"கட்சியா சார் இது.… ஒழுங்கான கட்சிக் கொள்கையோ, கட்சிக் கட்டமைப்பு விதியின்படி பொறுப்பு களோ எதுவும் இந்த கட்சியில் பின்பற்றுவ தில்லை. கேப்டன் பொறுப்பில் இருக்கிறப்பவாவது ஓரளவு மரியாதை இருந்தது, ஒழுங்குமுறை இருந் தது''’-நம்மிடம் பேச வேண்டும் என்று வந்த மதுரை தே.மு.தி.க. மா.செ.வான செல்வகுமார் எடுத்த எடுப்பிலேயே புலம்ப ஆரம்பித்தார்.

dd

"இந்த அம்மா தலையெடுத்த பிறகு எதுவும் இல்லை. ஜால்ரா ஆட்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவெடுப் பார்கள். உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள் ளுங்கள். தீவிர விஜயகாந்த ரசிகன். 2007-ல் கட்சியில் சேர்ந்தேன். முதலில் தொண்டரணிச் செய லாளராக இருந்து, படிப்படியாக பணத்தை தண்ணியாக செலவழித்ததால் மாவட்டச் செயலாளராக ஆக்கப் பட்டேன். பெரிய பொறுப்பு வாங்கியதால் மக்கள்நலப் பணிகளில் என் சொந்த பணத்தை போட்டுச் செலவழித்தேன். இருந்தாலும் கேப்டனோ, அவரது மகனோ, இல்லை பிரேமலதாவோ யார் மதுரை வந்தாலும் எனக்குத் தகவல் வராது. முதலில் ஜெ.பாலனுக்குதான் தெரியும். அவர்தான் தே.மு.தி.க. பொறுப் பாளர்களை அழைத்து “"அண்ணியார் வரு கிறார். வரவேற்பு கொடுத்து அழைத்துப் போகணும்... உடனே தயாராகுங்கள்' என்று கட்டளை போடுவார். அவர் அறிவிக்கப்படாத தென்மண்டல பொறுப் பாளர்போல் செயல்படு வார்.

அதன்படி தென்மாவட்டத்தி லுள்ள அனைத்து பொறுப்பாளர் களும் வருவார்கள். அவர்களுக்கு கார் ஏற்பாடு செய்வதிலிருந்து ரூம் போடுவதிலிருந்து எல் லாமே நான்தான் ஏற்பாடு செய்வேன். இதுபோக மாதா மாதம் ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளரும் குறைந்தது 5000 ரூபாய் பாலனுக்குக் கப்பமாக கட்டவேண்டும். அப்படி யாராவது முடியாது என்றால் அடுத்த நிமிடமே அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்.

Advertisment

dd

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் எனக்கு சீட் வாங் கிக் கொடுப்ப தாக சொல்லி என்னிட மிருந்து 50 லட்சம் வாங்கினார். கடைசியில் சீட் வாங்கித் தரவில்லை. இதைக் கேட்க முடியாமல் தவித்துவந்தேன். வாரத்திற்கு 5 நாட்கள் அவர் வீட்டு வேலையைச் செய்யவேண்டும். என் இனோவா கார், நான் பயணித்ததைவிட அவருக்குதான் அதிகமாக ஓடியது. தற்போது மிகவும் நொடித்துவிட்டேன். என்னால் பாலன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் பணம் செலவழிக்க முடியவில்லை.

போன மாதம் என்னைக் கூப்பிட்டு கறித்தோசை வாங்கிவரச் சொன்னார். "அண்ணே நான் வெளியில் இருக்கேன் வரமுடியாது' என்று சொன்னதற்கு, "சரி போனை வை' என்றவர், அடுத்த சில நிமிடங்களில் செல்போனில் அழைத்து, "செல்வா அண்ணியிடம் பேசி விட்டேன். நீ ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு பதவியிலிருந்து விலகிக்கோ' என்று சொன்னவர்... அன்றே லெட்டர்பேடில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, "தேவைப்படும்போது உங்களிடம் எழுதி வாங்கிக்கொள்கிறேன்' என்று வாங்கிவைத்துவிட்டு, இரண்டு நாட்கள் கழித்து பார்த்தசாரதி மதுரை வந்தபோது, என் கையில் ஒரு கவரை திணித்து ராஜினாமா கடிதத்தை பார்த்தசாரதியிடம் கொடுக்கவைத்தார். அவரும் என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஒரு மாவட்டச் செய லாளருக்கே இந்த நிலைமை.

ddஇதுகுறித்து அண்ணியாரிடம் எவ்வள வோ முறை தொடர்புகொண்டும் அவர் எடுக்கவில்லை. கேப்டனோ எதைப் பற்றியும் கேட்கும் நிலையில் இல்லை. என்னைப் போன்ற கேப்டனின் உண்மையான விசுவாசிகளின் நிலைமை இதுதான். "எந்த விதிகளின் அடிப்படையில் என்னை ராஜினாமா செய்யச் சொன்னீர்கள். எம்.எல்.ஏ. சீட்டுக்கு கட்சிக்கு 50 லட்சம் கொடுக்கவேண்டும் என்று ஜெ.பாலன் மூலம் என்னிடம் வாங்கினீர்கள். இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை. ஜெ.பாலனிடம் கேட்டால், தலைமையிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்கிறார். கட்சிக்காக சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டேன் நான். என் பதவியையும் எந்தவித கேள்வியும் இல்லாமல் பிடுங்கிவிட்டீர்கள். இப்போது நடுத்தெருவில் நிற்கிறேன். தயவுசெய்து கடைசியாகக் கொடுத்த அந்த 50 லட்சத்தை யாவது திருப்பிக்கொடுங்கள்' என்று தலைமைக்கு கடிதம் எழுதி இதுவரை பதில் வரவில்லை.

அதனால்தான் பொதுவெளியில் சொல்ல முற்பட்டுள்ளேன். எனக்குத் தெரிந்து உலகத்தில் இப்படி ஒரு கட்சி இருக்கவே முடியாது. இது கட்சியா? என்ன இழவுன்னே தெரியவில்லை. எப்ப பார்த்தாலும் பணம், பணம், பணம்...… இந்த பண ஆசையில்தான் எங்க உயிரினும் மேலான கேப்டனை இப்படி ஆக்கிவிட்டார்கள்''” என்று சொல்லிக்கொண்டிருக் கும்போதே அழ ஆரம்பித்து விட்டார் மதுரை மாநகர் மாவட் டச் செயலாளர் செல்வகுமார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து தே.மு.தி.க. உயர்மட்ட செயலாளர் ஜெ.பாலனிடம் கேட்டோம்.

"அவர் சொல்லும் குற்றச்சாட்டு அனைத்தும் கற்பனையே... எதுவும் உண்மை யில்லை''’என்றவரிடம், "உங்களிடம் சீட்டுக்கு 50 லட்சம் கொடுத்ததாகச் சொல்றாரே...'' என்றதற்கு, "“அப்படியெல்லாம் ஒரு விசயம் நடக்கவே இல்லை. நான் வாங்கியதற்கு ஆதாரம் காண்பிக்கச் சொல்லுங்கள். அவர் ஒழுங்காக வேலை செய்யவில்லை. அவ ராகவே என்னிடம் வந்து மிகவும் கஷ்டப்படுகிறேன். மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன். தலைமையிடம் தெரிவியுங்கள் என்றார். அவராகவே ராஜினாமா கடிதம் கொடுத்து விலகிக்கொண்டார். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை''’என்று முடித்துக்கொண் டார்.

Advertisment