லகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், மீனாட்சியம் மன் பட்டாபிஷேகம் 19ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, பாண்டிய மன்னரின் கையிலிருந்த செங்கோலை மீனாட்சியம்மனுக்கு வழங்குவதான நிகழ்ச்சி நடைபெறும். அந்நிகழ்ச்சியின்போது மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவரிடம் அந்த செங்கோலை வழங்கு வது வழக்கம். தற்போது அறங்காவலர் குழுவின் தலைவராக இருக்கும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜனிடம் செங்கோலை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை கோச்சடையைச் சேர்ந்த தினகரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ss

அவரது மனுவில், "மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், பட்டாபிஷேக நிகழ்ச்சியில் செங்கோலை அறங்காவலர் குழுத் தலைவர் பெற்றுக்கொள்வார். ஆகம விதிகளின் படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக்கொள்ள இயலாது. தற்போது அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் ருக்மிணி பழனிவேல்ராஜன் கணவனை இழந்தவர் என்பதால் அவரிடம் செங்கோலை வழங்கக்கூடாது. எனவே அந்த செங்கோலை அனந்தகுல சதாசிவ பட்டர் குடும்பத்தின் மூத்த உறுப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும். அக்குடும்பத்தில் தகுதியான நபர்கள் இல்லையெனில் செங்கோலை சுவாமி சிலையின் அருகில் வைக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அவ்வழக்கை, ஏப்ரல் 16, செவ்வாயன்று அவசர வழக்காக நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.

Advertisment

வழக்கு விசாரணையின்போது, “"மதுரை மீனாட்சியம்மன் கோவில் விழாவில் திரு மணம் ஆகாதவர்கள், வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் செங்கோல் வாங்கக்கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும்தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்துதானே? அவர் வாங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது?'' என்று நீதிபதி சரவணன் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், "கோவில் திருவிழா ஆரம்பித்த பின்னர் கடைசி நேரத்தில் இதுபோன்று மனுத்தாக்கல் செய்வது ஏற்கத்தக்கதல்ல'' என்றும் தெரி வித்தார்.

sw

அப்போது அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், "செங்கோல் பெறுவது மத நடவடிக்கை அல்ல. வாழ்க்கைத் துணையை இழந்தவர் என்பதால் செங்கோலை பெறுவதற்கு ஆகம விதிகளின்படி எவ்விதத் தடையும் இல்லை. மனுதாரர் தரப்பு கூறுவது ஏற்புடையதல்ல. இதே கோரிக்கை யுடன் ஏற்கெனவே தாக்கல் செய்யப் பட்ட மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்யப் பட்டது. மீண்டும் இதுபோன்ற மனுக்கள் வருவது வருத்தத்தைத் தருகிறது'' என்று வாதிட்டார்.

Advertisment

இதையடுத்து, மனு தாரர் தரப்புக்கு நீதிபதி சரவணன், "நவீன காலத்திலும் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல. இப்படி யெல்லாம் பிற்போக்குத் தனமாக வழக்கு தொடர் வதா?''’என மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரி வித்ததோடு, அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

ss

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச் சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாரான ருக்மணி பழனிவேல்ராஜன், 2023ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலராக தேர்வு செய்யப்பட்டார். அவரோடு மொத்தம் 5 பேரை அறங்காவலர்களாக இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் நியமித்தார். அடுத்ததாக, அறங்காவலர் குழுவின் தலைவரை நியமிப்பது தள்ளிக் கொண்டேபோக, தமிழ்நாடு அரசே அறங்காவலர் குழுவின் தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜனை நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது. தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கொள்கையென்பது இதுதான்.

ஆனால் ஒன்றிய மோடி அரசிலோ, புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவின்போது, பல்வேறு பிரபலங்களுடன் முன்னணி நடிகைகளைக்கூட அழைத்து சிறப்பித்தவர் கள், இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை அழைக்கவேயில்லை. அவர் விதவையென்பதாலும், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைப் புறக்கணித்து இழிவுபடுத்தினர். அதே போல், ராமர் கோவில் திறப்பு விழாவின்போதும் பல்வேறு தலைவர்களை அழைத்த மோடி அரசு, அதே காரணங்களுக்காக திரௌபதி முர்முவை மட்டும் அழைக்காமல் அவமானப்படுத் தியது. இப்படியான செயல்பாடு கள், குடியரசுத் தலைவர் என்ற பதவிக்கே செய்யப்பட்ட அவமரியாதையாகும். இங்குதான் திராவிட மாடல் தமிழ்நாடு அரசு, பெண்களுக்கு உரிய மரியாதை தருவதில் ஒன்றிய அரசுக்கே முன்மாதிரியாக இருக்கிறது!