"ஹலோ தலைவரே, ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.''”

"ஆமாம்பா, தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களில், ஒன்றுக்கான தேர்தல் செப்டம்பர் 13-ந் தேதி நடக்கும்ன்னு அறிவிக்கப்பட்டிருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. எம்.பி. முகமது ஜான் இறந்ததால், அவர் இடத்தை நிரப்புறதுக்கான தேர்தல்தான் இப்ப நடக்கப் போகுது. மற்றபடி, எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று வெற்றி பெற்றதால், தங்கள் ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்திருக்கும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோரால் காலியாக இருக்கும் ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தலை, நவம்பருக்குள் தேர்தல் ஆணையம் நடத்த இருக்குது. இந்த மூன்று ராஜ்யசபா தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தினால், 2-ல் தி.மு.க.வும், 1-ல் அ.தி.மு.க.வும் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்தது. அதனால், மூன்று இடங்களுக்கும் ஒரே நாளில் தேர்தலை வைக்க ணும்னு டெல்லியிடம் அ.தி.மு.க. முட்டிமோதியது.''”

"சரிதாம்பா, ஒரேநாள்ல தேர்தலை வச்சிருந்தா, தங்கள் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வுக்கு லாபமாச்சேன்னு, பா.ஜ.க. நினைக்கலையே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, அதுக்குக் காரணம் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பா இருந்த அந்த ஒரு இடத்தை, ஒன்றிய அமைச்சராக ஆக்கப்பட்டிருக்கும் எல்.முருகனுக்காக பா.ஜ.க. கேட்டுச்சு. இதுக்காகத்தான் எடப்பாடியையும், ஓ.பி.எஸ்.சையும் டெல்லிக்கே கூப்பிட்டாங்க. பிரதமர் மோடியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கறார் குரலில் கேட்டும், தங்கள் கட்சி சீனியர்கள் அந்த ஒரு இடத்தை விட்டுத்தர சம்மதிக்க மாட்டாங்கன்னு, அவங்க ரெண்டுபேரும் சொல்லிட்டாங்க. இதுபத்தி அப்பவே நாம் பேசியிருக்கோம். இந்த காரணத்தால்தான், அ.தி.மு.க.வுக்கு மூன்றில் ஒரு ராஜ்யசபா சீட்டும் கிடைக்கக்கூடாதுன்னு தேர்தலை ஒரே நாள்ல நடத்துறதில் டெல்லி பா.ஜ.க. ஆர்வம் காட்டலை. இப்ப அந்த மூன்று இடங்களில் ஒன்றுக்கு மட்டும் தேர்தலை நடத்த இருப்பதால், தி.மு.கவின் பலம் மாநிலங்களவையில் உயரப்போகுது.''”

"செப்டம்பர் 13-ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில், தங்கள் வேட்பாளரா எம்.எம். அப்துல்லாவை தி.மு.க. அறிவிச்சிருக்கே?''”

rr

Advertisment

"ஆமாங்க தலைவரே, இந்த சீட்டை மு.க.ஸ்டாலின் யாருக்குத் தரப்போறாருங்கிற எதிர்பார்ப்பு தி.மு.க.வில் இருந்தது. தன் மாப்பிள்ளை சபரீசன், அல்லது டெல்லியில் கட்டப்படும் தி.மு.க. கட்டிடப் பணிகளைக் கவனித்து வரும் உதயநிதியின் நண்பரும் தி.மு.க ஐ.டி.விங்கில் முக்கியமானவருமான கார்த்தி, தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோரை ஸ்டாலின் பரிசீலிக்கிறதாவும் டாக் அடிபட்டது. ஆனால் ஸ்டாலினோ, தி.மு.க.வின் வெளிநாடு வாழ் தமிழர் நல அணியின் இணைச் செயலாளராக இருக்கும் புதுக்கோட்டை அப்துல்லாவுக்கு ராஜ்யசபா வாய்ப்பைக் கொடுத்திருக்கார்.''”

"ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அவர் பெயர் அடிபடுமே?''”

"ஆமாங்க தலைவரே.. கல்லூரி காலத்தி லிருந்தே தி.மு.க உறுப்பினர். ஒவ்வொரு கட்டமா முன்னேறி வந்து, தி.மு.க சிறுபான்மையினர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, அப்புறம் வெளிநாடுவாழ் தமிழருக்கான என்.ஆர்.ஐ அணி இணைச் செயலாளர்னு வளர்ந்தவர் அப்துல்லா. களத்திலும் இணையதளத்திலும் தி.மு.க.வுக்காக செயல்பட்டவர். நம்ம நக்கீரனில் பொருளாதார ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கவிஞர்-எழுத்தாளர்னு பன்முகத் திறமை கொண்ட எம்.எம். அப்துல்லாவுக்கு முகமது ஜான் இடத்தைக் கொடுத்து, சிறுபான்மை சமுதாயத்தின் பிரதிநிதியா ராஜ்யசபாவுக்கு அனுப்புறாரு மு.க.ஸ்டாலின். அதோடு, உதயநிதியின் நட்பு வட்டத்தில் இருப்பவர்தான் அப்துல்லா.''

"ம்...''”

"ஜானின் பதவிக்காலம் 2025-ல் முடிவடை யும். அதனால் அதுவரை அப்துல்லாவின் பதவிக்காலமும் இருக்கும். அதேபோல், அ.தி.மு.க. வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோரால் காலியான இடங்களுக்கு நவம்பருக்குள் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடத்தி முடிச்சாக ணும். 2026 வரை பதவிக்காலம் இருக்கும் கேபி. முனுசாமியின் இடத்துக்கு, சபரீசனையும், 2022 வரை மட்டுமே இருக்கும் வைத்திலிங்கத்தின் இடத்துக்கு, கார்த்திக்கையும் தி.மு.க. தலைமை நிறுத்தப் போகுதுன்னும் பேச்சு அடிபடுது. அடுத்த ஆண்டு மேலும் அ.தி.மு.க எம்.பி.க்கள் நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியம் ஆகிய மூவரின் பதவிக் காலமும் முடியுது. அப்ப நடக்கும் தேர்தலில், ஒரு வருடம் மட்டுமே பதவியில் நீடிக்க இருக்கும் கார்த்தியை, மீண்டும் தி.மு.க. நிறுத்தும்ன்னு சொல்லப்படுது.''”

ss

"சரிப்பா, சிவசங்கர் பாபா விவகாரத்தில் அதிரடி திருப்பங்கள் இருக்கும் போலிருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, சிவசங்கர் விவகாரத்தை தீவிரமா விசாரிச்ச சி.பி.சி.ஐ.டி, அவர் செய்த குற்றங்களுக்கு அழுத்தமாக ஆதாரங்களைத் திரட்டி வச்சிருக்கு. அவர் மாணவிகளை அரட்டி மிரட்டி ஃபோர்ஸா அத்துமீறியதற்கான சாட்சியங்களும் ஸ்ட்ராங்கா இருக்குதாம். அதனால், அவர் இந்த ஜென்மத்துக்கு ரிலீஸ் ஆக முடியதுன்னு, காவல்துறை வட்டாரம் சொல்லுது. இந்த நிலையில் சிவசங்கர் பள்ளியில் முக்கிய பொறுப்பில் இருந்த ஜானகியின் வில்லங்க விவகாரங்களையும் சி.பி.சி.ஐ.டி. துருவியிருக்கு. இந்த ஜானகி ஏற்கனவே சிவசங்கரின் ஆசிரமக் கணக்கில் இருந்து 40 லட்சத்தை சுவாஹா பண்ணிட்டாருன்னு குற்றம் சாட்டி, அவரை சிவசங்கர் துரத்தியடிக்க, அவர் துபாய்ல போய் பதுங்கி இருந்தாராம். சிவசங்கர் மீது பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் கிளம்ப ஆரம்பிச்ச நேரத்தில்தான், ஜானகி துபாய்ல இருந்து மறுபடியும் ஆசிரமத்தில் நுழைஞ்சிருக்கார்.''”

