பிரபல சாமியாரான ஜக்கி வாசுதேவ் ஒரு பெரிய அணுகுண்டை அசராமல் வெடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தி.மு.க. ஆட்சி அமைகிற சமயத்தில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து அதை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்றும், அந்த கோவில்களின் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும், என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வைத்த கோரிக்கையை ஜக்கி எதிரொலித்தார். அதற்கு நிதியமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சூடாக பதிலளித்தார்.

jaggi

"ஜக்கி, யானைகள் வாழ்விடத்தை ஆக்கிரமித்து கோவில்களையும் ஆஸ்ரமங்களையும் கட்டிக் கொண்டிருக்கிறார். அவரது அமைப்புகளில் கோவில் இருக்கிறது. சுயசார்பு நிதிகளை பெறும் அமைப்புகளை உலகம் முழுவதும் நடத்துகிறார். அத்துடன் குரு சிஸ்யர்களைக் கொண்ட மடத்தை ஜக்கி வாசுதேவ் நடத்துகிறார். இவையனைத்தும் இந்து அறநிலையத்துறை சட்டப்படி அரசின் கட்டுப்பாட்டில் வர வேண்டும். "யானைகளின் வாழ்விடத்தை அவர் ஆக்கிரமித்து கட்டியிருக்கக்கூடிய கட்டிடங்கள் அரசின் விதிமுறைக்கு மாறானவை, எனவே அவற்றை கைப்பற்ற வேண்டும்' என சி.ஏ.ஜி. ரிப்போர்ட் கூறுகிறது.

இதை மறைக்கவே ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோரிக்கையான, கோயில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பதை ஜக்கி பேசுகிறார்'' என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கொடுத்த பதிலடிக்கு எதிராக பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா போன்றவர்கள் பொங்கினார்கள்.

சமீபத்தில் தமிழக அரசு அளித்த ஒரு ஆர்.டி.ஐ.க்கான பதிலில், ஜக்கி யானைகளின் பாதையை ஆக்கிரமிக்கவில்லை என குறிப்பிட்டிருக்கிறது. ஜக்கிக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்து விட்டதாகவே பலரும் தமிழக அரசின் இந்த ஆர்.டி.ஐ. கேள்விக்கான பதிலை விமர்சித்தார்கள். "ஜக்கி ஆசிரமம் கட்டியுள்ள போலாம்பட்டி வனப்பகுதி யானைகளின் பாதை' என குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக யானைகள் தங்கி இனப்பெருக்கம் செய்யும் வாழ்விடம் என்று அதற்கு தி.மு.க.வினரால் பதிலளிக்கப்பட்டது.

Advertisment

jj

நிலைமை இப்படியிருக்க, தனது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் ஜக்கி தமிழக அரசுக்கு எதிரான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் என்பது தற்பொழுது வெளிவந்துள்ளது. ஜக்கி கடந்த ஏப்ரல் மாதம் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கோவில்களை வெளியிலிருந்து வரும் தனியார் ஆடிட்டர்கள் ஆடிட் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள 44,000 கோவில்களின் நிலை, அதிலுள்ள கட்டிடங்கள் அதற்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அசையா சொத்துக்கள் ஆகியவை பற்றி, வெளியிலிருந்து நியமிக்கப்படும் ஆடிட்டர்கள் கணக்கெடுக்க வேண்டும்.

jjஇந்த கோவில்கள் யார் கையில் இருக்கின்றன? இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களுக்கு வாடகை எப்படி வசூலிக்கப்படுகிறது? கோவிலின் பராமரிப்பு மற்றும் கோவில் தேர், கோவில் திருவிழாக்கள் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பணம், கோவில் செலவுகள் ஆகியவற்றை இந்த ஆடிட்டர் குழு கண்காணிக்க வேண்டும். கோவில் விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் இந்த கோவில்களை நிர்வகிக்க வேண்டும். தமிழகத் தில் உள்ள கோவில்களை பக்தி சார்ந்த சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும்'' என ஐகோர்ட்டில் முறையிட்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை கடந்த நவம்பர் மாதத்தில் விசாரணைக்கு கொண்டு வந்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ்.

