ன்றைய சூழ்நிலையில் பிக்பாக்கெட் திருடர்களுக்கான வெளி குறைந்துபோய்விட்டது. இதனால் நவீன தொழில்நுட்பங்களுக்கு பழகிக் கொண்டு ஆன்லைன் திருட்டில் ஈடுபடுபவர்கள் பெருகிவருகிறார்கள். இணைய தளத்தில் நம்மைப் பற்றிய தகவல்கள் நம்மையறியாமலே சிதறிக் கிடக்கின்றன. அதைப் பயன்படுத்தி அபிஷேக்பச்சன், தோனி உள்ளிட்ட பிரபலங்களின் ஜி.எஸ்.டி. எண்ணைத் தேடியெடுத்தனர்.

ee

இந்த எண்ணில் முதல் இரு எண்கள் எந்த மாநிலம் என்பதையும், பின்னால் வரும் எண்கள் பான்கார்டு எண் களாகவும் இருக்கும். அத்தோடு இவர்கள் இருவரின் பிறந்த தினத்தையும் இணைய தளத் திலே தேடியெடுத்துள்ளனர். அவற்றைப் பயன்படுத்தி போலி பான்கார்டு, ஆதார் கார்டு பெற்றுள்ளனர். பின் இவற்றை வைத்து இந்தக் கும்பல் அபிஷேக், தோனி அப்ளை செய்வதுபோல் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கிரெடிட் கார்டுகளை ஒன் கார்டு என்று நிறுவனத் திடம் பெற்றுள்ளனர். பின் இந்தத் தொகையை அவர் கள் செலவழிக்க, ஆன்லைன் பர்ச்சேஸ் செய்துள்ள னர். அனைத்தும் ஒரே கணினியிலிருந்து பர்ச்சேஸ் செய்யப்படவே, கிரெடிட் கார்டு நிறுவனம் சந்தேக மடைந்து போலீஸை நாட, இப்போது இந்தக் கும்பல் சிறையில் இருக்கிறது. மொபைலில் ஒவ்வொரு செய லியும் நமது அந்தரங்க விவரங்களைத்தான் முதலில் சேகரிக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள் ளுங்கள். இன்பர்மேஷன் டெக்னாலஜி படிச் சுட்டுத் திருடுறீங்களேப்பா!

உ.பி.யையே உலுக்கிய கொலை வழக்குகளில் ஒன்று ஹாத்ராஸ் கொலை வழக்கு. 2020, செப்டம்பர் 14-ல் உயர்சாதியைச் சேர்ந்த இளைஞர்களால் கூட்டுப் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார் தலித் பெண். இதில் பலத்த காயமடைந்த இவர் சிலநாள் சிகிச்சைக்குப் பின் இறந்தார். இவர் இறக்கும்வரை கூட்டுப் பலாத்காரம் நடந்ததையே மறைத்த காவல்துறை, இறந்ததும் பெற்றோரின் அனுமதியைக்கூட பெறாமல் உடலை எரித்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் குறித்து எழுதச்செல்லும்போதுதான் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கைதுசெய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் தள்ளப்பட்டார். இந்த வழக்கை ஹாத்ராஸ் சிறப்பு நீதிமன்றம் விசாரித்துவந்தது. இந்த வழக்கில் பிரதான குற்றவாளிக்கு மட்டும் ஆயுள்தண்டனை வழங்கிய நீதிமன்றம் மற்ற மூவரையும் விடுதலை செய்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவரான டோலி சர்மா, “"காவல்துறையும் அரசும் பெரிதும் அலட்சியத்துடன் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்டன. சாட்சிகள், ஆதாரங்கள் மேலிருந்து தரப்பட்ட அழுத்தத்தால் சீர்குலைக்கப்பட்டன. அரசுத் தரப்பு வழக்கைக் கையாண்டவிதம்தான் இவ்வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் விடுதலைக்குக் காரணம்''’என குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதான் பா.ஜ.க. பெண்களைப் பாதுகாக்கிற லட்சணமா?

Advertisment

dd

ந்திய மருந்துப் பொருள் நிறுவனங்களுக்கு இது கெட்ட காலம். கடந்த வருடம் உஸ் பெகிஸ்தானில் தரமற்ற மருந்துப் பொருட்களால் உருவாக்கப் பட்ட இருமல் சிரப்பைப் பயன் படுத்தியதால் 18 குழந்தைகள் இறந்து போயினர். இதனை நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோ டெக் நிறுவனம் தயாரித் திருந்தது. இதை யடுத்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்திருந் தது. இந்நிறு வனத்தின் மூன்று பணி யாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரு இயக்குனர்கள் தலைமறைவாகியுள்ளனர். நொய்டா காவல் கூடுதல் இணை ஆணையாள ரான ராஜீவ் தீக்சித், “மரியான் பயோடெக்கோடு தொடர்புடைய மூன்று நபர்கள் கைதுசெய்யப் பட்டுள்ளனர். இவர்கள் போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 22 மருந்துகள் தர மற்றவையாக இருந்ததாக (கலப்படம்) அதி காரிகள் உறுதிசெய்துள்ளனர். இன்னொருபுறம் உலக சுகாதார நிறுவனம் உஸ்பெகிஸ்தானில் கண்டறியப்பட்ட இரண்டு கலப்பட மருந்துகள் குறித்து உலகளவில் எச்சரிக்கை செய்துள்ளது. காம்பியாவில் 70 குழந்தைகள் இறந்த விவகாரத்திலும் மெய்டன் மருந்து நிறுவனத்தின் தரமற்ற மருந்தே காரணமென அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்திய மருந்துன்னாலே உலக நாடுகள் இளக்காரமா பார்க்க ஆரம்பிச்சுருக்கு. சர்வதேச அளவில் மானம் போயிடுச்சே!

Advertisment

dd

காஷ்மீரின் வடபகுதியிலுள்ள குப்வாராவைச் சேர்ந்த 33 வயது அப்துல் ரஷீத் தர்லிரின் மரணம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ராணுவத்தால் டிசம்பர் 15-ல் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட தர், திரும்ப வரவேயில்லை. 75 நாட்களுக்குப் பிறகு காட்டுக்குள் அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட, அவரது குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தனை நாள் மௌனமாயிருந்த ராணுவம், தர் அப்போதே கஸ்டடியிலிருந்து தப்பியோடிவிட்டார் எனச் சொல்கிறது. ஆனால் அந்தக் குடும்பத்தினரோ, "அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வாரத்திலே அவர் உயிருடனில்லை என்பது தெரியும். நாகரிகமாக அடக்கம் செய்ய அவரது உடலை எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை'' என்கின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். ராணுவ விசாரணைன்னா மரணம்னு அர்த்தம்போல!