அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருந்த ஒற்றைத் தலைமை அதிகார மோதலுக்கு முடிவு கட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

இதற்காக ஜூலை 11-ல் கூட்டப்பட்ட கட்சியின் பொதுக்குழுவில், இரட்டைத் தலைமையில் இயங்கி வந்த ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கினர். இடைக்கால பொதுச்செய லாளராக எடப்பாடி பழனிச் சாமி தேர்ந்தெடுக்கப்பட் டார். ஓ.பி.எஸ்.சையும் அவரது ஆதரவாளர் களையும் கட்சியி லிருந்து நீக்கினர். ஓ.பி.எஸ். தரப்பு போட்டி நிர்வாகி களை நியமித்தது. இதனால் அ.தி.மு.க. வில் அதிர்ச்சியும் தமிழக அரசியலில் பரபரப்பும் ஏற்பட் டது.

eps

Advertisment

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி யால் கூட்டப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்தார் ஓ.பி.எஸ். வழக்கை விசா ரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில், அ.தி.மு.க.வின் இரண்டு தரப்புமே பதட்டமாக இருந்தது.

வழக்கு விசாரணையில் நீதிபதி கேட்ட கேள்விகளையும் அதற்கு எதிர்தரப்பு முன்வைத்த பதில்களையும் தங்களின் வழக்கறிஞர்கள் வைத்த வாதங்களையும் இருதரப்பும் தினமும் அலசி ஆராய்ந்தபடி இருந்தது.

கடந்த 17-ந் தேதி தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், "பொதுக்குழு என்பது ஒருங்கிணைப் பாளர் -இணைஒருங்கிணைப்பாளர் இணைந்தது தான் என கட்சியின் சட்டவிதி உள்ளது. தற்காலிக அவைத்தலைவர் பொதுக்குழுவைக் கூட்ட அதிகாரம் இல்லை. சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டுவதாக இருந்தாலும் 5-ல் 1 பங்கு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளரிடம்தான் கோரிக்கை வைக்க முடியும். ஆனால், இந்த கூட்டத்தைக் கூட்ட அதிகாரமில்லாத அவைத்தலைவருக்குத்தான் 5-ல் 1 பங்கு உறுப்பினர்கள் கடிதம் கொடுத்துள்ளனர்.

ops

Advertisment

ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங் கிணைப்பாளரிடம் கடிதம் கொடுத்து அதில் ஒருவர் மறுப்பு தெரிவித்தால்கூட சட்டவிரோதமாக கூட்டத்தைக் கூட்ட முடியாது. எனவே, ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை. ஜூன் 23-க்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக சொல்வதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. ஒருங்கிணைப் பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலி யானால் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வகை செய்யும் விதிகள், எவ்விதத்திலும் பொதுக் குழுவைக் கூட்ட தற்காலிக அவைத்தலைவருக்கு அதிகாரம் வழங்கவில்லை.

அப்படியிருக்கையில் ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்காவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி அவரது பதவியில் சௌகரியமாக உட்கார்ந்துவிடு வார். இரட்டைத் தலைமைக்கு பதிலாக ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததற்கு எந்தவித புள்ளிவிபரங்களும் இல்லை. நான்கரை ஆண்டுகள் கட்சி, ஆட்சி இரண்டையும் இரட்டைத் தலைமை நடத்திய நிலையில், ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒற்றைத் தலைமை என்ற மன நிலைக்கு மாறியது எப்படி என கேள்வி எழுகிறது. கட்சித் தலைமை எடுக்கும் முடிவில் தலையிட முடியாது. ஆனால், அந்த நடைமுறையில் மீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவா ரணம் பெற தடையில்லை.

pp

அதனால் ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழு செல்லாது. ஜூன் 23-க்கு முன்பிருந்த நிலையே தொடரவேண்டும். இரு தலைவர் களின் ஒப்புதல் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது. ஒற்றைத் தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவைகளுக்காக பொதுக்குழுவைக் கூட்ட ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங் கிணைப்பாளருக்கு தடையில்லை. இதில் எந்த காரணங்களுக்காவது நீதிமன்ற உதவி தேவைப்பட்டாலோ, கூட்டத்தை நடத்த ஆணையரை நியமிக்க நினைத்தாலோ நீதிமன்றத்தை நாடலாம்'' என்று அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

இந்த தீர்ப்பு குறித்து அ.தி.மு.க.வின் மூத்த வழக்கறிஞர்களி டம் நாம் பேசியபோது,”"நீதிபதி ஜெயச்சந்திரன் எப்போதுமே சட்டவிதிகளை மட்டுமே கருத்தில் கொள்பவர். அதனடிப்படை யில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் 2019-ல் பால் டேங்கர் லாரிகளை ஆவின் நிறுவனம் வாடகைக்கு எடுக்கும் 350 கோடி மதிப்பிலான டெண்டரில் (இதில் நடந்த ஊழல்களை அப்போதே நக்கீரனில் பதிவு செய்திருக்கிறோம்) விதிகள் மீறப்பட்டதை சுட்டிக்காட்டி டெண்டரை ரத்து செய்யவேண்டும் என லாரி உரிமையாளர்கள் சிலர் வழக்குப் போட்டனர்.

