அரசுத்துறையினர், குறிப்பாக வருவாய்த்துறையின ரின் லஞ்ச வேட்டையால் பாதிப்புக்கு ஆளான வாரிசுகள் நால்வரின் 17 வருட போராட் டத்தை விரிவாக விவரிக்கிறது இக்கட்டுரை!
ராஜாமணி என்பவருக்கு சாத்தூரில் கடைகள், கிட்டங்கி, 31 வீடுகள் அடங்கிய பூர்வீகச் சொத்தின் இன்றைய மதிப்பு ரூ.1 கோடிக்கும் மேல். ‘நாங்கதான் உண்மையான வாரிசுகள்’ என்று ஆவணங்களின் அடிப்படையில் ஒரு தரப்பும், ‘உயில்படி சொத்து எங்களுக்கே’ என இன்னொரு தரப்பும், அந்த சொத்துக்காக கடந்த 17 ஆண்டுகளாகப் போராடிவருகிறார்கள்.
அப்போது முதியவர் ராஜாமணியின் வயது 102. அவர் 27-3-2008ல் சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சமர்ப்பித்த ஆட்சேபனை மனு வில் ‘"எனது மகன் ஜெகதீசனுக் கும் ஜான்சிக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தை கள் இல்லை. 2001ல் ஜெகதீசன் இறந்துவிட்டார். அதன்பிறகு ஜான்சி, அவருடைய அம்மா லட்சுமித்தாய், தம்பி மோக னுடன் சிவகாசியில் வசித்துவந் தார். ஜான்சி 35 வருடங்களாக மனநிலை சரியில்லாமல் இருந்தார். சிவகாசியில் இருந்த ஜான்சியின் தங்கை ரோகிணியின் மகன்கள் ரமேஷும், பாலனும், ஜான்சி வசம் அசையா சொத்துகள், வங்கியிருப்பு ரூ.6 லட்சம், 100 பவுன் தங்க நகைகள், ஒரு ஜோடி வைரக் கம்மல் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் இருப்பதை தெரிந்துகொண்டார்கள்.
இந்நிலையில், 13-3-2006 அன்று ஜான்சி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டதாக எனக்கு தகவல் வந்தது. ரமேஷ் அளித்த புகாரின் பேரில் சிவகாசி டவுண் காவல்நிலை யத்தில் வழக்கு பதிவானது. ஜான்சியின் சொத்துகளை அப கரிப்பதற்காக ரமேஷ், பாலன் ஆகிய இருவரும், ஜான்சி எழுதி வைத்துள்ளதாக ஒரு உயிலை உருவாக்கி, வங்கி அதிகாரிகளின் துணையோடு வங்கிக் கணக்கில் இருந்த பணம் மற்றும் நகைகளை கைப்பற்றிவிட்டனர். ஜான்சி இறப்பில் சந்தேகம் எழுந்ததால், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நான் புகார் அனுப்பினேன். ஆனால் அப்புகார்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வேறு காவல் பிரிவுக்கு அந்த வழக்கை மாற்றவேண்டும்' எனக் கோரியிருந்தார்.
2-9-2008ல் ராஜாமணி இறந்துவிடுகிறார். ஆனாலும், சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தப்பட்டு, மனநிலை சரியில்லாததால்தான் ஜான்சி இறந்துபோனார் என அந்த வழக்கு முடிவுக்கு வருகிறது. ராஜாமணி உயிருடன் இருந்தபோது, ஜான்சி எழுதியதாகச் சொல்லப்படும் உயில் செல்லத்தக்க தல்ல என்று நாளிதழில் அறிவிப்பு செய்கிறார். சொத்து வாரிசு உரிமை அடிப்படையில், சாத்தூரிலுள்ள பூர்வீகச் சொத்தை, தன்னுடைய மகன் திலகராஜன் வழிப் பேரன்களான ஆனந்தராஜன், அசோக்ராஜன், பிரேம்ராஜன், பிரபுராஜன் ஆகியோர் பெயருக்கு 8-2-2007ல் எழுதிக் கொடுத்துவிடுகிறார்.
ராஜாமணி உயிருடன் இருந்தபோது, சாத்தூர் சொத்தின் மீதுள்ள தீர்வையை தன் பெயருக்கு மாற்ற சாத்தூர் நகராட்சி ஆணைய ருக்கு மனு கொடுத்தார். இதே சொத்தை, உயிலின் அடிப்படையில், ரமேஷ், பாலன் இருவரும் தீர்வையில் பெயர் மாற்ற சாத்தூர் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர். ஒரே சொத்துக்கு இரண்டு தரப்பிலும் தீர்வை மாற்றம் கேட்டதால், அதற்கு நீதிமன்றம் மூலம் தீர்வுகாண 21-4-2006ல் சாத்தூர் நகராட்சி ஆணையர் அறிவுறுத்துகிறார்.
