1992 முதல் 2022 வரையிலான கடந்த முப்பதாண்டுகளில், உலகத்திலுள்ள அதிக கொள்ளளவு கொண்ட ஏரிகளில் பாதிக்கும் மேலானவை சுருங்கிவருகின்றன. கொலரோடோ போல்டர் பல்கலைக்கழகம் கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 2000 ஏரிகளைத் தொடர்ந்து கவனித்ததில் இது வெளிப்பட்டுள்ளது. உலகின் 53 சதவிகித ஏரிகள் சுருங்கியபடி செல்ல, 22 சதவிகித ஏரிகள் மட்டுமே விரிவடைந்துள்ளன. இதனால் இந்த ஏரிகளை நம்பியிருந்த மக்கள் குடிக்கும் நீருக்கும் பாசனத்துக்கும் சிரமங்களை அனுபவிக்க நேரும். குறிப்பிட்ட பருவங்களில் வலசை வரும் பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. இது தீவிரமடையும் பட்சத்தில் இந்த ஏரிகளின் கரைகளில் வாழும், உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் சிரமத்துக்கு ஆளாவர் எனக் கணிக்கப்படுகிறது. இப்படி ஏரிகள் சுருங்கிப் போவதற்கு புவி வெப்பமடைதல், மனித நுகர்வு இரண்டும் தான் முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளதாம். சோறை விடவும் தண்ணி முக்கியம்!
சல்மான் ருஷ்டி மீண்டும் வெளியில் தலைகாட்டியுள்ளார். இவரது சாத்தானின் கவிதைகள் நாவல் சர்ச்சைக்கு உள்ளாக, தீவிர இஸ்லாம் ஆதரவாளர்கள் கொலைமிரட்டல் விடுத்தனர். இதனால் இவர் நெடுங்காலமாக லண்டனில் தலைமறைவாகவே வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது. தனக்கு பத்வா விதிக்கப்பட்டு நெடுநாளாகிய சூழ-ல், 2022, ஆகஸ்டு 12-ல் நியூயார்க்கில் இலக்கிய நிகழ்வொன்றில் லெபனானைச் சேர்ந்த ஹடி மட்டார் என்பவரால் மோசமாகத் தாக்கப்பட்டார். இதில் இவர் பலத்த காயங்களுக்கு ஆளானதோடு ஒரு கண்ணில் பார்வையையும் இழந்தார். இந் நிலையில் வெகு நாட்களுக்குப்பின் மன்ஹாட்ட னில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வொன்றில் பென் சென்டனரி கரேஜ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார் ருஷ்டி. விழாவில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் எழுந்து நின்று ருஷ்டியை கௌரவித்தனர். "பயங்கர வாதம் நம்மைப் பயமுறுத்தக் கூடாது. வன்முறை நம்மைத் தடுத்து நிறுத்தக் கூடாது. போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது'' என இத்தனை இழப்புகளுக்குப் பிறகும் துணிந்து பேசியுள்ளார் ருஷ்டி. ரொம்பத் துணிச்சல்காரர்தான்! ஷீன்…(நட்ங்ண்ய்) இந்தப் பெயரை நினைவிருக்கிறதா? சீனாவின் முன்னணி பேஷன் பிராண்டான ஷீன், இந்தியாவிலும் ஆன்லைன் செய- மூலம் கால்பதித்து தனக்கென ஒரு சந்தையை உருவாக்கியது. இந்த நிலையில்தான் 2020-ல் மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் பாதுகாப்பு காரணங் களைக் காட்டி 59 சீனச் செய-களுக்குத் தடைவிதித்தது. அதில் நடையைக் கட்டிய ஷீன் மீண்டும் மூன்றாண்டுகளுக்குப் பின் இந்தியாவில் கால்பதிக்க உள்ளதாகக் கூறுகிறார்கள். இப்போது அந்தச் செய-யைப் பயன்படுத்தினால் ஆபத்தில்லையா? இந்த முறை ஷீன் தனியாக வரப்போவதில்லை. முகேஷ் அம்பானியுடன் கூட்டணி வைத்து இந்தியாவில் கால்வைக்கப் போகிறதாம். இன்னும் ரிலையன்ஸ் தரப்பி-ருந்து இந்தச் செய்தி உறுதிசெய்யப்படவில்லை என்றாலும் சந்தையில் கிசுகிசுப்புகள் கிளம்பிவிட்டன. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லைன்னு மேலிடம் உத்தரவு கொடுத்துடும்! நாய் வித்த காசு குரைக்காதாம்!
தூக்குத் தண்டனை உள்ளிட்ட மரண தண்டனைக்கு எதிரானவர்களின் கவலை அதிகரித்துள்ளது. 2022-ல், உலக நாடுகள் அதற்கு முந்தைய ஆண்டைவிடவும் 53 சதவிகிதம் அதிகமாக மரண தண்டனை விதித்துள்ளதுதான் அதற்குக் காரணம். அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல்படி, 2022-ல் ஈரானும் சௌதி அரேபியாவும் அதிக அளவில் மரண தண்டனை விதித்துள்ளன. மேற்காசியாவில் இந்தோனேசியாவில் முந்தைய ஆண்டைவிடவும் அதிகளவு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் 2021-ல் விதிக்கப்பட்ட மரண தண்டனை 314 என்றால், 2022-ல் இது 576. சௌதி அரேபியாவில் 65--ருந்து 196-ஆக உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட மும்மடங்கு உயர்வு. இப்படி தாறுமாறாக மரண தண்டனையை அதிகமாக விதித்த நாடுகளில் குவைத், பாலஸ்தீனம், சிங்கப்பூர், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் அடக்கமாம். 2021-ல் 18 நாடுகள் ஒட்டுமொத்தமாக 579 மரண தண்டனைகளை நிறைவேற்றின என்றால், 2022-ல் 20 நாடுகள் சேர்ந்து 883 பேரை தண்டனையளித்துத் தீர்த்துக்கட்டியிருக்கின்றன. பங்களாதேக்ஷில் மிக அதிகமாக 169 பேருக்கு மரண தண்டனையாம். சீனா, வட கொரியா போன்ற நாடுகள் இந்தக் கணக்கில் வராது. ஏனெனில் இவை அளிக்கும் மரண தண்டனைக் கணக்குகள் துல்-யமாக இருக்காதாம். கொன்னுட்டாங்க போங்க!
நாடோடி