னைவரும் உயிரிழந்துவிட்டனர். விமானம் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியொன்றில் மோதியதால், விடுதியில் மதிய நேரம் சாப்பிட்டுக் கொண்டிருந்த அக்கல்லூரியின் 50 மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதுதவிர மருத்துவர்கள், கல்லூரிப் பணியாளர்கள், மெஹ்னானி நகர்வாசி கள் 23 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 274 ஆக உயர்ந் துள்ளது.

விஜய்ரூபானி -குஜராத் முன்னாள் முதல்வர் விமான விபத்து ஏற்பட்டதும்... அந்த விமானத்தில் ரூபானி லண்டன் கிளம்பினார் என் றொரு தகவல் கிளம்பியது. அதேசமயம், இல்லை ரூபானி அந்த விமானத்தில் பயணிக்கவில்லை, மற்றொரு விமானத்தில்தான் பயணிக்கிறார் என பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் விபத் துக்குள்ளான விமானத்தில் பயணித் தவர்களின் பட்டியல் வெளியாக, அதில் விஜய் ரூபானி பெயரும் இடம்பெற்றிருப்பது வெளியானது. சிறிது நேரத்துக்குப்பின் விஜய் ரூபானி படுகாயங்களுடன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டிருப்பதாக அடுத்தகட்ட தகவல் வெளியானது. சற்றுநேரத்தில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. விஜய்ரூபானி, லண்டனில் தனது மகள் வீட்டி லிருக்கும் மனைவி அஞ்சலி ரூபானியை அழைத்து வர கிளம்பியிருக்கிறார். ஆனால் அதற்குமுன் காலன் அவரை அழைத்துக்கொண்டான்.

flight

ராஜ்கோட் மேயராக வெற்றிபெற்றதன் மூலம் குஜராத் அரசியலில் கவனம் ஈர்த்தவர் விஜய் ரூபானி. பின் 2006-ல் ராஜ்யசபா எம்.பி., 2016-ல் குஜராத் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர், குஜராத் போக்குவரத்துத்துறை அமைச்சர், 2016-ல் குஜராத் முதல்வர் என அவரது கிராப் உயர்ந்தபடியே சென்றது.

ss

Advertisment

அதேசமயம் சர்ச்சைகளும் அவர் மீது உண்டு. குஜராத் முதல்வர் விஜய்ரூபானியின் நிறுவனம், பங்குச் சந்தையில் செய்த முறைகேடு களுக்காக செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா, ரூ 15 லட்சம் அபராதம் விதித்தது. கொரோனா காலகட்டத்தில், கொரோனாவை சரிவரக் கையாளாதது, கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை யைக் குறைத்துக் காண்பித்தது போன்றவை அவரது பெயரைப் பாதித்தன.

ff

பிரதிக்ஜோஷி குடும்பம்

Advertisment

இந்த விமான விபத்தில் பலியான ஒரு குடும்பத்தினரின் செல்பி படம்தான் காண்போரின் மனதை கனக்கச் செய்வதாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ராபனஸ்வாரா பகுதியைச் சேர்ந்த மென்பொருள் நிபுணரான பிரதிக்ஜோஷி, கடந்த ஆறு வருடங்களாக லண்டனில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். அவரது மனைவி கோமி வியாஸ், ராஜஸ்தானில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகள் மிராயா, இரட்டை குழந்தைகளான மகன்கள் நகுல், பிரத்யுத் ஆகி யோர் உள்ளனர். பிரதிக்ஜோஷி, அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து தனது குடும்பத்தினரோடு சிறிது நாட்கள் தங்கிச்செல்வது வழக்கம். இப்படி பிரிந்து வாழ் வதற்கு முற்றுப்புள்ளி வைப் பதற்காக, அனைவரும் குடும்பத் தோடு லண்டனில் குடியேறு வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அதற்கான டாகுமெண்ட் வேலைகளையும் வெற்றிகரமாக முடித்து, தனது குடும்பத்தை லண்டனுக்கு அழைத்துச்செல்லும் குதூகலத் தோடு இந்தியா வந்திருந்தார். அவரது மனைவியும் தனது மருத்துவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு கணவரோடு லண்டனுக்கு கிளம்பினார். ஏர் இந்தியா விமானத்தில் ஏறியதுமே மகிழ்ச்சியோடு ஒரு செல்பியை எடுத்து தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பிவைத்தனர். இவ்விபத்தில் அனைவரும் பலியான நிலையில், இந்த செல்பி வைரலாகி அனைவரையும் கலங்கடித்துவருகிறது.