ff

ஆவின் தரப்பில் அப்போதைய அ.தி.மு.க. அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், ஆர்.கே.ஆர். நிறுவனத்தின் தரப்பில் தி.மு.க. எம்.பி.யும் சீனியர் வழக்கறிஞருமான வில்சன், தீபிகா ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் தரப்பில் சீனியர் கவுன்சில் ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகினர். டெண்டரை ரத்து செய்யவேண்டும் என ராகவாச்சாரியும் வில்சனும் கடுமையாக வாதாடுகிறார்கள். ரத்து செய்யக்கூடாது என விஜய்நாராயண் பல பாயிண்டுகளை எடுத்து வைக்கிறார்.

ஆனால், சாதாரண லாரி உரிமையாளர் ஒருவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும் போது, "கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலுக்கு 7-ந் தேதி நோட்டிஃபிகேசன் வெளியிடப்பட்டது. ஆவின் நிறுவனமோ, இந்த டெண்டர் அறிவிப்பை 7-ந் தேதி ஓ.கே. செய்து அதனை 10-ந்தேதி பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார்கள். தேர்தல் நடத்தை விதிகள் 7-ந் தேதியே அமலுக்கு வந்தபிறகு டெண்டர் அறிவிப்பை செய்ய ஆவினுக்கு என்ன அதிகாரம் இருக்கு?' என ஒரே ஒரு பாயிண்டைத்தான் முன்வைத்தார். அதை மட்டுமே அழுத்தமாக எடுத்துக்கொண்டு டெண்டரை உடனடியாக ரத்து செய்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

தலைமை வழக்கறிஞரான விஜய்நாராயண், "மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருள் (பால்) இது. அதை கருத்தில் கொள்ளுங்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் ரேக்டிஃபி கேஷன் வாங்கிக்கொள்கிறோம். டெண்டரை ரத்து செய்யக்கூடாது. ரத்து செய்தால் பால் விநியோகம் தடைப்படும்' என்றெல்லாம் விவாதம் பண்ணிப் பார்த்தார். எதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. விதிகளை மட்டுமே பார்த்தார். டெண்டரில் விதிமீறல் இருந்ததால் டெண்டரை ரத்து செய்தார். அதேபோலத்தான் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கிலும், கட்சியின் சட்டவிதிகளை மட்டுமே ஆராய்ந்து தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி ஜெயச்சந்திரன்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த தீர்ப்பு எடப்பாடிக்கு பின்னடை வையும் பன்னீருக்கு உற்சாகத்தையும் தந்திருக்கிறது. இதுகுறித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்திய ஓ.பி.எஸ்., "கசந்த காலம் மறைந்து வசந்த காலம் உருவாகியுள்ளது. எம்.ஜி.ஆர். வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவர் என்பது தீர்ப்பின் மூலம் நிரூபிக் கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் விதிகளின்படி இணைத்துக் கொள்ளப்படுவர். அனைவரையும் அரவணைத்துச் செல்வதுதான் தலைமைப் பண்பு. எங்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொண்டர்களின் விருப்பப்படி இருக்கும்'' என்கிறார்.

eps

"எடப்பாடிக்கு இது பின்னடைவா?' என்பது குறித்து அவரது தரப்பினரான கே.பி.முனுசாமி யிடம் கேட்டபோது,’"2,600 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,562 பேர் பழனிச்சாமியை தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்கள்தான் இந்த பொதுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தனர். அவர்கள்தான் கட்சியில் அதிகாரம் படைத்தவர்கள். வெறும் 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அவர்களால் (ஓ.பி.எஸ்.) ஒன்றும் செய்ய முடியாது. அதனால் இது எங்களுக்குப் பின்னடைவு கிடையாது. தற்போதைக்கு நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்திருக்கிறது. அது மட்டுமே முடிவான தல்ல''’என்கிறார்.

ஓ.பி.எஸ். ஆதரவு சீனியர்கள் சிலரிடம் பேசியபோது, "ஒற்றைத் தலைமையை ஏற்கக்கூடியவராகத்தான் இருந்தார் ஓ.பி.எஸ். ஆனால், பொதுக்குழுவின் பெரும்பான்மை பலம் தனக்கு மட்டுமே இருப்பதை வைத்து சர்வாதிகாரியாக நடந்துகொண்டார் எடப்பாடி. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை முன்னிறுத்தி ஓ.பி.எஸ்.ஸை அசிங்கப்படுத்தி னார்கள். அதுதான் எடப்பாடிக்கு முதல் சறுக்கல். ஒற்றைத் தலைமைதான் வேண்டுமெனில், ஓ.பி.எஸ்.ஸுடன் கலந்து பேசி முறையாக பொதுக்குழுவைக் கூட்டி கட்சி விதிகளில் மீண்டும் திருத்தம் செய்து தனது ஆசையை நிறைவேற்றியிருந்திருக்கலாம். ஆனால், அவருக்கு அருகிலுள்ள சிலரின் பேச்சைக் கேட்டு, பொதுக்குழுதான் எல்லாத்துக்கும் அதிகாரம் படைத்தது என்பதை நம்பி மோசம்போனார் எடப்பாடி.

ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழுவில், விதிகளின்படி எதுவுமே நடக்கவில்லை. இது இரண்டாவது சறுக்கல். அதேபோல, ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுவுக்கு முன்பாவது, ஓ.பி.எஸ்.ஸை எடப்பாடி சந்தித்து கலந்து பேசியிருந்தால் ஓ.பி.எஸ். ஒப்புக்கொள்ளும் மனநிலையில் தான் இருந்தார். அப்படி சந்தித்திருந்தால் எல்லாமே கட்சி யின் சட்டவிதிகளின் படி ஜூலை 11 பொதுக்குழு நடந் திருக்கும். ஆனால், எடப்பாடியின் ஈகோ, பெரும்பான்மை பலம் கொடுத்த சர்வாதிகாரத்தனம் ஆகிய இரண்டும் ஓ.பி.எஸ்.ஸை சந்திக்கத் தடுத்தது. இது அடுத்த சறுக்கல்.

ஆக, இவைதான் தற்போது நீதிமன்ற தீர்ப்பில் உறுதிசெய்யப்பட்டு எடப்பாடிக்கு சம்மட்டி அடி கொடுத் திருக்கிறது. தற்போது ஓ.பி.எஸ். கை ஓங்கியிருக்கும் சூழலிலா வது கட்சியை பாதுகாக்க ஓ.பி.எஸ்.ஸிடம் எடப்பாடி சமாதானமாக வேண்டும். அது எடப்பாடியின் ஈகோவில் தான் இருக்கிறது'' என்று விவரிக்கின்றனர். தீர்ப்புக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் களுடன் விவாதித்தபடி இருக்கிறார் எடப்பாடி. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆலோசனையில் ஈடுபட்டிருந்த சீனியர் ஒருவரிடம் விசாரித்தபோது,’"தீர்ப்பின் ஒவ்வொரு வரிகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். மேல் முறையீடு செய்யலாம் என சிலரும், இல்லையில்லை, தற்போதைய தீர்ப்பிலேயே நமக்கு சாதகமான அம்சம் இருக்கிறது' என சிலரும் யோசனை சொல்லி யுள்ளனர்.

குறிப்பாக, 5-ல் 1 பங்கு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டால் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என தீர்ப்பு சொல்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களில் 99 சதவீதம் நம்மிடம் இருப்பதால் 5-ல் 1 பகுதியினரை கொண்டு, பொதுக்குழுவைக் கூட்ட இரட்டைத் தலைமையிடம் கடிதம் கொடுக்க வைப்போம். அதற்கு அவர் மறுப்பு சொல்ல முடியாது. பொதுக்குழு கூடித்தான் ஆகவேண்டும். அப்போது, பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் விசயங்கள், கொண்டுவரப்பட வேண்டிய தீர்மானங்களை அங்கு முன்வைப்போம். அதில் ஒரு தீர்மானமாக பொதுச்செயலா ளர் பதவியை கொண்டு வருவதற்கான சட்ட திருத்தம் என்பதை முன்வைப்போம்.

"பொதுக்குழுவின் பெரும்பான்மையை வைத்து அதனை நிறைவேற்றலாம். இதை அவரால் தடுக்க முடியாது' என்று விவாதிக் கப்பட்டதை எடப்பாடி சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், "மேல்முறை யீடு செய்து தடை வாங்கினால் மட்டுமே இப்போதைக்கு ஓ.பி.எஸ். செயல்படுவதை கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில், தலைமைக் கழகத்துக்கு துணிச்சலாக வந்து அமருவார். தினம், தினம் பிரச்சனைதான். ஓ.பி.எஸ்.ஸை செயல்பட அனுமதித்துவிட் டால், தற்போது நம்மை ஆதரிப்பவர்கள் அவரிடம் செல்வதற்கு வழிவகுத்துவிடும்' என அட்வைஸ் செய்தனர்''’என்று ஆலோ சனையில் நடந்ததை சுட்டிக்காட்டுகிறார் கள். இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் எடப்பாடி. அதேசமயம், இணைந்து செயல்பட எடப்பாடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஓ.பி.எஸ்.

"ஓ.பி.எஸ்.ஸுடன் தொடர்ந்து எடப்பாடி சண்டையிடுவாரா? சமாதான மாவாரா? என்பது ஓரிரு நாளில் தெரியும்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

படங்கள்: ஸ்டாலின் -அசோக் -குமரேஷ்