நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் வழக்கறிஞர்கள்!

குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த விதி, 2019-ஐ சென்ற ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் அமுலுக்குக் கொண்டுவந்தது தமிழக அரசு.

இந்தக் குற்றவியல் நடைமுறை விதியில், பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக பிரிவு 27(2) குற்றவாளி தனது பிரதிநிதியாக, வழக்கறிஞர் அல்லாத ஒருவருக்கு பொது அதிகாரத்தைக் கொடுக்கிறது. அப்படி பொது அதிகாரம் பெற்றவர் குற்றவாளிக்காக வழக்கை நடத்தலாம் என்பதால் இந்த சட்டத் திருத்தத்தை தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

"நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, மருத்துவம் படித்த டாக்டரால் மட்டுமே நோயின் தன்மையறிந்து சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், டாக்டரே தேவையில்லை. ஊசிபோடத் தெரிந்த செவிலியரே போதும் என்பதுபோல, இந்தச் சட்டத் திருத்தம் வழக்காடு மன்றத்தில் வழக்கறிஞர் களே தேவையில்லை என்கிறது'’ என்று கொந்தளிக்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.

Advertisment

இந்த புதிய சட்டத் திருத்தத்தை முழுமையாக திரும்பப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி, 07-ந்தேதி நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் தமிழக, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், 2009, பிப்ரவரி 19-ல் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை கறுப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டதால், அன்றைய நாளில் வழக்கில் ஆஜராக வேண்டியவர்கள் பலரும் சிரமத்திற்கு ஆளானார்கள். வார இறுதிநாள் என்பதால், ஜாமீனுக்காக காத்திருந்தவர் களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே, அரசு இதில் முறையான முடிவெடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

-ஜீவாதங்கவேல்

Advertisment

அமைச்சர்கள் விழாவில் மாணவர்கள் பட்டினி!

அரசு நிகழ்ச்சிக்கு சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து, தன் காலில் இருந்த செருப்பைக் கழற்ற வைத்தது விவாதமானது. இது நடந்தது முதுமலையில். கொஞ்சமும் சமூக அக்கறையில்லாத இந்த நிகழ்வைப் போலவே, இன்னொன் றும் அரங்கேறி இருக்கிறது. இது திருவண்ணாமலையில்.

signal

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு எதிரில், வேங்கிக்கால் ஏரிக்கரையில் ரூ.3 கோடி செலவில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 06-ந்தேதி நடைபெற்ற இந்த விழாவிற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் வருவதாக இருந்தது.

காலை 8:30-க்கு நடக்கும் இந்த விழாவிற்காக, 6:30 மணிக் கெல்லாம் அக்கம்பக்கத்து பள்ளி களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிக மான குழந்தைகளை கல்வித்துறை மூலமாக அழைத்து வந்திருந்தனர் அதிகாரிகள். ஆனால், அமைச்சர்கள் சொன்ன நேரத்திற்கு வரவில்லை. நேரம் செல்லச்செல்ல வெயிலும், பசியும் குழந்தைகளை வாட்டியது. இதைப் பார்த்த செய்தியாளர்கள் அரசு பி.ஆர்.ஓ.விடம் தகவல்சொல்ல, அவர் ஆட்சியர் கந்தசாமியிடம் "குழந்தைகளுக்கு பிஸ்கட், தண்ணீர் கொடுத்தா நல்லா இருக்கும்' என்று கூறினார்.

இதைக்கேட்டு, காலில் சுடுநீர் ஊற்றியதுபோல குதித்த உள்ளாட்சித்துறை திட்ட அலுவலர் ஜெயசுதா, "அமைச்சர் வர்ற நேரம்... அவர்தான் முக்கி யம்' எனக் கத்தினார். "பிள்ளைங்க பசியில் இருக்காங்க. ஏதாச்சும் ஆச்சுனா பிரச்சனைதான்...' எனக் கூறியும் ஜெயசுதா விட்டுக் கொடுக்கவில்லை. இதில் ஆட்சியர் கந்தசாமி தலையிட்ட பிறகே, ஜெயசுதா வேண்டா வெறுப்போடு உணவும், தண்ணீரும் ஏற்பாடு செய்தார்.

10:45க்கு வந்த அமைச் சர்கள் 11:15-க்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். வெறும் அரைமணி நேரக் கூத்துக் காக குழந்தைகளை வெயிலில் காயப்போட்டதை விடவும், ஒரு பெண் அதிகாரியே அதற்கு துணைபோன சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.

- து.ராஜா

தீட்டுக் கழிக்க யாகம்? தி.மு.க. களேபரம்!

signalதாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் இருந்த அறையை பயன்படுத்தக்கூடாது என்கிற நோக்கத்தோடு, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய அறை கட்டி, தீட்டுக்கழிக்க தி.மு.க. வினர் யாகம் நடத்தியிருப்பதாக சர்ச்சை வெடித் துள்ளது. இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சசிகலா நம்மிடம், “""29-ந் தேதி காலையில் ஒன்றிய கவுன்சிலர் அறிமுகக் கூட்டம் நடந்த அரங்கத்தில் யாகம் செய்யப்பட்ட செங்கல், சாம் பல் கிடந்தது. இது குறித்து விசாரித்ததில், 28-ந் தேதி அதிகாலை யாக பூஜை நடந் திருப்பது தெரியவந்தது.

இதற்குமுன்பு இங்கிருந்த ஒன்றிய குழுத்தலைவர் மகா லிங்கம் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதனால் அவர் பயன்படுத்திய அரங்கத்தில் புரோகிதர்கள் மூலம் யாகம் நடத்தி தீட்டுக் கழித்ததோடு, "மகாலிங்கம் பயன்படுத்திய அறை வேண் டாம்' என, புதிதாக ஒரு அறையைக் கட்டியுள்ளனர். இதில் ஈடு பட்ட, இதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் நட வடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் சட்டப்போராட்டம் நடத்துவோம்''’என்றார். ஒன்றியக்குழு ஆணையர் பூங்குழலியிடம் இதுபற்றி கேட்டபோது, “""யாகமெல்லாம் இல்ல. பில்டிங் புதுசுங்கிறதால சாதாரண பூஜை செய்தாங்க... அவ்வளவு தான்''’என்றபடி, லைனை அவசரமாகத் துண்டித்தார்.

ஒன்றிய சேர்மன் காயத்ரியிடம் விளக்கம்கேட்க அழைத்த போது, “அவரது கணவரும், தி.மு.க. ஒ.செ.வுமான அசோக்குமார் பேசினார். “""2011-ல் திறக்கப்பட்ட அந்தக் கட்டிடம் சரியாக பயன்படுத்தாமல் கிடந்தது. அதனால், வீடு குடிபோவதுபோல, ஆணையரின் ஒப்புதலோடு சின்ன பூஜை செய்தோம்''’என்றார். "புதிதாக அறை கட்டவேண்டிய அவசியமென்ன?' என்று கேட்டதற்கு, “""எதிர்த்தரப்பு தேவையில்லாம கிளப்பி விடுறாங்க. அது பழுதாகிருச்சு. அதனால்தான்...''’ என்றார்.

"சாதி ஒழிப்பே சமூக விடுதலை' என முழங்கினார் கலைஞர். அவரின் உ.பி.க்கள் தீட்டுக் கழிக்க யாகம் நடத்தலாமா?

-க.செல்வகுமார்