ff

ஏர்ஹோஸ்டஸ் நந்தோய் சர்மா,

லனுந்தெம் சிங்சன்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத் தில், மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தோய் சர்மா என்ற 20 வயது விமானப் பணிப்பெண்ணும் பலியானார். நந்தோய் சர்மா கல்லூரியின் இறுதியாண்டு படிக்கும்போதே ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார். கிடைத்தால் அதிர்ஷ்டம் என்றிருந்தவருக்கு முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சி யடைந்திருக்கிறார். இந்த பணியில் சேர்ந்து மூன்றாண்டு ஆகும் சூழலில், தற்போது விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நந்தோய் சர்மா பலியானதை மணிப் பூர் முன்னாள் முதல்வரான பைரோன் சிங் தனது எக்ஸ் தளத்தில் உறுதிசெய்துள்ளார். அதைக்கண்டு குடும்பத் தினர் துடி துடித்துள்ளனர். அப்பெண்ணின் சகோ தரியிடம், இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி வந்துவிடுவேனென்று சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார். மேலும், விமானத்தில் ஏறிய பின்னரும் சகோதரி யோடு சாட் செய்திருக்கிறார். 'நான் லண்டனுக்குச் செல்லவுள்ளேன். இன்னும் சில நிமிடங்களில் விமானம் கிளம்பவுள்ளது. அதன்பின் உன்னோடு சாட் செய்ய இயலாது' என்று குறிப்பிட்டிருக்கிறார். லண்டனுக்கு செல்வதாகச் சொல்லிவிட்டு இந்த உலகை விட்டே சென்றுவிட்டாளே என்று அவரது சகோதரி கதறியழுதது அனைவருக்கும் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தை சேர்ந்த லனுந்தெம் சிங்சன் என்ற 20 வயது பணிப்பெண்ணும் இந்த விபத்தில் உயிரிழந் தார். இவர் கடந்த 2024ஆம் ஆண்டில் தான் இந்த வேலையில் சேர்ந்திருந்தார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்குமுன் காலமான தால், இவரையும், மூன்று சகோதரர்களையும் இவரது தாய்தான் வளர்த்துவந்துள்ளார். ஒருநாள் முன்பாக பணிக்கு கிளம்பும்போது, "நான் அகமதாபாத்திலுள்ள அலுவலகத் துக்குச் செல்கிறேன்'' என்று தாயிடம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். எப்படி யாவது மகள் உயிருடன் திரும்பக்கிடைப்பார் என எதிர்பார்த்திருந்த தாய்க்கு அதிர்ச்சியே மிஞ்சியது.

ss

ரோஷினி ஷங்கரி

மகாராஷ்டிராவிலுள்ள தானே மாவட்டத்திலுள்ள டோம்பிவாலி நகரைச் சேர்ந்த ரோஷினி ஷங்கரி என்ற விமானப் பணிப்பெண்ணும் பலியானார். அவரது பெற்றோர் ராஜேந்திரா, ராஜஸ்ரீ, சகோதரர் விக்னேஷ். ரோஷினி விமானப் பணிப் பெண்ணாக மட்டுமல்லாது, இன்ஸ்டாகிராம் பிரபலமாகவும் இருந்திருக்கிறார். இவரது பக்கத்தை 54,000 பேர் பின்தொடர்கிறார்கள். சமீபத்தில் அவரது பட்டமளிப்பு நாள் விழாவையொட்டி, ஏர் இந்தியா விமானத்தினுள் சக பணிப்பெண்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடி ரீல்ஸ் வெளியிட்டிருக்கிறார்.

ரஞ்சிதா கோபகுமாரன், செவிலி -கேரளம்

ரஞ்சிதா கோபகுமாரன் தனது செவிலியர் பணியை குஜராத்தில்தான் தொடங்கினார். அவரது முடிவும் குஜராத்திலேயே அமைந்திருக்கிறது. ரஞ்சிதாவுக்கு இந்துசூடன் என்ற மகனும், இதிகா என்ற மகளும் இருக்கிறார்கள். தாயார் துளசி. கணவர் கோபகுமாரன். தற்சமயம் வடக்கேகாவாலா என்ற ஊரில் வசித்து வருகிறார். நர்ஸிங் படிப்பு முடித்த அவர் குஜராத் மருத்துவமனையில்தான் முதன்முதலில் நர்ஸாக வேலையைத் தொடங்கியிருக்கிறார். பின் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்திருக்கிறார். பிறகு அவர் சலாலா, ஓமன் என வெளிநாடுகளுக்கு வேலை பார்க்கச் சென்றிருக்கிறார். கடந்த எட்டு மாதங்களாகத்தான் ரஞ்சிதா லண்டனில் வேலை பார்த்து வருகிறார்.

