அரசியல்ல "இது'வுமா சகஜம்?!
சமீபகாலமாக இந்திய அரசியல் சில சுயநல அரசியல்வாதிகளின் அற்பச்செயலால் தரங்கெட்டுக் கிடக்கிறது. அதற்கு இன்றைய உதாரணம் பிரஜ்வால் ரேவண்ணா என்கிற கர்நாடக மாநில ஹசன் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்.
பெண்கள் மீது அவர் நடத்தியதாகக் கூறப்படும் பா-யல் தாக்குதல்கள் மிகுந்த அருவருப்பை ஏற்படுத்தியிருக்கிறது. "கவுடாவின் இமேஜையே கவுடா' என்பது போல, முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்து கௌரவத்துக்கே பங்கம் சேர்த்திருக்கிறார் கவுடாவின் பேரனான பிரஜ்வால்.
"புடிச்சி உள்ள போடுங்க சார்!'
புடிச்சி உள்ள போடமுடியாத ஒரு சர்வாதிகாரி மீது ஒரு இளம்பெண் சுமத்தியிருக்கும் விநோதமான செக்ஸ் குற்றச்சாட்டு உலக அரங்கில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அரசியல் கட்சிகளின் பயிற்சிப் பட்டறையில்... "மகளிரணியினரே; இளம்பெண்கள் பாசறையினரே' என கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் பேசுவதை கேட்டிருப்பீர்கள்.
"சுகம் தரவிருக்கும் கன்னிப் பெண்கள் அணியினரே; மசாஜ் செய்யவிருக்கும் கன்னிப் பெண்கள் அணியினரே; ஆடல்#பாடல் நடத்தவிருக்கும் கன்னிப் பெண்கள் அணியினரே' என பேசுவதை கேட்டிருக்கிறீர்களா? கேட்டிருக்கமாட்டீர்கள்.
அதனால்... வடகொரியாவி-ருந்து தப்பித்து, அமெரிக்காவில் வசித்துவரும் இளம்பெண்ணான யோன்மி பார்க் சொல்வதைக் கேளுங்கள்.
""வடகொரியாவின் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் ஒவ்வொரு வருஷமும், இருபத்தைந்து கன்னிப் பெண்களை தேர்வுசெய்கிறார். இந்தக் கன்னிப்பெண்கள் "உல்லாச மகளிரணி' என அழைக்கப்படுறார்கள். அதிபரின் விசேஷ படையினர் நாடு முழுக்க உள்ள பள்ளிக்கூடங்களில் நுழைந்து, அழகிய பெண்களை தேர்வு செய்வார்கள். அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்படும். அதில் கன்னித்திரை இல்லாத பெண்களை விட்டுவிட்டு; வெளிநாட்டுக்குத் தப்பிப்போனவர்களின் குடும்பத்து பெண்கள் இருந்தால் அந்தப் பெண்களையும் விட்டுவிட்டு, மீதமுள்ள பெண்கள் தலைநகரான பியாங்யாங் நகரத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். நாடு முழுக்கவிருந்து தேர்வு செய்யப்பட்ட கன்னிப்பெண்களில், அதிபர் கிம் ஜாங் உன்னின் நேரடிப் பார்வையில் 25 பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
"உல்லாச மகளிரணி' என்று தேர்வு செய்யப்படும் இவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள்.
1. அதிபருக்கு மசாஜ் செய்யும் குழுவினர்
2. அதிபர் உள்ளிட்ட பெரிய அதிகாரிகளை மகிழ்விக்க ஆடல் #பாடல் நிகழ்த்தும் அணியினர்
3. அதிபர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு உடல்ரீதியான தேவைகளை நிறைவேற்றும் அணியினர்
இப்படி மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டதும், எப்படியெல்லாம் அதிபரை குஷிப்படுத்த வேண்டும் என பயிற்சிப் பட்டறை நடத்தப்படும். பயிற்சிக்குப் பின் இந்தச் சேவைகளைச் செய்ய வேண்டும்.
இப்படியாக ஒவ்வொரு ஆண்டும், 25 பெண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். டீன்ஏஜின் இறுதியி-ருந்து இருபது வயதுகளின் மத்தியான 25,26 வயதுவரை அதிபருக்கு செக்ஸ் சர்வீஸ் செய்யும் இந்தப் பெண்கள், அதன்பின், அதிபரின் மாளிகை பாதுகாவலர்களையோ அல்லது ஊழியர்களையோ திருமணம் செய்துகொள்கிறார்கள். சிலர் சொந்த ஊருக்கும் சென்று விடுகிறார்கள்.
""என் குடும்பத்தின் அரசியல் பின்னணியால் நான் நாட்டி-ருந்தே தப்பித்து வந்துவிட்டேன்'' #இப்படிச் சொல்-யிருக்கிறார் யோன்மி பார்க்.