இந்நிலையில், ஜான்சி நல்ல மனநிலையில் உயில் எழுதியதாகவும், இயற்கை மரணம் அடைந்ததாகவும் தவறான தகவலை கோட் டாட்சியரிடம் அளித்த ரமேஷும் பாலனும், தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்யவேண்டி மனு அளிக்கிறார்கள். இந்த விபரம் ராஜாமணி யின் வாரிசுகளுக்குத் தெரியவர, மறுநாளே 12-6-2006 அன்று குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட் சேபனை மனு அளித்தனர். விசாரித்த சாத்தூர் வட்டாட் சியர், சிவில் நீதிமன்றம் மூலம் தீர்வுகாண அறிவுறுத்துகிறார். இந்நிலையில், அவசர அவசரமாக ரமேஷ், பாலன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்படுகிறது. எப்படி யென்றால், ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, வட்டாட்சியருக்கு தெரியாம லேயே, டவுன் சர்வேயர் மூலம் பட்டா மாற்றம் செய்துவிடுகின்றனர். அதுவும் ஞாயிற்றுக்கிழமையன்று கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கையெழுத்திடுகிறார். இந்த மோசடியின் மூலம், கடைகள் மற்றும் வீடுகளின் வாடகைப் பணம் சுமார் ரூ.1 லட்சத்தை இன்று வரையிலும் ரமேஷ், பாலன் தரப்பு பெற்றுவருகிறது.
மேற்கண்ட தகவல்களை விவரித்த ராஜா மணியின் வாரிசுகளில் ஒருவரான பிரபுராஜன், "சட்டப்படி அந்தச் சொத்துக்கு வாரிசுகள் நாங்கதான். அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கணும்கிற அவசியம் எங்களுக்கு இல்ல. ஆனா.. ரூ.1 கோடி பெறுமான சொத்துங்கிறதுனால, எங்ககிட்டயிருந்து ரூ.10 லட்சம் வரை லஞ்சம் எதிர்பார்க்குது வருவாய்த்துறை அலுவலகம். லஞ்சம் கொடுக்கவே கூடாதுங்கிறதுல நாங்க உறுதியா இருக்கோம். சாத்தூர்ல இருக்குற விருதுநகர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்துல, ரமேஷ், பாலன் தரப்புல,‘பெரியம்மா ஜான்சி எழுதிக்கொடுத்த உயில் படி எங்களுக்கே தீர்வை வழங்கணும்னு உத்தரவு பிறப்பிக்கணும்னு வழக்கு தொடுத்தாங்க. அந்த வழக்கை விசாரிச்ச நீதிபதி, "உயில் ஆவணம் தகுந்த சாட்சிகள், ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்படாத தாலும், வாதிகள் உண்மையை மறைத்து இந்த நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், வாதிகள் சுத்தமான கரங்களுடன் நீதிமன்றத்தை அணுகவில்லை என்றும், வாதிகள் கூறும் பரிகாரம் வாதிகளுக்கு கிடைக்கத்தக்கதல்ல..' எனத் தீர்ப்பு எங்கள் தரப்புக்கு சாதகமாக வந்தது'' எனக் கூறினார்.
பிரபுராஜன் தொடர்ந்து நம்மிடம் "உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்ப வச்சு, விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலரோட உத்தரவுப்படி பட்டா கேட்டு, 12-8-2018ல் சாத்தூர் வட்டாட்சியர்கிட்ட மனு கொடுத் தோம். அந்த மனுவ அஞ்சு வருஷமா கிடப்புல போட்டுட் டாங்க. அதிகாரிகளுக்கு தொடர்ந்து நினைவூட்டல் கடிதம் அனுப்பிட்டே இருந்தோம். அப்படித்தான், 9-1-2023ல் நாங்க அனுப்புன நினைவூட்டல் கடிதம் தலைமைச் செயலாளர் இறையன்புகிட்ட போச்சு. இத்தனை ஆண்டுகாலமா ஏன் நடவடிக்கை எடுக்கலன்னு சாத்தூர் வருவாய்த்துறையினரை இறையன்பு சார் ஆபீஸ்ல இருந்து கேள்வி கேட்டாங்க. அப்புறமும், சாத்தூர் வருவாய்த்துறையினர் திருந்தல.