அதேசமயம், கடந்த வருடம் மாநில அரசின் சுகாதாரத் துறையில் அவருக்கு வேலை கிடைத் திருக்கிறது. கான்ட்ராக்டில் கையெழுத்திட்டி ருப்பதால், லண்டன் வேலையை இடையில் விட முடியாததால், நீண்ட விடுப்பில் இருந்தபடியே வெளிநாட்டு வேலையையும் தொடர்ந்திருக்கிறார். தனது அரசு வேலையைப் புதுப்பிப்பதற்கான படிவங்களில் கையெழுத்திடுவதற்காகவே இப்போது கேரளா திரும்பியிருக்கிறார். அதில் கையெழுத்திட்டுவிட்டு சில நாட்கள் குடும்பத்துடன் செலவிட்டு, லண்டன் திரும்பவிருந்த நிலையில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கிறது.

தனது செவிலியர் பணி மூலம் சம்பாதித்த பணத்தில் புது வீடு கட்டி வரும் அவர், விரைவில் தன் குழந்தைகளுடன் அதில் குடியேறவும் சொந்த நாட்டுக்குத் திரும்பி வாழ்க்கையில் செட்டிலாகவும் கனவு கண்டுகொண்டிருந்தார். அவர் கனவு கனவாகவே போய்விட்டது என்கிறார்கள் அவரது உறவினர்கள்.

பூமி சவுகான்

குஜராத்தின் அங்கலேஷ்வர் நகரைச் சேர்ந்தவர் பூமி சவுகான். அன்றைய தினம் லண்டன் செல்வதற்காக தன் சொந்த ஊரிலிருந்து அகமதாபாத் வந்திருந்தார். அகமதாபாத்தை சரியான நேரத்துக்கு வந்தடைந்த சவுகான், ஒரு டாக்ஸியில் ஏர்போர்ட்டுக்குக் கிளம்பினார். வழியில் போக்குவரத்து நெரிசல். போக்குவரத்து நெரிசலைத் திட்டிக்கொண்டே விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, அங்குள்ள அதிகாரிகள் விமானத்தில் ஏறுவதற்கான நேரம் கடந்துவிட்டது. பத்து நிமிடம் தாமதம். இனி அனுமதிக்கமுடியாது எனச் சொல்லியிருக்கிறார்கள். எத்தனையோ கெஞ்சிக்கேட்டும் அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டுவிட்டது. பண மும் போச்சு… பயண மும் நடக்கவில்லை யென்று மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார் பூமி சவுகான் அடுத்த சில நிமிடங்களில் கடவுள்தான் தன்னைத் தாமதப்படுத்தி விபத்திலிருந்து காப்பாற்றியதாகப் ஊடகங்களில் பேசிவருகிறார்.

குஷ்பு ராஜ்புரோகித்

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா மாவட்டம் அரபா கிராமத்தைச் சேர்ந்தவர் குஷ்பூ ராஜ் புரோகித். இவருக்கு இந்த வருடம் ஜனவரியில் தான் திருமணம் ஆனது. இவரது கணவர் மன்பூல் சிங், லண்டனில் படித்துவரும் மாணவர். திருமணத்துக்குப் பின் கணவர் லண்டன் சென்றுவிட, தன் சொந்த வீட்டில் வசித்துவந்த குஷ்பூ, முதன்முறையாக தன் கணவர் மன்பூல் சிங்கை லண்டனில் சென்று சந்திப்பதற்காகக் கிளம்பினார். அகமதாபாத் வந்தவர், விமான நிலையம் முன்பாக கடைசியாக உறவினர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம்தான் அவரது கடைசிப் புகைப்படம் என்பதை அறியவில்லை.

அர்ஜூன் பட்டாலியா

சில சமயங்களில் சிலரோடு விதி விளை யாடும். அப்படி ஒரு ஆட்டத்துக்கு சமீபத்தில் தேர்ந்தெடுத்த பெயர்தான் அர்ஜூன் பட்டாலியா. அர்ஜுன் லண்டனில் குடியேறிய இந்தியர். இவரது மனைவி பாரதிபென். இவர்களுக்கு 8 மற்றும் 4 வயதில் இரு பெண் குழந்தைகள்.