"ஆமாம்பா, இந்த விவகாரத்தில் பா.ஜ.க. பிரமுகர் ஒருத்தரும் சிக்கறாரே?''”

dar"சரியா சொன்னீங்க தலைவரே, பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளரா இருக்கும் கே.டி.ராகவன்தான், இப்ப விசாரணை வளையத்துக்கு வரப்போறார். இவரது மனைவி சிவசங்கரின் சுசில் பள்ளியில் நடன ஆசிரியையாக இருக்கிறார். இந்த இருவரும் ஜானகியுடன் சேர்ந்து சிவசங்கரின் ஏறத்தாழ 1000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முழுதையும் ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்திருக்காங்க. சிவசங்கரின் தீவிர பக்தரான நடிகர் சண்முகநாதனும் கூட, ராகவனும் ஜானகியும் சேர்ந்து ஆசிரமத்தை ஆக்கிரமிக்க சதித்திட்டம் தீட்டுவதா புகார் சொல்லி வருகிறார். அந்த நோக்கத்தில்தான், ஆர்.எஸ்.எஸ். இளைஞர்களை அந்த சுசில் பள்ளியைச் சுற்றிப் பாதுகாப்பாக நிறுத்தி, வெளியார் யாரையும் அனுமதிக்க மறுத்து வந்ததாம் ராகவன் வகையறா. இது குறித்தும் ஆதாரங்கள் திரட்டப்பட்டிருக்கு. இதன் அடிப்படையில் தற்போது கே.டி.ராகவன், அவர் மனைவி, மற்றும் ஜானகி ஆகியோரை, நேரில் விசாரணைக்கு வருமாறு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பியிருக்கு.''”

"கே.டி.ராகவன் மீது வீண் பழின்னு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்லிவருகிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, கே.டி.ராகவன் அப்பழுக்கற்றவர் என்றும், அவர் சிவசங்கரின் ஆன்மீகப் பணிகளுக்குப் பாதுகாப்பாக இருந்துவந்தார் என்றும், அப்படிப்பட்டவர் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் என்றும் அண்ணா மலை வக்காலத்து வாங்கி வருவதோடு, டி.ஜி.பி.சைலேந்திர பாபுவையும் சந்தித்து, சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.ஜி.பி. ஷகீல் அக்தர், ஒரு முஸ்லீமாக இருப்பதால், பா.ஜ.க.வை மதரீதியாகக் குறிவைத்து, தேவையில்லாமல் கே.டி. ராகவனை, சிவசங்கர் விவ காரத்தில் சிக்கவைக்கப் பார்க்கி றார்ன்னு, புகார் சொல்லியிருக்கார். இருப்பினும் கே.டிராகவன் இதில் இருந்து தப்ப முடியாதுன்னு சொல்லும் விசாரணைக் குழுவினர், இவர்களிடம் நடத்தப்பட இருக்கும் விசாரணையின் போது, பல பூதாகரத் தகவல்கள் வெளியே வரும் என்றும் சொல்றாங்க.''”

"வி.வி.மினரல்ஸ் குடோன்ல இருந்த தாதுமணல் மாய மாயிடுச்சின்னு தகவல் வருதேப்பா?''”

