astory

(20) பிரச்சினையை "பெருசா' ஆக்காதீங்க!

யற்கை உண்டாக்கிய அழகிற்கு ஈடானதோ, இணையானதோ எதுவுமே இல்லை.

உயிரினங்களில் பெண்பாலுக்கு மார்புகளையும், காம்புகளையும் இயற்கை கொடுத்திருப்பதே... கொடுப்பதோ... தான் பெற்ற குழந்தை குட்டிக்கு பாலூட்டத்தான்.

Advertisment

ஆனால் மார்பகங்கள் என்பது கவர்ச்சி வியாபாரத்தின் கல்லாப்பெட்டியாக ஆக்கப் பட்டுவிட்டது. இந்த தந்திர வலையில் வலியப்போய் சிக்கும் பெண்கள் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள்.

சீனாவைச் சேர்ந்த இளம்பெண் கோவா. இவருக்கு ரொம்பநாள் கவலை... தன் மார்பகங்கள் சிறிதாக இருப்பதாக! இதனால், தன் மார்பகங்களை பெரி தாக்கிக்கொள்ள மருத் துவமனை சென்றார். அவருக்கு'BREAST IMPLANTS' எனப்படும் மார்பக சிகிச்சை செய் யப்பட்டது.

'SILICONE ELASTOMER GEL' எனப்படும் சிலிகானில் செய்யப்பட்ட அரைக்கோள வடிவ பந்தை இதஆவில் வைத்து அணிந்து கொண்டால் மார்பகம் பெரிதாகத் தெரியும்.

Advertisment

ஆனால் நிரந்தரத் தீர்வாக இயற்கை யான மார்பைக் கீறி இந்த சிலிகான் அரைக்கோள வடிவ பந்தை உள்ளே வைத்து தைப்பார்கள். இதனால் இயற்கையாகவே மார்புகள் பெரிதாகத் தெரியும்.

கொஞ்சம் பெரிதாக இருந்தால் போதுமென்றால்... பெண்ணின் மார்புக் காம்பு வட்டத்தைச் சுற்றி கீறி, சிலிகானை உள்ளே வைப்பார்கள். இன்னும் கொஞ்சம் பெரிதாக வேண்டுமென்றால் மார்பின் அடிப்பாகத்தைக் கீறி, சிலிகானை உள்ளே வைத்து தைப்பார்கள்.

a

கோவாவுக்கு இந்த முறையில்தான் ஆபரேஷன் செய்து மார்பை பெரிதாக்கி னார்கள். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் செய்யப்பட்ட இந்த ஆபரேஷன், ஆபரே ஷன் தியேட்டரில் இருந்த யாரோ ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு, சில தினங்களுக்கு முன்... அது பரபரப்பாக பரவிவருகிறது.

இதனால் அதிர்ச்சியான அந்தப் பெண், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

மார்பகங்களை பெரிதாக்கும் இப்படிப்பட்ட ஆபரேஷன்களால் மற்றவர்கள் கண்களுக்கு மார்பழகியாகத் தெரியலாம், ஆனா இந்த ஆபரேஷன் செய்துகொண்டவர்களுக்கு ஆரோக்கியம் கெடவே செய்கிறது.

உதாரணத்திற்கு... ஹாலிவுட் பிரபலம் பமீலா ஆண்டர்ஸனை எடுத்துக்கொள் வோம். நடித்து பிரபலமானதை விட மார்பகங்களை பெரிதுபடுத்திக்கொள்ளும் ஆபரேஷன் மூலமாக உலகப் புகழடைந்தவர் பமீலா ஆண்டர்ஸன். மிகப்பெரிதான மார்பகங்கள் வேண்டும் என அவர் விரும்பியதால்... பமீலாவின் மார்பகங்களின் அடிப்பாகத்தைக் கீறி சிலிகான் அரை வட்ட பந்துகள் பொருத்தப்பட்டது. இதன் மூலம் பமீலாவின் மார்பு சுற்றளவு '34 உ' அளவில் பெரிதானது.

a

இது பமீலா மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பை அதிகப்படுத்தியது. இதனால் தன் மார்புகளை இன்னும் பெரிதுபடுத்த விரும்பி, மீண்டும் ஒருமுறை ஆபரேஷன் செய்தார். இதனால் பமீலாவின் மார்புச் சுற்றளவு '34 உஉ' ஆனது.

பெரிய மார்புகளால் 40 வயது வரைக் கும் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நாற்பது வயது தாண்டிய பிறகு...

மார்பகங்களின் எடையைத் தாங்க முடியாமல் தோள்பட்டை மற்றும் முதுகு எலும்புகள் தளர்ச்சியடைந்தன. இதனால் கடும் முதுகுவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் பமீலா.

இருக்கிறதை விட்டுட்டு பெருக்குற துக்கு ஆசைப்படுறதவிட...

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்!

as