பாரதிபென்னுக்குத் திடீரென உடல்நலமில்லாமல் போய் இறந்தும் போனார். தனது இறப்புக்கு முன், அஸ்தியை தனது சொந்த ஊரில் கரைக்கவேண்டுமென்ற கடைசி ஆசையை வெளியிட்டிருக்கிறார். எனவே குஜராத்தின் வாடியா பகுதிக்கு வந்து நர்மதை நதியில் அஸ்தியைக் கரைத்து இறுதிச் சடங்குகளைச் செய்திருக்கிறார் அர்ஜுன். பின் லண்டனுக்குத் திரும்ப விமானம் ஏறியவர், அகமதாபாத்தையே தாண்ட வில்லை. அர்ஜுன் பட்டாலியாவின் குழந்தைகள் தாயையும், தந்தையையும் இழந்து லண்டனில் நிர்க்கதியாய் நிற்கிறார்கள்.

ss

கலங்கவைத்த லண்டன் பயணிகள்!

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில், இரண்டு வெளிநாட்டவர்கள் விமானப் பயணத்துக்கு முன்னதாக வெளியிட்டிருந்த ரீல்ஸ் ஒன்றும் வைரலாகியிருக்கிறது.

இங்கிலாந்தை சேர்ந்த ஜேமி ரே மீக், ஃபியோங்கல் கிரின்லா மீக் இருவரும் லண்டனில் ஆன்மிக நல நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்கள். இந்தியாவில் ஆன்மிகம் சார்ந்த தேடலுக்காக 10 நாள் பயணமாக வந்தவர்கள், அகமதாபாத்தி லிருந்து விமானத்தில் லண்டன் செல்வதற்கு முன்னதாக ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். அதில், "நாங்கள் ஏர்போர்ட்டில் இருக்கிறோம்... விமானம் ஏறவிருக்கிறோம், குட் பை இந்தியா. இன்னும் 10 மணி நேரத்தில் இங்கிலாந்தில் இருப்போம். கோயிங் பேக், ஹேப்பிலி... ஹேப்பிலி...… ஹேப்பிலி'' என்று மகிழ்ச்சி ததும்ப பேசியிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் இந்த உலகிற்கே குட்பை சொல்லப்போவது தெரியாமல் வெளியிட்டி ருந்த ரீல்ஸ் வீடியோ பலரையும் கலங்கடிப்பதாக இருந்தது.

அருண்பிரசாந்த்

விபத்தால் விமானத்தில் பயணித்தவர்களுக்கு மட்டுமல்லா மல், அது சென்று மோதிய பி.ஜே. மருத்துக் கல்லூரியின் விடுதியில் அப்போது உணவருந்திக் கொண்டி ருந்தவர்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்நிகழ்வில் உயிர் பிழைத்த மாணவர்களில் ஒருவர் தமிழகத் தைச் சேர்ந்த அருண்பிரசாந்த்.

அவர் கூறுகையில், "விடுதி யின் 5-வது மாடியில் நண்பர் களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது பெரும் ஓசையுடன் கட்டடத்தின் மீது ஏதோ விழுந்தது. நாங்கள் இருந்த மாடியே புகைமூட்டமானது. என்ன நடக்கிற தென்றே புரியவில்லை. பீதியில் அங்கிருந்து முதல் தளத்துக்கு ஓடிவந்து, கீழே குதித்தேன். பிறகுதான் விமான விபத்து குறித்துத் தெரிய வந்தது'' என்கிறார்.

பலியான சகோதர, சகோதரி!

ராஜஸ்தான் உதய்ப்பூரை சேர்ந்த மார்பிள் வியாபாரி சஞ்சீவ் மோடி. இவரது மகன் சுப் மோடி, லண்டனில் பி.டெக். கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துவருகிறார். இன்னொரு மகள் சாகன் மோடி, காந்தி நகரிலுள்ள கல்லூரியில் பி.பி.ஏ. படிக்கிறார். சகோதர, சகோதரிகள் விடுமுறைக்கு லண்டனை சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டு, அகமதா பாத்திலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து, விபத்தில் பலியானது அவர்களின் குடும்பத் தினரிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு பயணிக்கும் ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் குஜராத் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு இழப்பீடு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

______________

விபத்துக்கு என்ன காரணம்?

