ஆறுமுகசாமி கமிஷனில் ஓ.பி.எஸ். அளித்த சாட்சியம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஜெ.வின் மரணத்திற்கு காரணம் சசிகலாதான் என தர்மயுத்தத்தை நடத்தியவர் ஓ.பி.எஸ். ஆனால் ஆணையத்தில் ஓ.பி.எஸ். "சசிக்கும் ஜெ.வின் மரணத்திற்கும் தொடர்பு இல்லை' என்றார். முன்பு இதையே சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் கூறினார். விஜயபாஸ்கர் இப்படிச் சொல்கிறாரே என ஓ.பி.எஸ்.ஸிடம் கேட்டபோது, ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்கள் விசாரிக்கப் படும்போது, விஜயபாஸ்கர்தான் சுகாதாரத் துறை அமைச்சர் என்ற வகையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என அப்போது ஓ.பி.எஸ். முழங்கினார். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாக்கி வருகிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
எடப்பாடி, வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி ஆகியோர் இணைந்து "நமது அம்மா' மற்றும் "நியூஸ் ஜெ.' என்கிற தொலைக் காட்சி ஆகியவற்றை நடத்திவரு கிறார்கள். ஓ.பி.எஸ். கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளையும் லைவ்வாக ஒளிபரப்பும் நியூஸ் ஜெ. ஆனால் ஓ.பி.எஸ்., ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியமளிக்க சட்டசபையிலிருந்து புறப்பட்டுப் போனது முதல் அவர் பரபரப்பாக சாட்சியம் அளித்து விட்டு பத்திரிகைகளிடம் "நான் உண்மையைச் சொன்னேன்...'' என "சசிகலாவுக்கும் ஜெ.வின் மரணத்திற்கும் எந்த தொடர்புமில்லை' எனக் கூறியது வரை எதையும் செய்தியாக வெளியிடவில்லை. தினமும் பத்தி பத்தியாக ஓ.பி.எஸ்.ஸையும், இ.பி.எஸ்.ஸையும் புகழ்ந்து எழுதும் "நமது அம்மா' ஏடும் ஒரு பெட்டிச் செய்திகூட வெளியிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, ஓ.பி.எஸ்., சசிகலா கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ அ.தி.மு.க.வின் பதில் இதுதான் என சுறுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.
சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு, கடந்த பத்தாண்டுகளாக 110 விதியின் கீழ் ஜெ. உட்பட அ.தி. மு.க. அரசு அறிவித்த திட்டங்கள் முறைப்படி நடைமுறைப்படுத் தப்படவில்லை என அறிவித் தது. அதை எதிர்த்து ஓ.பி. எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் தி.மு.க.வை விமர்சித்து இணைந்து பேட்டி யளித்தனர். ஓ.பி.எஸ்., ஆறுமுகசாமி கமிஷனில் சாட்சியம் அளித்துவிட்டு வந்தபிறகு நடந்த இந்நிகழ்வில் இருவரும் அருகருகே நின்றார்கள். இ.பி.எஸ். பேட்டியளிப்பதைப் பார்த்து ஓ.பி.எஸ். சிரித்துக்கொண்டிருந்தார். ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவேயில்லை. "உண்மையில் அ.தி.மு.க. இரண்டு துண்டாக உடைந்து கிடக்கிறது' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் இரண்டாம்கட்டத் தலைவர்கள்.
ஓ.பி.எஸ்., ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்த சாட்சியத்தை செல்போனில் கேட்ட எடப்பாடி, மிகக்கடுமையாக கோபமடைந்தார். அவர் ஆவேசமாக வேலுமணி, தங்கமணி ஆகி யோரைத் தொடர்புகொண்டு, ஓ.பி.எஸ்.ஸை சராமாரியாகத் திட்டித் தீர்த்தார். அவருக்கு சி.வி.சண்முகம் மட்டுமே ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். மற்றவர்கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக எதுவுமே பேசவில்லை என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.