"உண்மைதாங்க தலைவரே, வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ், தன் கைவசம் வைத்திருந்த பெரும் அளவிலான இலுமினைட் வகையிலான தாதுமணலை ஏற்றுமதி செய்யக்கூடாதுன்னு, சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிச் சிருந்தது. இந்த நிலையில், அவர் குடோன்ல இருந்து கிளம்பிய நான்கு லாரி தாது மணலை, வருவாய்த்துறை அதிகாரிகள் rdafdமடக்கியிருக்காங்க. உடனே அந்த குடோனுக்கும் விசிட் அடிச்சிப் பார்த்திருக்காங்க. அங்க பல ஆயிரம் டன் அளவுக்கு இருந்த தாது மணல் முழுதாகக் கடத்தப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டதைப் பார்த்து, அதிர்ச்சி அடைஞ் சிருக்காங்க. இதுக்காக கலெக்டர் அனுமதி கொடுத்த மாதிரி, அவர் கையெழுத்தையும் போர்ஜரியா போட்டிருக்காங்களாம். வைகுண்டராஜனின் இந்த வித்தைகளுக்கு உதவியாக இருந்தவர் உளவுத்துறை உயரதிகாரியாம்...''”

"முதல்வர் ஸ்டாலின் கான்வாயை பொதுமக்கள்கூட நிறுத்தக்கூடிய சூழலில், அவருக்கான பாதுகாப்பு பணியில் போலீஸ் காட்டும் கெடுபிடி குறித்து போலீஸ் தரப்பிலேயே விவாதமாகுதே?''”

"ஆமாங்க தலைவரே, ஜெ’ முதல்வராக இருந்தபோது, அவரது கான்வாய் செல்லும் வழியில், மணிக்கணக்கில் ட்ராஃபிக்கை நிறுத்தி வச்சி, பொதுமக்களின் வெறுப்பை அதிகாரிகள் உருவாக்கினாங்க. முதல்வர் ஸ்டாலின் அந்த மாதிரி நெருக்கடியை உருவாக் கக்கூடாதுன்னு சொல்லி யிருக்காராம். இருந் தாலும், அவர் கான்வாய் போகும்போது, சாலை ஓரங்களில் மக்களை நிற்க விடாமல் துரத்துறாங்களாம். அதேபோல், அவர் கான்வாய் வருவததற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே 10 அடிக்கு ஒரு போலீஸை தேமேன்னு நிறுத்தி வைக்கிறாங்க. இதன்மூலம், காவல்துறை கச்சிதமாக இயங்குதுன்னு முதல்வரிடம் காட்டிக்க சில உயரதிகாரிகள் நினைக்கிறாங்களாம். இதை முதல்வர் கவனிக்கணும்னு, டிபார்ட்மெண்ட்டில் இருக்கும் ஒரு சிலரே சொல்றாங்க.''

"நானும் ஒரு முக்கியமான தகவலை உன் மூலம் பகிர்ந்துக்கறேன். சென்னை ஆர்.ஏ.புரம் லீலா பேலஸுக்கு அருகே உள்ள ’ரேடியோ ரூம்’ என்கிற பார் மீது பலரின் கவனமும் விழுந்திருக்கு. காரணம், இங்கு அரசியல்வாதிகளின் வாரிசுகளும், இளம் ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அதிகமாகக் கூடறாங்க. அடிக்கடி அங்கே சர்ச்சையும் மோதல்களும் ஏற்படுவது உண்டு. பொது முடக்கத்தால் சற்று அமைதியாக இருந்த இந்தப் பகுதி, இப்ப சாலையோரம் வரிசையாக நிறுத்தப்படும் வாகனங்களாலும், தாறுமாறான டிரைவ்களாலும், ரொம்பவும் பரபரப்பாக் காட்சி தருது. இதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை ரெசார்ட்டுகளிலும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிகம் தள்ளாடுகிறார்கள். டூட்டி முடிந்ததும் மது அருந்துவது அவரவர்களின் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும், பொதுவான இடங்களுக்கு வந்து மது அருந்திச் செல்வது ஏதேனும் விபரீதத்தை உருவாக்கலாம்ன்னு சமுகநல ஆர்வலர்கள் எச்சரிக்கிறாங்க.''”