பறவை மோதிவிட்டது, விமானத்தின் இரண்டு என்ஜின் களும் திடீரென இயங்கவில்லை, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக எடையிருந்தது என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

ss

போயிங் ட்ரீம்லைனர் 787 விமானத்தின் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகவே சந்தேகம் எழுப்பிவந்திருக்கின்றனர். ஆனால் அந்த விமான நிறுவனத் தால் அது உதாசீனம் செய்யப் பட்டே வந்திருக்கிறது. போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர் ஜான் பார்னெட். இவர் குவாலிட்டி மேனேஜராகவும் பதவிவகித்துள்ளார். 2019லில் பணி ஓய்வுக்குப் பின் பி.பி.சி.யுடனான நேர்காணல் ஒன்றில், "விமான தயாரிப்பு தாமதமாவதைத் தடுக்க, நிர்வாகம் அவசரப்படுத்தும்போது தரம்குறைவான விமானப் பகுதி களை தொழிலாளர்கள் பொருத் துவது உண்டு'’ என்று தெரிவித் திருக்கிறார். ஓய்வுபெற்ற பின் கம்பெனிக்கு எதிராக ஒரு வழக்கு கூட தொடுத்திருந்தார். 2024லில் நிறுவனத்துக்கு எதிராக சாட்சிய மளித்துவிட்டு வந்த அவர், ஏனோ தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மரணமடைந்தார். தவிரவும் அந்த விமானத்தின் ஆக்ஸிஜன் மாஸ்க்குகளில் மிகவும் அபாய கரமான பிரச்சனைகள் இருந்த தாகவும், நான்கில் ஒரு மாஸ்க் வேலைசெய் யாமல் போ கும் அபாயம் இருந்ததாக வும் தெரிவித் திருந்தார். பழைய போயிங் விமானங்களி லிருந்த தரக்குறைவான பகுதி கள், புதிய போயிங் விமானங்களில் பொருத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதனை போயிங் நிறுவனம் மறுத்திருந்தது.

மற்றொருவரான போயிங் நிறுவன எஞ்சினியரான சாம் சலேபூர், "போயிங் விமானங்களில் 787 ட்ரீம்லைனர் விமானங்களை உலகளவில் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். விமானங்களை இணைக்கும்போது ஃபியூஸ்லிலேஜ் பாகங்களை இணைக்கும் போது இடை வெளிகளை சரிவர நிரப்பத் தவறிவிட்டதாக வும், இதனால் விமானம் அதன் ஆயுட் காலத்துக்கு முன்பே செயலிழக் கும்'’ எனவும் தெரிவித்திருந்தார். இதையும் போயிங் நிறுவனம் புறக்கணித்துவிட்டது.

சமீபத்திய டேரிஃப் விவ காரத்தையடுத்து அமெரிக்காவின் போயிங் விமானங்களை சீன விமான நிறுவனங்கள் வாங்கக் கூடாதென்று சீனா உத்தர விட்டிருந்தது. நிறைய நாடுகளும் போயிங்கிலிருந்து நவீன விமா னங்களுக்கு மாற ஆரம்பித்திருக் கின்றன. ஆனால் அத்தனைக்கும் பிறகும் போயிங் விமானங்கள் பறந்துகொண்டுதான் இருக் கின்றன.

விமானத்தில் நம் இஷ் டத்துக்கு எடைகளை ஏற்றிவிட முடியாது. அதைக் கண்காணிக்கவும் வரையறுக்கவும், பரா மரிக்கவும் நிறுவனங்கள் உண்டு. இந்தியாவில் செலிபி எனும் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தது. அகமதாபாத் ஏர்போர்ட்டையும் இந்நிறுவனம்தான் பராமரித்து வந்தது. 2032 வரை இந் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் இருக் கிறது.

ஆனால் இது துருக்கி நிறுவனம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சமீபத்தில் நடைபெற்ற உரசலில், துருக்கி பாகிஸ்தான் பக்கம் நின்றது. இதையடுத்து இந்நிறுவனத்தை அதன் ஒப்பந்த காலம் முடியும் முன்பே இந்தியா வெளி யேற்றியது.

அதற்குப் பதில் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் நிறு வனத்துக்கு அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்தத் துறையில் அனுபவமில்லாத நிறுவனம் இது. எனவே சில நிபுணர்கள், அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் நிறுவனம் அனுபவ மின்மை காரணமாக அளவுக்கு மீறி சுமையேற்றியது காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் கிளப்புகிறார்கள்.

எது எப்படியோ, எதிர் காலத்தில் இத்தகைய விபத்து களைத் தவிர்ப்பதற்கான வழி வகைகளில் அரசாங்கமும் விமான நிறுவனங்களும் மும்முரம் காட்டவேண்டும்.