லங்கை நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயகா தலைமையிலான சிங்கள பேரினவாதக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் பிரதமராக ஹரினி அமரசூரியா நியமிக்கப்பட்டார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. இதில் மக்களால் 196 எம்.பி.க்களும், வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் 29 நியமன எம்.பி.க்களும் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில், 141 இடங்களைக் கைப்பற்றிய ஜனாதிபதியின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 68,63,186 (61.56 சதவீதம்) வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் 18 நியமன எம்.பி.க்களுக்கான (தேசிய பட்டியல்) இடங்கள் அக்கட்சிக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மொத்த இடங்கள் 159.

srilanka

அதேபோல எதிர்க்கட்சி வரிசையில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் கட்சி 35 இடங்களும், 17.66 சதவீத வாக்குகளை பெற்ற தால் தேசிய பட்டியலில் 5 நியமன இடங்களும் என 40 இடங்களைப் பெற்றுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் புதிய ஜனநாயக முன்னணிக்கு மக்களால் 3 இடங்களும், 4.49 சதவீத வாக்குகளை பெற்றதால் தேசிய பட்டியலில் 2 நியமன இடங்கள் என 5 எம்.பி.க்களே கிடைத்திருக்கிறார்கள்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் குடும்பக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவுக்கு நேரடியாக 2 இடங் களும், பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 1 இடமும் என மொத்தம் 3 எம்.பி.க்கள் மட்டுமே கிடைத்திருக்கிறார்கள்.

Advertisment

ஈழத்தமிழர்களின் தாயகமான வட -கிழக்கு பிரதேசத்தில் தமிழர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சி 7 இடங் களையும், 2,57,813 வாக்குகள் கிடைத்ததன் மூலம் 1 நியமன இடத்தோடு மொத்தம் 8 எம்.பி.க் களை பெற்றுள்ளது.

அமோக வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் கட்சியின் பிரதமராக ஹரிணி அமர சூரியாவை மீண்டும் நியமித்தார் ஜனாதிபதி திசநாயகா. இவரது தலைமையில் 21 அமைச்சர் கள் கொண்ட கேபினெட் அமைக்கப்பட் டுள்ளது. பிரதமர் ஹரிணிக்கு கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. பெண் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள சரோஜா சாவித்ரி போல்ராஜ், இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் தமிழர்கள். இதில் மகளிர் மற்றும் சிறுவர்கள் நல விவகாரத்துறை அமைச்சக பொறுப்பு சரோஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இராமலிங்கத்துக்கு கடல் தொழில், கடல் வளங்கள், நீரியல் துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களை ஒப்பிடும்போது பெண் பிரதிநிதித்துவம் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகரித் திருப்பதை கவனிக்க முடிகிறது. இதுதவிர, இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையகத் தமிழ் பெண்கள் 3 பேர் இந்த முறை நாடாளுமன்றத் துக்குள் செல்கின்றனர்.

Advertisment

sr

குறிப்பாக பதுளை, நுவரெலியா, மாத்தறை ஆகிய பகுதிகளில் இவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இதில், சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக வாழும் மாத்தறை பகுதியில் முதல்முறையாக சரோஜா சாவித்ரி போல்ராஜ் வெற்றி பெற்றிருக்கிறார். இவருக்குத்தான் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் சரோஜா சாவித்ரி பேசும்போது, ‘’"பாலியல் சுரண்டலில் இருந்து பெண்களை பாதுகாப்பதுடன், பொரு ளாதார ரீதியாக அவர்களை வலிமைப்படுத்து வதும் தற்போதைய சூழல்களில் மிகமுக்கியமாக இருக்கிறது. பொருளாதார பாதுகாப்பை பெண்களுக்கு ஏற்படுத்துவதன் மூலமே அவர் களுக்கு எதிரான அனைத்து சுரண்டல்களிட மிருந்தும் விடுதலை கிடைக்கும்'' என்கிறார்.

அதேபோல மலையக பெண் எம்.பி.க்கள் பேசும்போது, ‘"மலையக மக்களின் வாழ்க் கையை மேம்படுத்துவது எளிமையானது அல்ல; மிகவும் கடினமானது. அந்த கடினமானதை வென்று மக்களின் மேம்பாட்டினை நாங்கள் உறுதி செய்வோம். அதற்கான திட்டங்கள் எங்களிடம் இருக்கிறது. மேலும் கல்வி, சமூக, பொருளாதார, கலாச்சார, சுகாதார உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் எங்களின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும்'' என்கிறார்கள்.

sr

இந்த தேர்தல் முடிவுகளை ஆராய்ந்த போது, ஈழத்தமிழர்களின் தாயக பிரதேசத்தில் சிங்கள பேரினவாதக் கட்சியான தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில், தமிழ் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பது ஜீரணிக்க முடியாத ஒரு விசயமாகவே வட கிழக்கில் எதிரொலிக்கிறது.

தமிழரசு கட்சி வலிமையாக உள்ளது என சொல்லப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 3 இடங்களும், தமிழரசு கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்திருக்கிறது.

