையும், பெண்ணுறுப்பின் உள்உதடுகளையும் "சம்பிரதாய சடங்கு' என்ற பெயரில் இழக்கிறார்கள்.
இந்தக் கொடுமை போதாதென்று... உணவுக்காக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் துயரமும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் வளர்ந்த நாடுகள் அதிரடி காட்டாதது வருத்தத்திற்குரியதே!
ஒவ்வொரு அரிசியிலும் "யாருக்கான உணவு' என பெயர் எழுதப்பட்டிருப்பதாகச் சொல் கிறார்கள்.
உணவு வீணாவதை நாம் தடுப்போம்; தவிர்ப்போம்!
பிறர் சாதம் நமக்கெதற்கு?!