மிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக தாமரைக்கண்ணன் இருந்தார். அவருக்குப் பதில் சங்கர் என்பவர் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார். சங்கரின் செயல்பாடுகள் மிகக்கடுமையான அதிருப்தியை தமிழகப் போலீசார் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

sankar IPS

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் முழுக்க முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிக்கை தாக்கல், இவற்றோடு காவல் நிலையத்துக்கு வரும் மக்கள் நம்பிக்கையோடு வரவேண்டும் என காவல்துறைக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். இதற்கு முக்கியக் காரணம் சங்கர்தான். இந்தக் கூட்டத்திற்கு முன்பு காவல்துறை உயரதிகாரிகளின் கூட்டம் ஒன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதல்வர் அந்தக் கூட்டத்தில் காணொளி வழியாகக் கலந்துகொண்டார். அதில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் ஆகியவை அதிகம் நடந்த மாவட்டங்களைப் பிரித்தெடுத் தனர். அந்த மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளைக் கூப்பிட்டு தலைமைச் செயலாளர் இறையன்புவும், உள்துறைச் செயலாளர் பணீந் திர ரெட்டியும், டி.ஜி.பி. மற்றும் உளவுத்துறை தலைவர் முன்னிலையில் பேசினார்கள். அதில் முதலில் சிக்கியவர் கடலூர் எஸ்.பி.சக்தி கணேசன். "நீங்கள் எடப்பாடி ஆட்சியில் அவரைப் பெரிய கவுண்டர் என்றும் உங்களை சின்னக் கவுண்டர் என்றும் கூப்பிடுவார்களாமே'' என ஆரம்பித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏன் என வெளுத்தார்கள்.

Advertisment

தென்காசி எஸ்.பி. சாம்சன், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி எஸ்.பி.க்கள் என பல அதிகாரிகளைக் கடுமையாக வறுத்தெடுத்தார்கள். அவர்களிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கங்களை எழுதித் தரச் சொன்னார் உள்துறை செயலாளர்.

ss

Advertisment

தாமரைக்கண்ணன் ஏ.டி.ஜி.பி.யாக சட்டம் ஒழுங்குப் பிரிவைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது குற்றங்கள் நடந்தால் சமரசம் செய்யாது உடனே வழக்குப் போடு என்று சொல்வார். தாமரைக்கண்ணன் ஓய்வுபெற்ற பிறகு, தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு ஏ.டி.ஜி.பி. சங்கர் தினமும் நான்குமணி நேரம் டி.ஐ.ஜி.க்களையும், ஐ.ஜி.க்களையும் வீடியோ கான்பரன்சில் பேச வைப்பார். அவர்களிடம் தமிழகத்தில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான டேட்டாக்களைக் கேட்பார். இவரை ‘டேட்டா ஆபீசர்’ என்று காவல்துறையினர் அழைக்கிறார் கள். இவரிடம் பேசும் டி.ஐ.ஜி.க்களும் ஐ.ஜி.க்களும் தங்களுக்குக் கீழ் உள்ள எஸ்.பி.க்களிடம் பல மணி நேரம் வீடியோ கான்பரன்சில் பேசுகிறார்கள். அதன்பிறகு எஸ்.பி.க்கள் டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கூட்டத்தை நடத்துகிறார்கள். இதனால் தமிழகத்தில் எந்த எஸ்.பி.யும் எந்தக் குற் றம் நடந்தாலும் களத்திற்கு செல்ல முடியவில்லை.

டேட்டாக்கள் மூலம் தமிழகத்தின் குற்ற நிகழ்வுகள் குறைந்து விட்டது. அவர் பதவி ஏற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என அரசுக்குச் சொல்ல விரும்புகிறார் சங்கர். அதற்காக பல வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொல்கிறார். கொலைகளில், சந்தேகமான முறையில் குற்றவாளிகள் யார் என்று தெரியாத கொலைகளின் மீது கொலை வழக்கு என பதிவு செய்யாதீர்கள். அதை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யுங்கள். அதேபோல் கொலைமுயற்சி வழக்கு என தெளிவாகத் தெரிந்தாலும் அதை அடிதடி வழக்கு என பதிவு செய்யுங்கள் என்கிறார். இதனால் கொலை முயற்சி செய்தவர்கள் எளிதாக ஜாமீனில் வருகிறார்கள். அதேபோல் கும்பலாக வன்முறை செய்த வழக்குகளையும் எளிய பிரிவுகளிலான வழக்காகப் பதிவுசெய்யச் சொல்கிறார். இதனால் கொலை முயற்சி செய்தகுற்றவாளிகளைக் குண்டர் தடுப்புச் சட்டததில் கைது செய்ய முடிவதில்லை.

கொள்ளை மற்றும் வழிப்பறி செய்பவர்கள் மீது கடுமையான செக்சனில் வழக்குப் போட எஸ்.பி.க்களால் முடியாத நிலையை சங்கர் உருவாக்கி விட்டார். இதனால் கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி போன்ற குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என காவல்துறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகவே எழுதிக் கொடுத்திருக் கிறார்கள். இதைப் பார்த்து டென்சனான முதல்வர், காவல்துறையை எச்சரிக்கும் வார்த்தைகளை காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசினார். "நீங்கள் சங்கரின் பேச்சை ஏன் கேட்கிறீர்கள்? அவருக்கும் மேலே இருக்கக்கூடிய அதிகாரியான டி.ஜி.பி.யின் பேச்சைக் கேட்கவேண்டியதுதானே' என்று காவல்துறை அதிகாரிகளைக் கேட்டபோது, "நாங்கள் டி.ஜி.பி.யின் பேச்சைக் கேட்டால் சங்கர் எங்களைப் பழிவாங்கி விடுவார்.

அவர் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் மிக நெருக்கமானவர். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பத்து வருடமாக பல நல்ல பதவிகளில் இருந்தவர். எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்ததால் சேலம் கமிஷனராக அவரது ஆட்சிக் காலத்தில் கொடிகட்டிப் பறந்தார். அதன்பிறகு மேற்கு மண்டல ஐ.ஜி., வடக்கு மண்டல ஐ.ஜி., சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் என கோலோச்சினார். எடப்பாடி அவரை சி.பி.சி.ஐ.டி.க்கு அனுப்பி தி.மு.க. பிரமுகர் ஜெகத்ரட்சகனின் கல்லூரி நிலமோசடி வழக்கை விசாரித்து அவரை கைதுசெய்து சிறையில் அடைக்கச் சொன்னார். எடப்பாடியும் பா.ஜ.க.வும் செய்த இந்த முயற்சி நிறைவேற்ற பாடுபட்டவர் சங்கர். அப்படிப் பட்டவரை தமிழகத்தின் சட்டம்-ஒழுங்குப் பிரிவில் முக்கிய இடத்துக்குக் கொண்டுவந்து நியமித்து விட் டார்கள். பொதுவாக தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இவர் மத்திய அரசுப் பணிக்கு சென்றுவிடுவார். அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் தமிழ்நாட்டுக்கு வருவார். சங்கரின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானவையே' என்கிறார்கள் தமிழ்நாட்டு காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.