‘எங்க மேல்முறையீட்டு மனுவுல "ஜெகதீசன் இறப்புச் சான்றிதழும், வாரிசுச் சான்றிதழும் இணைக்கப்படல, அனுபவ உரிமை எங்ககிட்ட இல்ல'ன்னு ஒரு காரணத்தைச் சொல்லி 12-4-2023ல் மனுவ தள்ளுபடி பண்ணுறதுக்கு சாத்தூர் வருவாய்த்துறை அஞ்சு வருஷம் எடுத்துக்கிருச்சு. காரணம், ரமேஷ், பாலன் தரப்பு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கவனிச்சதுதான். சாத்தூர் வட்டாட்சியரோட உத்தரவுக்கு மேல்முறையீடாக 12-5-2023 அன்று வருவாய் கோட்டாட்சியரிடம் ஜெகதீசன் இறப்புச் சான்றிதழையும், வாரிசுச் சான்றிதழையும் இணைச்சு மனு கொடுத்தோம். அதுக்கு கோட்டாட்சியர், வாரிசுகளான எங்க கிட்ட அனுபவ உரிமை இல்லைன்னு நோட் போட்டு திரும்பவும் வட்டாட்சியருக்கே அனுப் பிட்டாரு. லஞ்சம் வாங்கிட்டு எங்களோட பூர்வீக சொத்துக்கு சம்பந்தமே இல்லாத ரமேஷ், பாலன் தரப்புக்கு பட்டா கொடுத்து, அனுபவ உரிமை அவங் களுக்கு கிடைக்கக் காரணமா இருந் தது வருவாய்த்துறைதானே? சாட்சி களை.. அதான் அந்த கடை வீடுகள்ல குடியிருக்கிறவங்கள விசாரிக்கி றோம்னு இழுத்தடிப்பு வேலைய இப்பவும் பண்ணிட்டு இருக்காங்க'' என்றார் வேதனையுடன்.
இன்னொரு தரப்பில் பாலனை தொடர்புகொண்டோம். "எங்க பெரியம்மா ஜான்சி முறைப்படி சுயமா சப்-ரெஜிஸ்ட்ரர் ஆபீஸ்ல பதிஞ்சு கொடுத்த உயில் அது. அவங்க மனநிலை சரியில்லாதவங்கன்னு எந்த ரெக்கார்டும் இல்ல. நாங்களும் உண்மைக்காகத்தான் போராடுறோம்'' என்றவரிடம் நீங்களும் ரமேஷும் உண்மையை மறைத்ததாக‘உரிமையியல் நீதிமன்றம் குறிப் பிட்டதைக் கேட்டபோது "அவங்க கரங்கள் சுத்தமானதா? எங்ககிட்டயும் கோர்ட் டாகு மென்ட்ஸ் இருக்கு. அவங்க பக்கம் தீர்ப்பா யிருச்சுன்னு எல்லார்கிட்டயும் சொல்றாங்க. உயில் செல்லத்தக்கது அல்ல, நிரூபிங்கன்னுதான் கோர்ட் சொல்லிருக்கு. எங்க உயில் சாட்சிகளை விசாரிக்க மனு கொடுத்திருக்கோம். கோர்ட்ல எங்க கேஸ் நடந்துட்டிருக்கு'' எனப் படபடத்தார்.
சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா வை தொடர்புகொண்டோம். "இந்த விஷயத்த விசாரிக்க வட்டாட்சியருக்கு குறிப்பாணை அனுப்பியிருக்கேன். தாசில்தார் ஆபீஸ்ல 10 லட்ச ரூபாய் லஞ்சம் எதிர்பார்த்தது யாருன்னு சொன்னா, நிச்சயமா நடவடிக்கை எடுக்கமுடியும். பிரச்ச னைக்கு விரைந்து தீர்வுகாண நடவடிக்கை எடுக் கிறேன்'' என்று உறுதியளித்தார். தமிழ்நாட்டில் வரு வாய்த்துறை அலுவலகங்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றாத காரணத்துக்காக அலைக்கழிக்கப் படும் மக்கள் மலிந்து கிடக்கின்றனர்.
_______________________
கடந்த மே 20-23 நக்கீரன் இதழில், 'மத்திய அரசு வைத்த செக்! கல்வித்துறையில் நடந்த மோசடிகள்! பகீர் தகவல்கள்!' என்ற தலைப்பிலான கட்டுரையில், சமூத்ரா சிக்ஸா அபியான் திட்டத்தை மனிதி என்கிற அமைப்பின் மூலம் செயல்படுத்திய தாகக் கூறப்பட்டிருப்பதை மனிதி அமைப்பு மறுத் துள்ளது. அதேபோல், மனிதி அமைப்பின் தலைவர் மற்றும் மற்றொரு நிர்வாகிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அந்த சிக்கல் கல்வி அமைச்சர்வரை கொண்டு செல்லப்பட்டதாகக் குறிப்பிட்டிருப்பதையும் மறுத்துள்ளது.
(ஆர்.)