பாராளுமன்றத்துக்கான தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கி விட்டது. கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகள், வேட்பாளர் பட்டியல் வெளியீடு என ஒருபுறம் நடக்கும் போதே மோடி அரசு, சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்துவது, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த முன்னெடுப்பை பேசுபொருளாக்குவது என ஒவ்வொன்றையும் வாக்கு வங்கியைக் குறிவைத்து செயல்படுகிறது.

இன்னொரு புறம், அவர்களுக்கு ஆதரவாக அடுத்தடுத்த கருத்துக்கணிப்புகள் வெளிவந்தபடி யிருக்கின்றன. மோடியின் தேர்தல் நேர அதிரடிகளுக்கு ஈடுகொடுக்கும்வகையில் காங்கிரஸ் தலைமை, பத்தாண்டு கால மோடி ஆட்சியில் செய்யத் தவறியவற்றை சுட்டிக்காட்டி, அவற்றை எங்கள் ஆட்சியில் செய்துகொடுப்போம் என்ற உறுதிமொழியுடன் இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, விவசாயிகளுக்கு என ஒவ்வொரு தரப்புக்குமான 5 உறுதிமொழிகளை அறிவித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

rr

மகாராஷ்டிரா மாநிலம் துலேயில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்ற ராகுல் காந்தி, பெண்களுக்கான 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஒன்றிய அரசின் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவுப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் ஒன்றிய அரசின் பங்கு இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.

Advertisment

இந்தியாவிலுள்ள அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் பெண்களுக்கான சட்ட உரிமைக்கான விழிப்புணர்வு கொடுத்து, பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு சட்ட நிபுணர் நியமனம் செய்யப்படுவார். சாவித்ரி பாய் ஃபுலே திட்டத்தின்படி பணிபுரியும் பெண்களுக்காக அமைக்கப் பட்டுள்ள தங்கும் விடுதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும். குறைந்தது, மாவட்டத் துக்கு ஒரு தங்கும் விடுதியாவது கட்டிக் கொடுக்கப் படும் என்று அறிவித்துள்ளனர். இதில், ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு நாடு முழுக்க பெண்களிடம் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கான நீதி என்ற பெயரில் இளைஞர்களின் நலனுக்காக காங்கிரஸால் அறி விக்கப்பட்ட 5 வாக்குறுதி களாவது: மோடி ஆட்சியில், ஒன்றிய அரசுத் துறைகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவை, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிரப்பப்படும். வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும். பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். தனியார் மற்றும் பொதுத்துறை தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை கட்டாயம் ஓராண்டு பயிற்சியில் சேர்க்க வேண்டுமென்றும், அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பயிற்சி ஊதியம் வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள், காவலர்கள் மற்றும் உணவு டெலிவரி செய்பவர்கள் போன்ற கிக் தொழிலாளர் களின் வேலைவாய்ப்பை முறைப்படுத்தி, சமூகப் பாதுகாப்பு வழங்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங் களைத் தொடங்குவதற்கான 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, மக்களவை தொகுதிக்கு ரூ.10 கோடி வீதம் ஒதுக்கி, இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே விவசாயிகள் தங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யக்கோரி டெல்லியில் இரண்டாவது முறையாக முற்றுகைப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும்விதமாக, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும்படி சட்டம் இயற்றப்படும் என்பது உட்பட 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

Advertisment

ff

அதன்படி, இயற்கைச் சீற்றங்களால் பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் விளைபொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வதற்கேற்ப சட்டம் கொண்டுவரப்படும். விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் பொருட் களுக்கு, ஜி.எஸ்.டி.யிலிருந்து வரி விலக்கு அளிக்கப்படும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நிரந்தர ஆணையம் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கொள்கை உருவாக்கப்படும் என வாக்குறுதிகள் கொடுக்கப் பட்டுள்ளன.

ஏற்கெனவே கர்நாடகத்தில் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்குவது குறித்து அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இல்லாத நிலையில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்விதமாக, மோடி அரசு செய்யத் தவறிய, மறுத்த பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளாக அளித்துள்ளது. இந்த வாக்குறுதி களை தேர்தல் பிரச்சாரத்தில் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் கொண்டுசென்று நம்பிக்கையைப் பெறும் என்பதைப் பொறுத்தே காங்கிரஸின் தேர்தல் வெற்றி அமையக்கூடும்.