2018-ல் கனடாவில் படித்து விட்டுத் திரும்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி சோபியா, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். அதே விமா னத்தில் அப்போதைய பா.ஜ. தலைவ ராக இருந்த தமிழிசையும் பயணித்தார்.

bee

"பாசிச பா.ஜ.க. ஒழிக' என சோபியா தமிழிசை முன்பாக கோஷம் எழுப்ப, தூத்துக்குடியிலுள்ள புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு சோபியாவும் அவளது தந்தையும் அழைத்துச் செல்லப்பட்டு இரவு வரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத் தப்பட்டனர். இதற்குக் காரணமான போலீஸ்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த ஆணையம், போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ள னர் என்றதுடன், தமிழக அரசு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. சோபியா இப்ப ஹேப்பியா!

த்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு 60 கிலோ தங்கம் தொழிலதிபர் ஒருவரால் கொடையளிக்கப்பட் டுள்ளது. மோடி வெற்றிபெற்ற வாரணாசி தொகுதியிலுள்ள இந்தக் கோவில் சமீபத்தில் தான் புனரமைக்கப்பட்டது. 60 கிலோ தங்கத்தில் 37 கிலோ மோடியின் தாயாரின் உடல் எடைக்கேற்ப அவரது நீளாயுளுக்கும் உடல்நலத்துக்குமாக, தொழிலதிபர் ஒருவரால் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தங்கத்தைக் கொண்டு கோபுரக் குவிமாடம், கருவறை உள்சுவர்களை அலங்கரித்துள்ளது கோவில் நிர்வாகம். பெயரை வெளிப் படுத்திக்கொள்ள விரும்பாத அந்தத் தொழிலதிபர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவராம்! இந்தக் கொடையால் கோவிலுக்கு 60 கிலோ தங்கம் லாபம்! பதிலுக்கு அந்தத் தொழிலதிபர் பிரதமரிடமிருந்து என்ன கைம்மாறு எதிர்பார்க்கிறாரோ அவ்வளவு இந்திய குடிமக்களுக்கு நட்டம்! அந்த தங்கமகன் யாராயிருக்கும்?

Advertisment

தேர்தலுக்கு முன்பாகவே யோகி அமைச்சரவையிலிருந்த சுவாமிபிரசாத் மௌரியா சமாஜ்வாதி கட்சிக்கு வந்துவிட்டார். தற்போது குஷிநகர் மாவட்டத்தில் பஸில்நகர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளரா கப் போட்டியிடுகிறார். மௌரியாவை எதிர்த்து பா.ஜ.க. சுரேந்திர குஷ்வாகா வை நிறுத்தியிருக்கிறது. மௌரியா கட்சிமாறியதும் அவரது மகள் சங்க மித்ராவை கட்சி கேள்விக்குறியாய்ப் பார்க்க, "அப்பா எப்படியோ நான் பா.ஜ.க.வில்தான் இருக்கிறேன்' என்று கூறிவிட்டார். ஆனால் தற்போது, ஜவுரா முகுலி கிராமத்தில் தனது தந்தைக்காக சைக்கிள் சின்னத்தில் வாக் களிக்குமாறு சங்கமித்ரா பிரச்சாரம் செய்ய, இதைக் கவனித்த பா.ஜ.க.வினர் தலைமைக்கு புகாரளித்துவிட்டனர். இந்த விவ காரத்தில் நிச்சயம் கட்சி நடவடிக்கை இருக்குமென்கிறார்கள் உத்தர பிரதேசத்துக்காரர்கள். தானாடா விட்டாலும் சதையாடுமல்லவா?

மீபத்தில் சென்னை நதிகள் புதுப்பித்தல் அமைப்பின் 43-வது கூட்டம் நடைபெற்றது. அதில் சென்னை யின் பிரத்யேக அடையாளங்களில் ஒன்றான, அடையாறு தொல்காப்பியப் பூங்கா, உயிர்ப்பூங்காவை அடுத்த பத்தாண்டுகளுக்கு ஏற்றவாறு மறு வடிவமைப்புச் செய்வது பற்றி திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார உதவிகளை தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த பூங்கா சென்னை மக்கள் இயற்கையைப் பற்றி அறிந்துகொள்ள வும், நகர்ப்புற சதுப்புநிலத்தின் தன்மையையும் அதன் பயனையும் புரிந்துகொண்டு செயல்படவும், நீடித்த பல்லுயிரிய மறுவள ஆதாரங்களை பொதுவாக அறிந்துகொள்ளவும், குறிப்பிட்ட சிலவகை செடிகளை நட்டுவளர்க்கவும் ஏற்ற வகையில் திட்டமிட்டு அமைக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பூங்கான்னாலே உயிர்ப்பான இடம்தானே!

Advertisment

bb

ஷ்யாவிடம் அடிமேல் அடி வாங்கிக்கொண்டிருக்கிறது உக்ரைன். தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்யப் படை முன்னேறிக்கொண்டிருக்கிறது. உக்ரைனும் தீரமாகத் தாக்குப் பிடித்து போரா டிக்கொண்டிருக்கிறது. கீவை நோக்கி முன்னே றிய ரஷ்யப் படைவீரர் ஒருவர் உக்ரைனியர்களிடம் மாட்டிக் கொள்ள, சரணடைந்த அவருக்கு உக்ரைன் மக்கள் தேநீரும் உணவும் வழங்கியிருக்கின்றனர். ஒரு பெண் அந்த ரஷ்ய வீரரின் தாயின் எண் ணைக் கேட்டு போன் போட்டு, தாயிடம் அவரைப் பேசவைக்க ஆக்கிரமிக்க வந்த தன்னிடம் காட்டப் பட்ட அன்பைத் தாளமாட்டாமல் நெகிழ்ந்துபோய் அழுதிருக்கிறார் அந்த ரஷ்ய வீரர். ஆக்கிரமிக்க வரு பவனிடம் வஞ்சமும் ஆக்கிர மிப்புக்கு உள்ளாகுபவரிடம் அன்பும் வெளிப் படுவது விநோதமல்லவா! இதைத் தான் பெரியவங்க அன்னைக்கே சொன் னாங்க! பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே!

bb

நீங்கள் பார்க்கும் படம் ஃபாத்திமா சபைர் எனும் புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது. காஸாவில், இஸ்ரேல் ராணுவத்தால் போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு தாக்குதல் நடந்தபின், பீட் ஹனௌன் பகுதிக்குச் சென்றிருந்தார் பாத்திமா. ராஹத்லிதின் வீட்டை பாத்திமா பார்வையிட்ட நேரம் முழுவதும், கையில் டெடிபியர் வைத்திருந்த ராஹத் நஸீர் அமைதியாகவே இருந் தார். சிறுமியின் முகத்தில் குண்டு வீச்சால் ஏற்பட்ட சேதத்தின் அதிர்ச்சி மாறியிருக்கவில்லை. ஓட்டைவிழுந்த சுவரின் வழியாக அந்தப் பகுதியெங் கும் நிகழ்ந்திருந்த பாதிப்புகளை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது பாத்திமா எடுத்த புகைப் படம்தான் இது. போருக்கு முன் சொந்த வீட்டுக்காரியா யிருந்த ராஹத், இப்போது வாடகை வீட்டுக்காரி! சிறுமியின் எதிர்காலத் தில் விழுந்த துளை!

-நாடோடி