கொச்சி தேவஸ்வம் போர்டு, கேரள கோவில்களில் ஒரு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவிலுக்குள் இருக்கிறீர்கள். உண்டியலில் போட தேவையான சில்லறைப் பணமில்லை. அல்லது பர்ஸை மறந்துவிட்டீர்கள். கவலையே வேண்டாம், கோவில் உண்டியலுக்கென தனி க்யூஆர் கோடை உருவாக்கி யிருக்கிறார்கள். அதை உங்கள் மொபைலில் ஸ்கேன் செய்து, தேவையான காசை கடவுளுக்குப் அனுப்பி விடலாம். ஆரம்பகட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு சரியான வரவேற்பு இல்லாதபோதும், புதிய திட்டங்கள் முதலில் தயக்கமாகத்தான் பார்க்கப்படும். நாங்கள் மேலும் பல கோவில்களுக்கு இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த இருக்கிறோம் என்கிறது கேரளா! ஆன்லைன் உண்டியல்னு சொல்லுங்க!
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பொருளாதார அறிஞருமான ரகுராம் ராஜன் சிறுபான்மை யினருக்கு எதிரான நாடு இந்தியா என்ற பெயர், நம் பொருளாதார எதிர்காலத்துக்கு நல்லதல்ல என எச்சரித்துள்ளார். சமீப காலங்களாக இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதைக் குறிப்பிட்டு இத்தகைய பிம்பத்தால் நம் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படலாம். தவிரவும் பிற நாடுகள் நம்மை நம்பகமற்ற நாடாகக் கருதுவதற்கு இந்த தாக்குதல்கள் இட்டுச்செல்லலாம். சர்வதேச நாடுகள் இந்தியாவை சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என முத்திரை குத்தும் பட்சத்தில் அதன் தாக்கம் மோசமானதாக இருக்குமென எச்சரித்துள்ளார். போகவேண்டிய காதுக்கு போய்ச்சேருமா?
சமீபத்திய ஆய்வுகள் கொரோனா நுரையீரலையும் இதயத்தையும் மட்டும் பாதிப்பதில்லை. ஆண் மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்துகின்றன என கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது கொரோனா தொற்று ஏற்பட்ட ஆண்களையும் கொரோனா தாக்காத ஆண்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியதில் கொரோனா பாதிப்புக்குள்ளான ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாகவும், அவற்றின் நகர்வுத் தன்மை குறைவாகவும், விந்தணுக்கள் வடிவம் குலைந்தும் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். தவிரவும் உலகமெங்கும் அறிவியலின் வளர்ச்சியால் ரசாயனப் பொருட்களின் தாக்கம் கடந்த இரு நூற்றாண்டுகளாக அதிகரித்திருக்கிறது. இந்த ரசாயனங்களில் பல ஆண்மைக் குறைவை ஏற்படுத்துபவையாம். அத்தகைய ரசாயனங்களில் ஒன்றான தாலேட்ஸ் ஆண்களை வெகுவாகப் பாதிக்கிறதாம். இதேநிலை தொடர்ந்தால், மருத்துவர்களின் தயவில்லாமல் பெரும்பாலான ஆண்களுக்கு குழந்தை பிறக்காது என்பதுதான் இதிலுள்ள அபாயம். ஆம்பளைங்க ஜாக்கிரதை!
புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு சந்தையும் விலையும் நன்கு கிடைக்கும் என்பதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், அப்பகுதிகளில் பிரபலமாக விளங்கும் உணவுப் பொருள், விளைபொருள், கலைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ஆர்வம்காட்டி வருகின்றனர் அப்பகுதி மக்கள். இந்தியாவில் இதுவரை 195 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் புளியங்குடியின் எலுமிச்சை, விருதுநகரின் சம்பா மிளகாய், தூயமல்லி அரிசி போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புளியங்குடி, தன் சிறப்புமிக்க எலுமிச்சை காரணமாக லெமன் சிட்டி என்றே அழைக்கப்படுகிறது. சம்பா மிளகாய் அதன் செந்நிறத்துக்கும் காரத்துக்கும் பேர் போனது. தூயமல்லி அரிசி அதன் புரதச்சத்துக்காகவும் உயர் கொழுப்புச் சத்துக்காகவும் பாராட்டப்படுவது! முயற்சி திருவினையாக்கும்!
மியான்மர் அரசியலில் ராணுவத்தின் தலையீடு நெடுங்காலமாகவே தொடர்ந்துவருகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் நிர்பந்தம் காரணமாக தேர்தல் அரசியல் பாதைக்குத்திரும் பியமியான்மரில், ஓராண்டுக்கு முன்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங்சான் சூ அரசை ராணுவம் கவிழ்த்து கைப்பற்றியது. நெடுங்காலம் சிறையில் கழித்த ஆங்சான் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். ராணுவ அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள் ராணுவத்தால் வேட்டை யாடப்பட்டனர். இந்நிலையில் ஆங்சான் மீது ஊழல் குற்றச் சாட்டைச் சுமத்தி, விசா ரணையைத் தொடங்கியது நீதிமன்றம். ராணுவத் தலை மையின் கண்ணசைவுக்கேற்ப விரைவாக வழக்கை நடத்திய நீதிமன்றம் அவர் ஊழல்செய்த தாகக் கூறி அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள் ளது. உலக நாடுகள் இதைக் கவலையுடன் கவனித்து வரு கின்றன. சூது கவ்விடுச்சு. தர்மம் வெல்லுமா?
தேவாங்குகள் இந்தியாவிலும் இலங்கையிலும் அதி கம் காணப்படும் சிறு பாலூட்டி விலங்காகும். தோற்றத்தில் அவலட்சணமாகக் காணப்படும் இவை மனிதனுக்கு எந்த ஆபத்தையும் விளைவிப்ப தில்லை. மாறாக, பறவை முட்டை, பல்லி, பூச்சி, சமயங் களில் இலைதழையையும் உண்ணக்கூடிய தேவாங்கு களுக்கு மனிதர்களால்தான் ஆபத்து. வேட்டையாடக் கூடியவர்களாலும், செல்லப் பிராணி பிரியர்களாலும் இவை வேட்டையாடப்படுகின்றன. தவிரவும் இவற்றின் மாமிசம் மருத்துவக் குணமுடையது என்ற நம்பிக்கையும் இவை அழியக் காரணமாயிருக்கின்றன. எனவே தேவாங்கினை அழிவி லிருந்து காப்பாற்ற, ஓசூர் கோட் டத்தில் 478 சதுரகிலோமீட்ட ரில் தேவாங்கு சரணாலயம் அமைக்க தமிழக அரசு திட்ட மிட்டுள்ளது. இந்தியாவிலேயே தேவாங்குக்கு என அமையவிருக் கும் முதல் சரணாலயம் இதுவென தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேவாங்குகள் வாழட்டும் வாழ்வாங்கு...!
-நாடோடி