இந்த வழக்கில் ஜக்கி வாசுதேவுக்காக பிரபல ஆர்.எஸ்.எஸ். வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி வாதிடுகிறார். இந்த வழக்கில் தமிழக அரசு தனது பதிலைத் தாக்கல் செய்துள்ளது. அந்த பதிலில் திருப்தியடையாத நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கோவில்களில் இன்றைய நிலை பற்றி கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட உத்தரவிட்டி ருக்கிறது. பொதுவாக அரசின் சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் முன்புதான் தாக்கல் செய்யப்படும். ஜக்கி, தான் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் தங்கியிருப்பதாகவும், தன் சார்பாக வழக்கு நடத்த ராஜபாளையத் தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிகாரம் கொடுத்துள்ளதாகவும், ராஜபாளையம் பகுதி மதுரை உயர்நீதிமன்றத்தில் எல்லைக்குள் வருவதாகவும் கூறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண், சென்னையில் வசிக்கும் ஒரு நபர் மூலம் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். பாண்டிச்சேரியில் வசிக்கும் அவர் சென்னை நபர் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக முடியாது என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுபோல ஏகப்பட்ட நடைமுறைகள் தீர்ப்புகளாகவே வந்துள்ளன. அதையெல்லாம் மீறி ஜக்கி வாசுதேவ் மதுரை உயர்நீதி மன்றத்தை அணுகியிருப்பது நிறைய சந்தேகங்களை எழுப்புகிறது என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

இந்த வழக்கில், தன்னை ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என, ஐ.ஐ.டி.யில் வசந்தா கந்தசாமி என்கிற பேராசிரியை பாதிக்கப்பட்டபோது, அவருக்காக களமிறங்கிய பிரபல வழக்கறிஞர் நடராஜன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் தனது மனுவில், "இந்து அறநிலையத்துறை என்பது ஒரு அரசு அமைப்பு. கோவில்கள் கடந்த காலத்தில் மன்னர்களாலும், பொதுமக்களின் உழைப்பாலும் கட்டப்பட்டவை. அதை பராமரிக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு. இதை, இந்து அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்ட அடுத்த ஆண்டில் கோவில்களை ஆராய்ச்சி செய்ய அமைக்கப்பட்ட இந்து மத அமைப்புகள் தொடர்பான கமிஷன் கூறியுள்ளது.

அந்த கமிஷனுக்கு தலைவரான சர்.சி.பி.ராம சாமி அய்யர் இந்தியா முழுவதும் பல கோவில் களை ஆராய்ந்து தனது அறிக்கையை கொடுத்திருக் கிறார். "திருப்பதி கோவிலில் அரசின் நிர்வாகத்தின் கீழ் வருவதற்கு முன்பு மிக மோசமாக நிர்வாகம் செய்யப்பட்டது. கோவில் நிலங்களை கட்டுப்பாடில் லாமல் விற்பது, கோவில் சொத்துக்களை கொள்ளை யடிப்பது என பல விஷயங்கள் நடந்துள்ளது, என சி.பி.ராமசாமி அய்யர் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். வேத அறிஞரான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், " பல்லவர் காலம் வரை கோவில்கள் பிராமணர்களின் கட்டுப்பாட் டில் இல்லை' என குறிப்பிட்டிருக்கிறார். "தமிழகத் தின் பிரபலமான பழனி கோவிலில் பூஜை செய்தவர்கள் பிராமணர்கள் அல்ல' என நீதிபதி ஏ.கே.ராஜன் தலை மையில் கோவில்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிஷனில் தெளிவாக குறிப்பிடுகிறார். எனவே கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும்'' என நடராஜன் மனு போட்டுள்ளார்.

Advertisment

dd

இதுபற்றி நம்மிடம் பேசிய நடராஜன், "வழக்கறிஞரான ராகவாச்சாரி நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான வாதத்தை எடுத்திருக்கிறார். சமீபத்தில் யுனெஸ்கோ நிறுவனம் இந்திய கோவில்களை ஆராய்ந்தது. அது தமிழக கோவில்களைப் பற்றி குறிப்பிடுகையில் தமிழகத்தில் கோவில்கள் மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன என கூறியுள்ளது. அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் ராகவாச்சாரி சுட்டிக்காட்டுகிறார்.

யுனெஸ்கோ குழு தமிழகத்திற்கு ஆய்வு செய்ய வரும்போதே அவர்களை தமிழக கோவில்களின் கருவறைக்குள் நுழைய பிராமணர்கள் அனு மதிக்கவில்லை. அவர்கள் தமிழக கோவில்களுக்குள் நுழைந்து ஆய்வு செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழககு போட்டார்கள். நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை தமிழக கோவில்களின் நிலங்களை மோசமாக குறிப்பிடுகிறது. அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்காதவர்கள்தான் அந்த அறிக்கையை வைத்து நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள்'' என்கிறார்.

இந்த வழக்கு மிகவும் சீரியஸாக மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பரபரப்பான தீர்ப்புகள் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதில் தெளிவான பதில்களை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறையால் முடியவில்லை என இந்த வழக்கை உற்று நோக்கும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். ஜக்கிக்கும் தமிழக அரசுக்குமான மோதலில் 2வது ரவுண்டு ஆட்டத்தை இந்த வழக்கு ஆரம்பித்திருக்கிறது.