சமீபத்தில் வெளியான இரு தீர்ப்புகள் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளன. ஒரு வழக்கில், உயிருக்குயிராய் நேசித்த காதல னுக்கு கசாயத்தில் விஷம் கலந்துகொடுத்து கொலைசெய்த காதலிக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மற்றொரு வழக்கில், கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி ஜூனியர் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து, கொலைசெய்த கொலைகாரனுக்கு சியல்டா நீதிமன்றம் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
திருவனந்தபுரம் பாற சாலையைச் சேர்ந்த ஜெய ராஜ்லிபிரியா தம்பதியினரின் மகன் ஷாரோன்ராஜ் குமரி மாவட்டம், நெய்யூரிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தபோது, அழகியமண்டபத்திலுள்ள கல்லூரி ஒன்றில் எம்.ஏ. ஆங்கிலம் படித்துவந்த களியக்காவிளை கிரீஷ்மாவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறினார்கள். வெவ்வேறு மதம் மற்றும் ஜாதியைச் சேர்ந்த இவர்களுக்குள் 2021லில் காதல் மலர, அதன் பிறகு ஒரே பைக்கில் இருவரும் கல்லூரி செல்வதும் தனிமையில் சந்திப்பதுமாகத் தொடர்ந்தது.
இந்த நிலையில் இருவரும் பைக்கில் சென்றது கிரீஷ்மாவின் தாய்மாமன் நிர்மல்குமாரின் கண் ணில் படவே, கிரீஷ்மாவை பெற்றோர் கண்டித்த துடன் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கவும் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் சம்மதிக்காத கிரீஷ்மா, அதன்பிறகு பெற்றோர், நெருங்கிய உற வினர்களின் அறிவுரைகளைக் கேட்டு மனம்மாறி னாள். இந்நிலையில்தான்... ஷாரோன்ராஜை விஷம் கொடுத்து கொலை செய்த குற்றத்துக்காக கிரீஷ்மாவுக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்.எம்.பஷீர் மரண தண்டனை கொடுத்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த வழக்கின் பின்னணி குறித்தும், அது கடந்துவந்த பாதை குறித்தும் விசாரணை அதிகாரியாக இருந்த திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி. ஷில்பா (தற்போது காசர்கோடு எஸ்.பி. ஆக உள்ளார்) கூறும்போது, “"இருவரின் காதலில் ஜாதி, மதம்தான் கிரீஷ்மாவின் பெற்றோருக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை சுட்டிக்காட்டியே வெறுப்பை வளர்த்துள்ளனர்.
தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை ஷாரோன் ராஜிடம் சொல்லாமல் தொடர்ந்து காதலிப்பது போல் நடித்து நெருங்கிப் பழகிவந்தார். அவனுக்குத் தெரியாமலே அவனை ஸ்லோபாய்சன் மூலம் கொலை செய்யவேண்டும் என முடிவுசெய்து நான்குமுறை மேங்கோ ஜூஸில் டோலா மாத்திரையை கலக்கிக் கொடுத்திருக்கிறாள் கிரீஷ்மா. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில்தான் 14-10-2022 அன்று காலை 10 மணிக்கு கிரீஷ்மா ஷாரோன் ராஜுக்கு போன்செய்து "வீட்டில் யாருமில்லை... சந்தோஷ மாக இருக்கலாம்' என்று கூறியதையடுத்து அங்கு சென்றார் ஷாரோன்ராஜ். அதற்குமுன் வீட்டுக்கு வரும் ஷாரோன்ராஜை கொலை செய்வதற்காக வீட்டில் கசாயம் காய்ச்சி, அதில் விஷத்தைக் கலக்கி பெட்ரூமில் வைத்திருந்திருக்கிறாள்.
வீட்டுக்கு வந்தவனிடம், கசாயத்தை குடித் தால் உடல் களைப்பு இருக்காது எனக்கூறி குடிக்க வைத்திருக்கிறாள். அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த ஷாரோன்ராஜ் வாந்தியெடுத்த நிலையில்... அவனை அங்கு அழைத்துச்சென்ற நண்பர் ரெஜி மூலம் வீடு திரும்பியிருக்கிறார் ஷாரோன்ராஜ்.
அன்று மாலை ஷாரோன்ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்ததால் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ய, மருத்துவர்கள் உடலில் விஷம் கலந்திருப்பதை உறுதிசெய்தனர். 25-ம் தேதி ஷாரோன்ராஜ் இறந்தார்.
ஷாரோன்ராஜ் கடைசிவரை கிரீஷ்மாவை காட்டிக் கொடுக்கவில்லை. எங்களுடைய விசா ரணையில்தான் கிரீஷ்மா விஷம் கொடுத்தது தெளி வானது. விசாரணைக்கு அழைத்தபோது தன்னு டைய செல்போனில் கிரீஷ்மா அனைத்தையும் அழித்துவிட்டு வந்தாள். அதையெல்லாம் ரெக்கவரி செய்தபோது, 4 நாட்களில் இரண்டாயிரம் முறை கிரீஷ்மா வாட்ஸ்அப் சாட் செய்திருந்தது தெரியவந்தது. எந்த மாதிரி கொலை செய்யலாம் என்று யூடியூப்பில் தேடிப் பார்த்திருக்கிறாள்.
