"கே.டி.ராகவன் வீடியோ, பிரதமர் மோடியை டென்ஷனாக்கிவிட்டது' என்கிறார்கள் டெல்லித் தரப்பினர். வீடியோ பற்றி மேலிடத்தின் சார்பில் முதலில் விசாரித்தவர் பா.ஜ.க.வின் தேசிய செயலாளரான பி.எல்.சந்தோஷ். கர்நாடகாவைச் சேர்ந்த பிராமணரான இவரிடம் அதே சமூகத்தைச் சேர்ந்த கே.டி.ராகவன், சாமி படத்தின் முன்பு செய்த காம லீலைகளைப் படமாக அனுப்பிவைத்தவர், கே.டி.ராகவனுக்கு போட்டியாக டெல்லியில் லாபி செய்துவரும் தமிழக பா.ஜ.க. இளைஞரணியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

dd

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இந்த ஓட்டல் அதிபர், பா.ஜ.க. தலைவர் ஒருவரின் பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது மாட்டிக்கொண்டார். அவரை நிர்மலா சீதாராமன் மூலமாக சிக்க வைத்தவர் கே.டி.ராகவன். அப்போதிருந்தே ராகவ னுக்கு எதிராக காய் நகர்த்தியவருக்கு வசமாக வாய்த்தது வீடியோ விவகாரம்.

பா.ஜ.க தலைவராக அண்ணாமலை யைக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டி, தமிழக சீனியர்களை ஓரங்கட்டியவரான பி.எல்.சந்தோஷ், இந்த வீடியோ விவகாரத் தில் அண்ணாமலையையும் ஓட்டல் அதிபரையும் வறுத்தெடுத்து விட்டா ராம். அண்ணாமலை உத்தரவில்தான் வீடியோ வந்தது என்பதை ஆஃப் செய்யும் வகையில், வீடியோவை வெளியிட்டவர்களுடன் பேசச் சொல்லியிருக்கிறார் சந்தோஷ். அதன்படி, ஒரு நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

Advertisment

dd

அப்போது, அண்ணாமலை அளித்த அறிக்கையை வாபஸ் பெறவேண்டும். வீடியோ வெளியிட்டவரையும் கே.டி.ராகவனையும் ஒன்றாக அமரவைத்து, இந்தப் பிரச்சினையை விசாரிக்க, பா.ஜ.க. அமைத்த மலர்க்கொடி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும். வீடியோவில் இடம் பெற்ற பெண்களை பேசவைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை ஊடகங்களுக்குத் தெரியும் வகையில் நடத்தவேண் டும் என வீடியோ வெளியிட்டவர்கள் தரப்பி லிருந்து கோரிக்கை எழுந்தது. கே.டி.ராகவனை சிக்க வைக்கும் வீடியோவுக்கு காரணமானவர்களே, அதை வெளியிட்டவரிடம் இத்துடன் நிறுத்திக் கொள் என வலியுறுத்த, சமாதானப் பேச்சு வார்த்தையில் மோதல் வெடித்தது.

அந்த மோதலின் எதிரொலியாகத்தான் அண்ணாமலையுடன் வீடியோ வெளியிட்டவர் பேச்சுவார்த்தை யின் ஆடியோ வெளியிடப்பட் டது. அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பி.எல்.சந்தோ ஷுக்கு, அண்ணாமலையின் எதிரிகள் அனுப்பி வைத்த னர். அண்ணாமலைக்கு தெரிந்தே தனது கவனத் துக்கு இந்த விவகாரத்தை கொண்டுவராமல் மறைத்தார் என்று புரிந்தது. மீடியாக்களை அண்ணாமலை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்ட துடன், மாவட்ட டூரில் இருக்கும் அவர், தலைநகர் திரும்புவதற்கும் தடை போட்டார் சந்தோஷ்.

