ந்தியாவிலுள்ள மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையில் மருத்துவ வசதியில் எந்தெந்த மாநிலங்கள் எந்த இடங்களில் இருக்கின்றன என நிதி ஆயோக் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் நான்காவது முறையாக தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

nn

Advertisment

கேரளம் முதலிடத்தையும், தெலுங்கானா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. அந்தப் பட்டியலில் கிட்டத்தட்ட கடைசிக்கு நகர்ந்துள்ளது உத்தரப்பிரதேசம். தேர்தலை முன்னிட்டு, உ.பி.யை தேவலோகம் எனவும் அங்கே கிடைக்காத வசதியே இல்லையென்பதுபோலவும் மோடியும் யோகியும் புகழ்ந்துகொண்டி ருக்க, நிதி ஆயோக் வெளி யிட்டுள்ள பட்டியல் அவர்கள் முகத்துக்கு நேராக ஏளனச் சிரிப்பு சிரித்திருக்கிறது. போதாதா? எதிர்க்கட்சிகள் அதைப் பிடித்துக்கொண்டு வெளுத்துவாங்குகின்றன.

கஃபீல்கான் பாவம் சும்மா விடுமா!

bb

Advertisment

த்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதாதேவி, அரசுப் பள்ளியொன்றில் சமையலராக டிசம்பர் 13-ஆம் தேதி சேர்ந்தார். சேர்ந்த சில நாட்களிலேயே உயர்சாதி மாணவர்கள் சிலர் சுனிதாதேவியின் சாதியைக் காரணம்காட்டி சாப்பிட மறுக்க, அரசு அதிகாரி ஒருவர் அவரது பணி நியமனத்தில் குற்றம்கூறி அவரை வேலையைவிட்டு நீக்கியிருக்கிறார். விஷயம் தேசிய அளவில் கவனம்பெற்றதும் ஆம் ஆத்மி கட்சியின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கவுதம், "சுனிதா டெல்லி வந்தால் அவருக்கு டெல்லி அரசு வேலை தரும்'' என்று அறிவித்திருக் கிறார்.

சுனிதாவுக்குத் வழங்கப்படவேண்டியது வேலையில்லை! நீதி!

2015-ல் பிரான்சில் நபியைக் குறித்த கார்ட்டூன் வெளியிட்டதற்காக சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவல கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது முதல், தீவிரவாதக் கருத்துவடை யவர்களை அந்நாட்டு அரசு கண்காணித்துவருகிறது. சமீபத்தில் பிரான்சின் ப்யூவைஸ் நகரில் அமைந்துள்ள மசூதியில் பேசிய உள்ளூர் இமாம், கிறித்துவர்கள், யூதர்கள், ஒருபால் புணர்ச்சியாளர்களுக்கு எதிரான தீவிரவாதக் கருத்துகளை பிரச்சாரம் செய்திருக்கிறார். இதையடுத்து பிரான்சு அரசு அந்த மசூதியை 6 மாதங்களுக்கு மூடும்படி உத்தரவிட்டுள்ளது. இதற்கெதிராக அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

மதம், அபின் என்றார் மார்க்ஸ்.

bb

த்தரப்பிரதேச மாநிலம் கேரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி விவசாயிகள் மீது கார் ஏறியதில் நான்கு பேர் பலியாகினர். நடந்தது விபத்தல்ல... திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைமுயற்சியென சிறப்பு விசாரணைக் குழுவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பிரதான சாட்சியாளர் தேஜேந்தர் சிங், "கேரியில் விபத்தை ஏற்படுத்தியவர்கள், என்னை எந்த நேரத்திலும் கொலை செய்யலாம். உச்ச நீதிமன்றம் எனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் ருத்ரப்பூர் எஸ்.எஸ்.பி.யோ நீதிமன்றத்துக்கு அழைப்பாணை வரும் தினங்களில் மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியும் என்கிறார்'' என குற்றம்சாட்டுகிறார். தேஜேந்தருக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்குவது குறித்து உ.பி. அரசாங்கம்தான் முடிவெடுக்கவேண்டும் என்கிறது காவல்துறை.

சாட்சியைப் பாதுகாப்பதா? அமைச்சர் மகனோட எதிர்காலத்தைப் பாதுகாப்பதா?

bb

லகின் மிக நீளமான கடற்கரைகள் பட்டியலில் இரண்டாவதாக வருவது சென்னையின் மெரினா பீச். கடற்கரையைப் பார்த்தால் அதில் யாருக்கும் கால் நனைக்கத் தோன்றும். ஆனால் நீண்ட மணல்வெளி யைத் தாண்டி கடலருகில் செல்வது மாற்றுத்திறனாளிகளுக்கு மிகச் சிரமமான ஒன்று. இந்நிலையில் சென்னை மெரினா பீச்சில் மாற்றுத்திறனாளிகள் கடலருகே சென்று அலையில் கால்நனைக்கும் வகையில் மணல்வெளியில் தற்காலிக பாதையொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வந்து குதூகலித்து மகிழ்ந்தனர். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று வரும் ஜனவரி 17 வரை இந்த பாதை நீடிக்குமென மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு, இந்தப் பாதையை நிரந்தரப் பாதையாக்குவோம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்!

மனம் நனையும் அளவு ஈரம் சுரக்கட்டும்.

து அமெரிக்காவின் மிக்சிகன் மாநில விவகாரம். டெட்ராய்ட் விலங்குகள் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஒருவர் வேனில் கிளிக்கூண்டுகளுடன் வந்து இறங்கியிருக்கிறார். அதில் நாலைந்து கூண்டுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள். அதிகாரிகள் என்ன விவரம் என கேட்க, "எனது தந்தை இலேசான மனநலக் கோளாறுடையவர். கிளி வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால் அவை மிகவேகமாக இனப்பெருக்கம் செய்து நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டன. செலவுசெய்து கட்டுப்படியாகவில்லை. வாங்கிக்கொள்ளுங்கள்'' என்றிருக்கிறார். நாலைந்து கூண்டுகளுக்குள் மூச்சுத் திணறியபடி 834 கிளிகள். கிளிகளைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அந்த நபரை விசாரித்து வருவதோடு, மிக்சிகன் மாகாண மக்களிடம், "கிளி வளர்க்கிறீங்களா... இலவசமா தர்றோம்!'' என கூவிக் கூவி அழைக்கிறதாம்.

கிளி கிலியான கதை!

-நாடோடி