அவர்கள் தனிமையில் இருந்தபோது எடுத்த 100-க்கும் மேற்பட்ட போட்டோக்கள், 25 வீடியோக் கள் இருந்தன. ஷாரோன்ராஜை கொலை செய்ய கிரிஷ்மா எடுத்த ஒவ்வொரு முயற்சியிலும் அவருடைய தாயார் சிந்துக்கும் தாய்மாமன் நிர்மல்குமாருக்கும் தொடர்பிருக்கிறது. இதில் கிரீஷ்மாவின் தாயார் சிந்துவை கோர்ட் விடுதலை செய்திருந்தாலும், மேல்முறையீட்டில் சிந்துவுக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும்''’என்றார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் வினித்குமார் கூறும்போது, “"இது அபூர்வத்திலும் அபூர்வமான வழக்கு. சமர்ப்பிக்கப்பட்ட 48 ஆதாரங்களும் பல மாக இருந்தன. அவனுடன் படித்த மாணவர்கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் என 105 சாட்சிகளும் முமு ஒத்துழைப்பு கொடுத்தனர். டிஜிட்டல் ஆதாரங்கள் நம்பிக்கைதரும் விதமாக இருந்தன. இதனால்தான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடிய கிரீஷ்மாவுக்கு தோல்வி கிடைத்தது'' என்றார். தீர்ப்பு கேட்க வெளியே நின்றுகொண்டி ருந்த ஷாரோன்ராஜின் தாயார் பிரியாவை உள்ளே அழைத்து "தீர்ப்பு வழங்குகிறேன்' எனக் கூறி நீதிபதி தண்டனையை அறிவித்ததும் அழுத பிரியா, “"என் மகனுக்கு நீதி கிடைத்துவிட்டது. கிரீஷ்மா வின் தாயாரை விட்டதுதான் வருத்தமாக உள்ளது''’என்றார்.
கிரீஷ்மாவும் அவருடைய தாயார் சிந்துவும் கோர்ட்டுக்கு வருவதற்கு முன் நெய்யாற்றின் கரை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நீதிமன்றத்தின் பின்வாசல் வழியாக வந்தனர். தீர்ப்புக்கு முன், "தான் முதுகலை பட்டம் படித்த இளம்பெண் என்றும், இன்னும் படிக்க வேண்டுமென்றும்' கதறி அழுத கிரீஷ்மா, தீர்ப்புக்குப் பின் நீதிமன்றத்தின் ஒரு மூலையில் தண்டனையைக் கேட்டு கொஞ்சமும் அழாமல் மௌனமாக தலை குனிந்தபடியே இருந்தார்.
இன்னொரு வழக்கான மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி ஜூனியர் மருத்துவரான இளம்பெண் 2024, ஆகஸ்டு 9-ஆம் தேதி அதே மருத்துவமனையின் கருத்தரங்க அரங்கில் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. வழக்கின் தொடக்கம் முதலே மேற்குவங்க அரசின் மீது அதிருப்தி நிலவியது. பெண்ணின் பெற்றோர், காவல்துறை நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் இறங்க... மாநிலமே ஸ்தம்பித்தது. இந்த வழக்கில் மாநில காவல்துறைக்கு தன்னார்வ உதவிகளைச் செய்யும் ஊர்க்காவல் படை போன்ற அமைப்பில் பணிபுரியும் சஞ்சய் ராய் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
பிரேதப் பரிசோதனையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டது தெரியவந்தது. போராட் டத்தின் போது ஒரு கும்பல் மருத்துவமனையில் நுழைய முயன்றதும், போராட்டக்காரர் களைத் தாக்கியதும் சர்ச்சை யானது. அது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் என்றும், பா.ஜ.க. குண்டர் கள் என்றும் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டனர்.
இதையடுத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மாநில அரசின் எதிர்ப்பைப் புறந்தள்ளி சி.பி.ஐ.க்கு மாற்றியது. இந்த வழக்கில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப்கோஷ், போலீஸ் அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோரும் கைதுசெய்யப் பட்டனர். இருவருக்கும் வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஊழல் புகார் காரணமாக, சந்தீப்கோஷ் சிறையிலிருந்து வருகிறார்.
கொல்கத்தா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. சி.பி.ஐ. தரப்பு, கொலையின் தீவிரம் காரணமாக குற்றவாளி சஞ்சய் ராய்க்கு தூக்குத் தண்டனை விதிக்க வலியுறுத்தியது. அதேசமயம், சஞ்சய் ராய் தன் மீதான குற்றத்தை மறுத்தார்.
இருதரப்பு வாதங்களும் முடிவுபெற்ற நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிர்பன் தாஸ் ஜனவரி 20-ஆம் தேதி தீர்ப்பளித் தார். தனது தீர்ப்பு உரையில், "11 ஆதாரங்கள் மூலம் குற்றத்தை சஞ்சய்தான் செய்தார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது அரிதினும் அரிதான வழக்கல்ல. எனவே தூக்குத் தண்டனை வழங்க முடியாது. குற்றவாளி சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். அவர் சாகும் வரை சிறையில் இருக்கவேண்டும்''’என்றதுடன் ரூ 50,000 அபராதமும் விதித்தார்.
தவிரவும், உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்துக்கு மேற்குவங்க அரசு ரூ.17 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், “"வழக்கை சி.பி.ஐ.க்குப் பதில் கொல்கத்தா போலீஸ் விசாரித்திருந்தால், மரண தண்டனையை உறுதி செய்திருப் போம். இந்தத் தீர்ப்பால் நான் திருப்தி அடையவில்லை''” என்றிருக்கிறார் மம்தா. மேலும் மேற்குவங்க அரசு உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய முடிவெடுத் துள்ளது.
-மணிகண்டன், கீரன்