ல்யுத்தத் தில் இந்தியா வுக்காக இரு முறை ஒலிம் பிக் போட்டிகளில் பங்கெடுத்தவர்... இரண்டு காமன் வெல்த் தங்கப் பதக்கங் களை வென்றவர்... ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றவர்... 2019-ல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம்... 2021-ல் ஆசிய சாம்பியன்... என்று சர்வதேச அளவில் மல்யுத்தத்தில் பல்வேறு சாதனை களைச் செய்தவர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்.

அவர் எழுப்பி யிருக்கும் பா−லியல் குற்றச்சாட்டு, இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக் கிறது.

dd

Advertisment

மல்யுத்த வீராங் கனைகளுக்கு, லக்னோ விலுள்ள மல்யுத்த கேம்ப்பில் பயிற்சியாளர்களாக இருப்பவர்களும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் (ரஎஒ) தலைவரான பிரிஜ்பூஷன் சரண்சிங்கும் பல ஆண்டுகளாக பாலி−யல் தொல்லைகள் கொடுத்து வருவதாக, வினேஷ் போகட் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு வைத்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலி−யுறுத்தி, டெல்−லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் இறங்கினார். இவரது கூற்று உண்மையென மெய்ப்பிக்கும் வகையில், இவரோடு இணைந்து, உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலி−க், அன்ஷு மா−லிக் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இப்போராட்டத்துக்கு ஹரியாணா முதல்வர், காங்கிரஸின் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், மல்யுத்த வீராங்கனைகள் ஆதரவைத் தெரிவித்ததோடு, இவர்களுக்கு நீதி வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.

போராட்டக் களத்தி−லிருக்கும் வினேஷ் போகட், "மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரின் பா−லியல் துன்புறுத்தல்கள் குறித்து 10, 12 மல்யுத்த வீராங்கனைகள், என்னிடம் பகிர்ந்துள்ளனர்.

அவர்களின் பெயர்களை இப்போது பொதுவில் கூறமாட்டேன். அதேவேளை, பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ இவ்விவகாரம் தொடர்பாகச் சந்திக்க வாய்ப்பிருந்தால் அவர்களின் பெயர்களை நிச்சயம் தெரிவிப்பேன். எங்களுக்குத் தேவை நீதி. பாலி−யல் குற்றவாளிகளை பதவியிலி−ருந்து நீக்குவதோடு, விசாரணை நடத்தி சிறையில் தள்ள வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை எங்கள் வீரர்கள் எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்க மாட்டார்கள். எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன'' என்றார். "இந்த போராட்டம், இந்திய அரசுக்கு எதிரானதல்ல. இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் மோசமான செயல்பாடுகளுக்கு மட்டுமே எதிரானது'' என்று போராட்டத்திலி−ருந்த பஜ்ரங் புனியா தெரிவித்தார்.

Advertisment

"ஒட்டுமொத்த கூட்டமைப்பும் அகற்றப் பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் மல்யுத்த வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்க முடியும்'' என்று சாக்ஷி மாலி−க் கூறியுள்ளார். இவர்களின் போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்த, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற வீரரான விஜேந்தர் சிங், "நம் இந்திய பிரதமர் மோடி நீண்டகாலமாக இதுகுறித்து மௌனமாக இருப்பது கண்டனத் துக்குரியது... வெட்கக்கேடானது. ஹரியானாவின் மகன் என்ற முறையில், விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோருகிறேன்'' என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

dd

யார் இந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்?

மல்யுத்த வீராங்கனைகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிஜ்பூஷன் சரண்சிங், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் மல்யுத்த வீரர்தான். தற்போது பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பதையும் சேர்த்து, மொத்தம் 6 முறை எம்.பி.யாகத் ddதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராமர் கோவில் கட்டுவது தொடர்பான ராமஜென்ம பூமி பிரச்சனை தீவிர மாக இருந்தபோது பா.ஜ.க. வில் தன்னை இணைத்துக் கொண்டார். எல்.கே. அத்வானி முன்னிலையில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் நடந்தபோது, அதில் கலந்துகொண்டு கைதானார். அது தொடர் பான வழக்கிலி−ருந்து கடந்த 2020-ல்தான் விடுவிக்கப் பட்டார். தாவூத் இப்ராஹிமின் உறவினர் கொல்லப் பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு தங்க இடமளித்த குற்றச்சாட்டுக்காக தடா சட்டத்தால் கைது செய்யப்பட்டார். அவ்வழக்கிலி−ருந்தும் சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டார். இவரது இந்துத்துவ ஆதரவுக்குப் பிரதிபல னாக, இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பதவியை வழங்கி அழகுபார்த்தது பா.ஜ.க. தலைமை. தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த பிரிஜ்பூஷன் சரண்சிங், "வீராங்கனைகள் குற்றம்சாட்டுவதுபோல் நடந்திருந்தால் நானே தூக்கில் தொங்குவேன்'' என்றெல்லாம் ஓவராக ரியாக்ட் செய்தார்.

dd

ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், வீராங்கனைகளோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதில் தீர்வு எட்டப்பட வில்லை. பேச்சுவார்த்தை மேலும் தொடருமென்று தெரிகிறது. போராட்டத்தைக் கைவிட வேண்டு மென்று ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டாலும், மல்யுத்தக் கூட்டமைப்பைக் கலைத்தால்தான் போராட்டம் முடிவுக்கு வருமென்று உறுதியாகத் தெரிவித்து விட்டார்கள். இந்நிலையில், பாலி−யல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 72 மணி நேரத்திற் குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பதிலளிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மல்யுத்தக் கூட்டமைப்புக்கு, விளையாட்டுத் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி யிருக்கிறது. விரை வில் வீராங்கனை களின் போராட்டத் துக்கு தீர்வு கிடைக் கட்டும்!

-தெ.சு.கவுதமன்