வட-கிழக்கு பிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை கவனிக்கும்போது, மட்டக்களப்பு மாவட்டம் தவிர மற்ற இடங்களில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங்களை ஒப்பிடும்போது, சிங்கள பேரினவாத கட்சியே தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்தினாலும் வட கிழக்கில் அவர்களின் ஆதிக்கம் செல்லுபடியானதில்லை. தமிழ்த் தேசிய கட்சிகளுடன் நிறைய முரண்பாடுகள் தமிழர்களுக்கு இருந்தாலும் சிங்கள கட்சிகளைத் தலைதூக்க விட்டதில்லை.

அத்தகைய மனநிலை இந்த தேர்தலில் மாற்றம் கண்டிருக்கிறது. குறிப்பாக, சிங்கள கட்சியான ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றியிருப்பதன் மூலம், வட-கிழக்கு பிரதேசத்தில் சிங்களவர் களை தமிழர்கள் ஆதரிக்கும் போக்கு அதிகரித்திருப்பதாகவே விவாதிக்கப்படுகிறது. காரணம், தமிழர்களின் நம்பிக்கையை அவர் களுக்கான தமிழ் அரசியல் கட்சிகள் இழந்து வருவதையே காட்டுகிறது என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்.

ஈழத்தமிழர்களின் வட-கிழக்கு பிரதேசத்தின் அரசியல் என்பது தனித்துவமான, இன ரீதியிலான அரசியலாகவே கடந்த 70 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டிருந்தன. அந்த அரசியலுக்கு தனித்தன்மை இருந்தது; தாக்கம் இருந்தது; போர்க்குணம் இருந்தது. ஆனால், 2009-ல் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு உருவான மக்களின் மனநிலையும், தமிழ்த் தேசிய கட்சிகளிடையே ஏற்பட்ட பிளவுகளும்தான் இதோ தாயகப் பிரதேசத்தில் சிங்கள கட்சியின் ஆதிக்கக் கொடி உயரப் பறக்கத் தொடங்கியிருக்கிறது.

இது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள் சிலரிடம் நாம் பேசியபோது,... "வடகிழக்கின் அரசியல் முகமாக இருந்தவை தமிழ்த்தேசிய கட்சிகள்தான். இனப்பிரச்சனைக் கான தீர்வை முன்வைத்து அக்கட்சிகளின் கடந்தகால அரசியல்கள் இருந்து வந்தன. ஆனால், எந்த தீர்வையும் தமிழ் அரசியல் தலைவர்களால் கடந்த 15 ஆண்டுகளில் கொடுக்க முடியவில்லை. தீர்வுக்கான அழுத்தம் தந்து சாதிக்கவேண்டிய அவர்கள், நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதோடு அமைதியாகிவிட்டனர். அதனால், தற்போதைய சூழலில், இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி காத்திருப்பதைக் காட்டிலும் சமூக -பொருளாதார வளர்ச்சியை நோக்கிய சிந்தனை தமிழ் மக்களிடம் உருவாகிவிட்டதாகத்தான் தோன்றுகிறது. அதாவது, உரிமை சார்ந்த அரசியல் தீர்வாக அந்த சிந்தனை இருக்கிறது. அந்த வகையில், இனப் பிரச்சனைக்கான தீர்வை விட, வாழ்வாதாரம் முக்கியம் என வட கிழக்கு மக்கள் யோசிப்பதும், தமிழ் அரசியல் கட்சிகளால் எந்த ஒரு தீர்வையும் கொடுத்துவிட முடியாது என நினைப்பதும் தான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமையிடத்தில் ஏற் பட்ட வெற்றிடங்கள், அது தொடர்பான அரசியல் பிரித்தாளும் சூழ்ச்சிகள், இதனால் உருவான ஒற்றுமையின்மை ஆகியவைகளால் தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசிய கட்சிகள் அந்நியமாக்கப் பட்டுள்ளன.

இதனால் ஏற்பட்ட விரக்தியும் இடை வெளியும், தேசிய மக்கள் சக்தி கட்சியை நோக்கி தமிழர்களின் பார்வை திரும்பிவிட்டதாகவும் கணிக்க முடிகிறது.

அதேசமயம், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வையோ, உரிமை சார்ந்த தீர்வையோ கொடுப்போம் என்கிற எந்த உத்தரவாதத்தையும் தேசிய மக்கள் சக்தி கட்சி கொடுக்கவில்லை என்பதும் கவனிக்க வேண்டியதாகவும் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழர் களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலமும் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்று தமிழ்த் தேசிய தலைவர்களிடம் கேட்டபோது, "தேர்தல் முடிவுகளை வைத்து, தமிழ்த் தேசியத்தை வட-கிழக்கு மக்கள் புறக்கணித்துவிட்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏதோ ஒரு வகையில் தமிழர்கள் இப்போது சிதறியிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அவர்களை ஒற்றுமைப் படுத்த முயல்கிறது. ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இதற்கான முழக்கங்கள் இப்போது எழத் தொடங்கியிருக் கின்றன.

அதனால், ஒற்றைத் தமிழன் இருக்கும்வரை தமிழ்த் தேசியத் திற்கான குரல் ஒலித்துக் கொண்டு தானிருக்கும். அதனால், நடந் துள்ள தவறுகளை உணர்ந்தும், முரண்பாடுகளைத் தவிர்த்தும் தமிழர்களின் எதிர்காலத்தை மையப்படுத்தி தமிழ்த் தேசிய தலைவர்களும், கட்சி களும் ஒரு குடையின் கீழ் மையம்கொள்ள வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயமாக இருக் கிறது''’என்கிறார்கள்.