காத்து வாக்குல இரண்டு காதல்' படத்தில் நயன்தாராவுடன் சமந்தா இணைந்து, இரண்டு நாயகிகளாக நடித்திருந்தாலும் பெயர் கிடைத்தது என்னவோ சமந்தாவுக்குத்தான். திருமண முறிவுக்குப் பின் டல்லாக இருந்தவர், இதில் அதிக உற்சாகமாகியிருக்கிறார் சமந்தா. இவரின் அதிக உற்சாகத்திற்கு இன்னொரு காரணம்... சாகுந்தலையாக தான் நடித் துள்ள, ஹீரோயின் சப்ஜெக்டாக வெளி வரவுள்ள "சாகுந்தலம்' படம்தான். சமந்தா வின் பிறந்தநாளுக்காக "சாகுந்தலம்' படக்குழு படத்தின் புதிய ஸ்டில்லை வெளி யிட்டுள்ளதுதான் இங்கு பிரசுரமாகி யிருக்கிறது. இதில் நடிகர் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா சிறுவயது சாகுந்தலையாக நடித்துள்ளார்.

tt

ந்தியில் டாப் ஹீரோவாக இருக்கும் ஷாருக்கானுக்கு கடைசியாக வந்த சில படங்கள் காலை வாரிவிட்டதைத் தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்தார். தொடர் தோல்விகளால் துவண்டிருந்த அவர், வலுவான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தற்போது பா-வுட்டின் சூப்பர்ஹிட் இயக்குநரான ராஜ்குமார் ஹிராணியுடன் "டன்கி' என்ற படத்தில் கைகோர்த்துள்ளார். அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் "பதான்' படம் ரிலீஸாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி "டன்கி' படம் வெளி யாகவுள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இக்கதையில் டாப்ஸி ஹீரோ யினாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழின் முன்னணி இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கும் "சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து ஷாருக்கானின் இந்த புதிய படத்திற்கும் ஜீ.வி. பிரகாஷ் இசையமைப்பார் எனக் கூறப்படுகிறது.

Advertisment

t

Advertisment

மல் தயாரிப்பில், "ரங்கூன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. தேசபக்தியை அடிப்படையாகக் கொண்டு, ராணுவத்தில் நடைபெறும் சம்பவங்களைப் பற்றிய படமாக இது உருவாகிறதாம். இந்திய ராணுவம் மற்றும் ராணுவ வீரர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றிப் பேசவுள்ளதாம் இப்படம். எனவே, இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு மத்திய அரசு சார்ந்த சில துறைகளிடம் அனுமதி வாங்க முயன்று வருகிறது படக்குழு.

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தை, பான் இந்தியா அளவில் வெளியிட கமல் தரப்பு முடிவெடுத்துள்ளது. "டான்', "அயலான்' படங்களின் பணிகளை முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் "எஸ்.கே 20' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பணிகளை முடித்த பிறகு, ராஜ்குமார் பெரியசாமி படத்தின் பணிகளை அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் வரவேற்பைப் பெற்ற ஆங்கிலப் படம் அவதார். மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தது. ஐந்து பாகங்களைக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நீண்ட நாட்களாக நடந்துவந்த சூழலில், தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் டைட்டிலையும், ரிலீஸ் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. "அவதார்: தி வே ஆப் வாட்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 16 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தின் கதை முடிந்த பிறகு அடுத்த சில ஆண்டுகள் கழித்து நடக்கும் சம்பவங்களைக் கதைக்களமாகக் கொண்டுள்ளதாம் இப்படம். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்பாகத்தை உலகம் முழுக்க சுமார் 160 மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

ருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள "சாணிக்காயிதம்' திரைப்படம் மே 6-ஆம் தேதி அமேசான் ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. ஏற்கனவே இவரின் இயக்கத்தில் வெளியான "ராக்கி' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், "சாணிக்காயிதம்' படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுவரும் சூழலில், இந்தாண்டின் மத்தியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் படமாக உருவாகும் இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படம் குறித்து நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன், "என்னுடைய முதல் இரு படங்கள் மாதிரி இந்தப் படம் இருக்காது. பெரிய பட்ஜெட்டில் பண்ணக்கூடிய படம். ஆக்ஷன் அட்வெஞ்சர் ஜானர் படமாக இருக்கும். இது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எழுதிய கதை. வழக்க மான என் படங்களில் இருந்து வித்தியாசமான ஒன்றை எதிர் பார்க்கலாம்'' என்றார்.

-எம்.கே.