த்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த வாரத்தில் ஒரு வீடியோ வைரலானது.

வீடியோவில் வளையல் வியாபாரம் செய்யும் 25 வயது இளைஞர் ஒருவர் தனது பையிலிருந்து வளையல்களை வெளியே எடுத்து வைக்கிறார். அவரது சட்டைக் காலரை பிடித்து ஒருவர் அடிக்க ஆரம்பிக்க, வளையல் காரர் தன்னை விட்டுவிடும்படி கெஞ்ச ஆரம்பிக்கிறார். வளையல்காரரை அடித்த கும்பல், ஹிந்துக்கள் பகுதியில் உன்னைப் பார்த்தால் அவ்வளவுதான் என அடித்து விரட்டுகிறார்கள்.

வளையல் விற்றதற்காக தாக்கப்பட்ட நபர் தஸ்லிம் அலி. மத்தியப்பிரதேச மாநிலம், ஹர் டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆறு வருடங்களாக ராக்கி திருவிழாவின்போது இந்தூர் வட்டாரங்களில் வளையல் விற்பனை செய்வது வழக்கம் என்கிறார்கள்.

cc

Advertisment

"நான் வளையல் விற்பனையைத் தொடங்கியதும், ஒருவன் என்னைப் பிடித்துக்கொண்டு என் பெயர் என்ன என்று கேட்டான். புரா என்று சொன்னேன். எனது வாக்காளர் அடையாள அட்டையில் அந்தப் பெயர்தான் இருக்கிறது. விடாமல், நீ முஸ்லிமா என கேட்க... பதில் சொல்லத் தயங்கினேன். வற்புறுத்திக் கேட்டதால் ஆம் என்றேன். உடனே அவர்களது பகுதியில் நான் எப்படி வியாபாரத்துக்கு வரலாமெனச் சொல்லி, அவன் என்னை அடிக்கத் தொடங்கினான். அவனுடன் வேறு சிலரும் சேர்ந்து என்னைத் தாக்கினார் கள்''” என்கிறார் பாதிக்கப் பட்ட அலி.

சம்பவத்தை காணொலி காட்சியாக எடுத்து வெளியிட்ட தால், முஸ்லிம் அமைப்புகள் தஸ்லிம் அலியைத் தாக்கியவர் களை கைது செய்யவேண்டுமென போராடத் தொடங்கின. இதை யடுத்து அப்பகுதி போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். இருவேறு பிரிவினரிடம் பகைமையை உண்டாக்குதல், சட்டபூர்வமற்ற முறையில் கூட்டம் கூடுதல், உட்பட 14 பிரிவுகளின் மேல் மூவர் மேலும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

அதேசமயம் போலீஸ் நிலையம் முன்பு கூடி பாதிக்கப் பட்ட இளைஞருக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க வற்புறுத்திய தற்காக போராடியவர்கள் 24 பேர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிரவும் மறுநாள் மைனர் பெண் ஒருவர் கொடுத்த புகாரில், வளையல் விற்கும் போர்வையில் சிறு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி தஸ்லிம் அலி கைது செய்யப்பட்டார். போஸ் கோ உட்பட பல்வேறு பிரிவு களின் கீழ் அவர்மேல் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அலியின் சகோதரரான ஜாபர், “"எங்கள் கிராமமான முசாபர்கானாவுக்கு பான்காங்கா காவல் நிலைய போலீசார் வந்து அண்ணனை அழைத்துச் சென்றனர். திங்கள் இரவுவரை (ஆகஸ்டு 23) அவரை வெளியில் விடவில்லை''’என்கிறார்.

முஸ்லிம் இளைஞர்கள் பிழைப்பை நடத்த முடியாமல் தாக்கப்படுவது இது முதல் முறை யல்ல. சமீபத்தில் நடந்த இரு வேறு நிகழ்வுகளைப் பார்ப்போம்.

ராஜஸ்தான் அஜ்மீரில் பிச்சையெடுத்த குடும்பம் ஒன்றை, சிலர் மிக மோசமாகத் தாக்கி, “"இது உங்களுக்கான இடம் இல்லை. பாகிஸ்தானுக்குப் போங்க, அங்கதான் உங்களுக்குப் பிச்சை கிடைக்கும்'’என்று கூறி தாக்கும் வீடியோ ஒன்று சமீபத் தில் வைரலானது. இதையடுத்து அஜ்மீரைச் சேர்ந்தவர்கள் காவல் துறையை நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பின் ஐந்துபேர் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்டு 12-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நடந்தது இன்னும் கொடூரமானது. கான்பூர் பகுதியைச் சேர்ந்த 45 வயது ஆட்டோ டிரைவரை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி வற்புறுத்துகிறது. அவரை கும்ப லில் சிலர் அடிக்கவும் செய் கிறார்கள். அவருடன் இருக்கும் ஐந்து வயது குழந்தை அப்பாவை அடிக்கவேண்டாமென மன்றாடு கிறது. இருந்தும் அவர்கள் மனமிரங்கவில்லை.

பின் போலீசாரால் காப் பாற்றப்பட்ட அந்த நபர் ஊடகங் களிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் அந்த வன்முறைக் காட்சி வீடியோவாக எங்கும் பரவியதை அடுத்து, காவல்துறை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

"இதுவரை மூன்றுபேரை கைது செய்திருக்கிறோம். மேலும் சிலரைக் கைது செய்ய தேடி வருகிறோம்''’என்கிறார் கான்பூர் கமிஷனர் அசிம் அருண். முஸ்லிம் நபரை ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக பஜ்ரங்தள் காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்தியது.

இரண்டு வார காலத்துக் குள், தங்கள் பிழைப்பைப் பார்த்துக்கொண்டிருந்த வெவ் வேறு முஸ்லிம் நபர்கள், வெவ் வேறு இடங்களில் வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர் களால் தாக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தினரைக் கவலையடையச் செய்திருக்கிறது.

மத்தியப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட நபர் மேலேயே பாலியல் வழக்கு பதியப்பட்டுள் ளது. உத்தரப்பிரதேசத்தில் தாக்கியவர்களுக்கு ஆதரவாக பஜ்ரங்தள் போராட்டம் நடத்து கிறது. ராஜஸ்தானில் பாதிக்கப் பட்டவர்கள் எதற்கு வம்பென அப்படியே நழுவிவிட்டனர்.

கடந்த ஜூன் மாதம் டெல்லி உத்தம் நகரில் முஸ்லிம் வியாபாரிகளைப் புறக்கணியுங்கள் என்று ஹிந்துத்துவா அமைப்பின ரால் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது சர்ச்சையைக் கிளப் பியது.

மோடியின் தீர்க்கதரிசன மான, "அழிவு சக்திகள் கொஞ்ச காலத்துக்கு ஆதிக்கம் செலுத்த லாம். எப்போதைக்குமாக வெற்றிபெற முடியாது''’என்பது தலிபான்களுக்கு மட்டுமல்ல,… இந்தியாவின் பெருமையை அழிக்கும் வேலைகளில் ஈடுபடும் அனைவருக்கும் பொருந்தும் என் பதை நினைத்துப் பார்ப்பார்களா?