சுமார் நான்காண்டு காலம் நீடித்த விசாரணைக் கமிஷன், ஒன்றரை ஆண்டு காலத்திலேயே 147 சாட்சியங்களை விசாரித்து விட்டது. அடுத்து இரண்டு ஆண்டுகள் சுப்ரீம் கோர்ட் தடையால் இயங்காமல் இருந்தது கமிஷன். அதன்பிறகு ஓ.பி.எஸ். உட்பட 9 சாட்சிகள்தான் விசாரிக்கப்பட்டனர். பலமுறை சம்மன் அனுப்பியும் கமிஷனில் ஆஜராகாத ஓ.பி.எஸ், சசிகலாவுடன் இணக்கமான பிறகு "சசி மேல் எனக்கு மதிப்பிருக்கிறது'' என ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்லியிருந்தார். அதன்பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கமிஷனுக்கு வந்த ஓ.பி.எஸ்., முதல்நாள் அளித்த சாட்சியத்தில் சசிகலாவை சின்னம்மா எனச் சொன்னார். வேறெதையும் சொல்லவில்லை. அதைத் தொடர்ந்து சசிகலா, ஓ.பி.எஸ்.ஸை நேரடியாகத் தொடர்புகொண்டு, அவரது வழக்கறிஞர் ஓ.பி.எஸ்.ஸிடம் என்ன கேள்விகள் கேட்கப் போகிறார் என எடுத்துச் சொன்னார்.
அதன்பிறகு ஓ.பி.எஸ். சொன்ன பதில்கள்தான், "சசி மீது மரியாதை வைத்திருக் கிறேன். ஜெ. இறந்த பிறகு நான் போய் பார்த்தேன். ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி அவ்வப்போது விஜயபாஸ்கரும் அப்பல்லோ நிர்வாகமும் சொன்னார்கள். ஜெ.வை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு கொண்டுசெல்லப் பேசினேன்'' ஆகியவையாகும்.
"சசிகலா மீது எந்தப் பழியும் இல்லை, மக்கள் புரிந்துகொள்வார்கள். நான் தர்ம யுத்தத்தில் ஜெ.வின் மர்ம மரணம் பற்றிப் பேசினேன்' என ஓ.பி.எஸ். சொன்னதை சசி அப்படியே பத்திரிகையாளர்களிடம் வழி மொழிந்தார். இருவரும் பேசி வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள் என டென்ஷனானார் எடப்பாடி என்கிறார்கள் சசிக்கு நெருக்கமான வர்கள். ஓ.பி.எஸ். சாட்சியம் முடிந்தபிறகு, தென் மாவட்ட அ.தி.மு.க. தலைவர்களிடம் பேசிய சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்க ரிடம் "என்மேல் இருந்த களங்கத்தை ஓ.பி.எஸ். துடைச்சிட்டாரு' என சந்தோஷமாகச் சொன்னார் என்கிறார்கள், சசி அணியைச் சேர்ந்தவர்கள்.
"இனி ஓ.பி.எஸ்.ஸை நம்பி பிரயோஜன மில்லை. சாதாரண தொண்டன், சசிகலாவிடம் பேசினாலே நடவடிக்கை எடுக்கிறோம். கட்சியின் ஒருங்கிணைப்பாளரே சசி நல்லவர் என அவர்மீது படிந்த ஜெ.வின் மரணத்துக்கு காரணமானவர் என்கிற பழியை துடைக்கிறார். இனி இவரை வைத்திருக்கக் கூடாது. அடுத்த பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். நீக்கம் உறுதி'' என கொந்தளித்தார் எடப்பாடி. "முடிந்தால் நீக்கிப் பார்' எனச் சொல்லும் ஓ.பி.எஸ்., "அடுத்த முதல் வர் வேட்பாளர் நான்தான்' என சசி ஆதரவோடு முஷ்டியை முறுக்குகிறார். "சண்டை போடாதீர் கள்... அமைதியாக இருங்கள்' என பா.ஜ.க. தரப்பிலிருந்து குரல் வருகிறது. இதுதான் அ.தி.மு.க. நிலவரம் என்கிறார்கள் மூத்த தலைவர்கள்.
"ஆறுமுகசாமி கமிஷன் தனது தீர்ப்பை எழுத ஆரம் பித்துவிட்டது.
தங்கள் தலைவியின் மரண மர்மத்தை அறிய முடியாமல் பரிதவிக் கிறார்கள் உண்மைத் தொண்டர்கள்.