Advertisment

இதற்கிடையே கே.டி.ராகவனுக்கு ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் ஆறுதல் கூறினர். அவரும், ட்விட்டரில் மோடியை வாழ்த்தி பதிவிட்டார். ராகவனின் ட்வீட்டுகளை நரேந்திரமோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றார் நிர்மலா சீதாராமன். கட்சியிலிருந்து ராஜினாமா செய்தவரால் போடப்படும் ட்வீட்களை வைத்து, ராகவன் விவகாரத்தை மோடியிடம் விளக்கி யுள்ளார் நிர்மலா. "பா.ஜ.க.வுக்கு எதிரான வீடியோ' என நிர்மலா சொன்னதைக் கேட்ட மோடி, பயங்கர டென்ஷனானார் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.

dd

"தமிழக பா.ஜ.க.வில் நடக்கும் காமலீலைகள் பற்றி விசாரியுங்கள். அடுத்தது யாரைப் பற்றிய வீடியோவும் வரக்கூடாது' என மோடி உத்தர விட்டார். "அமித்ஷா, சந்தோஷ் ஆகியோர் சிபாரிசில் தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணா மலை எப்படி இந்த வீடியோ வெளியாக ஒத்துக்கொண்டார்' என கேள்வி எழுப்பினார். மத்திய உளவுத்துறை பா.ஜ.க.வினரின் காமலீலை கள் பற்றி விவரம் சேகரிக்க ஆரம்பித்தது. அதேநேரம் "அண்ணாமலையை நீக்கிவிட்டு அதே பகுதியைச் சேர்ந்த சீனியர் தலைவரும், பிரச்சினை களுக்கு அப்பாற்பட்டவருமான சி.பி.ராதாகிருஷ்ண னை தலைவராக்கலாம்' என்ற பேச்சும் கட்சிக்குள் கிளம்பியுள்ளது.

மத்திய உளவுத்துறையின் விசாரணையில், பா.ஜ.க.வின் காமலீலைகளுக்கு தலைமை தாங்குபவர் மாநிலத்திற்கு அகில இந்திய தலைமை யால் அனுப்பப்பட்ட சி.டி.ரவி. அவரே இப்படி இருப்பதால், ஒட்டு மொத்த கட்சியையே கே.டி.ராகவன் வீடியோ விற்குப் பிறகு பாலியல் ஜல்சா கட்சி என சமூக ஊடகங்கள் அழைக்க ஆரம்பித்துவிட்டன.

பா.ஜ.க.விற்கு ஆர்.எஸ்.எஸ். அனுப்பிவைத்த கேசவவிநாயகம், சி.டி.ரவியின் செயல்களுக்கு உடந்தையாக இருக்கிறார். அவர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. கேசவ விநாயகத்தின் செயல்களை கரு.நாகராஜன், மதுரை சீனிவாசன் போன்றோர் ஆதரிக்கிறார்கள். அவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளது. இவையெல்லாம் அண்ணாமலைக்கும் தெரியும்.

இவற்றையெல்லாம்தான் கே.டி.ராகவனின் வீடியோவை வெளியிட்டவர்கள், இவர்கள் மீது புகாரளித்த பெண்களை பொறியாக வைத்து வீடியோவிலும் ஆடியோவிலும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அந்த ஆடியோக்களில் பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர்களும் சிக்கியிருக்கிறார்கள் என மத்திய உளவுத்துறை, மோடிக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. தமிழக பா.ஜ.க.வில் நிலவும் குழப்பங்களை தீர்ப்பதற்கு அண்ணாமலையால் முடியாது என அகில இந்திய பா.ஜ.க. தலைமை முடிவுக்கு வந்துவிட்டது. காமலீலை புகாரால் நிலைகுலைந்து நிற்கும் தமிழக பா.ஜ.க.வை சீர்படுத்த ஆபரேஷன் தாமரையை செய்ய ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை வைத்துள்ளது. விரைவில் அண்ணாமலை மாற்றப்படுவார் என அடித்துச் சொல்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.