வாணியம்பாடி -திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள ஏலகிரி மலையை ஏழைகளின் ஊட்டி என்பார்கள். ஆனால், அங்குள்ள அறை வாடகையைக் கேட்கும் சுற்றுலாப்பயணிகளோ, இது பணக்காரர்களின் ஊட்டின்னு சொல்லுங்க என்கிறார்கள்!

ooty

அறை வாடகையென்ன அவ்வளவு அதிகமா? என்று விசாரணையில் இறங்கினோம். ஏலகிரியில் படகு இல்லம், கார்டன், சின்னச் சின்ன கோவில்கள் தவிர சுற்றிப்பார்க்க பெரிதாக எதுவும் கிடையாது. ஆனாலும் அங்குள்ள ஜில் க்ளைமேட் தான் மக்களை ஈர்ப்பதற்கான காரணமே. இங்குள்ள தங்கும் விடுதிகளில், வார இறுதி நாட்களில் அறைகள் கிடைப்பது சாத்தியமேயில்லை. நடுத்தரமான ஹோட்டல் களிலேயே அறை வாடகை 4 ஆயிரம் ரூபாய் அளவுக்கு இருக்கிறது. பெரிய ஹோட்டல்களில் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். தங்கம் பெயரிலுள்ள பெரிய நட்சத்திர விடுதி சமீபத்தில் திறக்கப்பட்டது. சோசியல் மீடியாவில் அந்த ஹோட்டல் குறித்து ஆஹாஓஹோவென விளம்பரம் செய்தது அதன் நிர்வாகம். ஆனால் அவர்களிடம் ரூம் வாடகை குறித்து தெரிந்துகொள்ள தொடர்புகொண்டாலோ, "ஆங்கிலத்தில் பேசுங்க, இந்தியில் பேசுங்க, தெலுங்கில் பேசுங்க'' எனக் கேட்கிறார்களாம். தமிழில் பேச அட்டென்டர் இல்லையாம். இங்கு அறை வாடகை மிக அதிகம்... அந்தளவுக்கு வசதிகள் தருகிறார்கள். ஊட்டி, கொடைக்கானலில் இருப் பதைவிட அதிக வாடகை எதற்கென்று கேள்வி எழாமலில்லை.

ஏலகிரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நிலாவூர் கோவிந்த சாமியிடம் இதுகுறித்து கேட்ட போது, "முன்ன இருந்தமாதிரி இப்போ எங்க மலை கிடையாது. இப்போ சென்னை, பெங்களுரு, ஆம்பூர், வேலூரிலிருந்து நிறைய மக்கள் வர்றாங்க. இதனால் இப்போ நிறைய மாற்றம் வந்துடுச்சி. தொடர்ந்து நாலு நாள் கவர் மெண்ட் லீவு கிடைச்சதுன்னா உடனே குடும்பத்தோடு கிளம்பி வந்துடுறாங்க. சாதாரணமாகவே ஆயிரத்துக்கும் அதிகமான கார்கள் வருது. மலையில் முதல்ல பட்டைச் சாராயம் தான் காய்ச்சிக்கிட்டு இருந்தாங்க. இப்போ அர சாங்கமே கடை யைத் திறந்த தால் சாராய மெல்லாம் இப்போ மலையில இல்ல. நிறைய ஜோடி ஜோடியா வந்து ரூம் போடறாங்க. அது யாருன்னு ஹோட்டல்காரங்களுக்கும் தெரியறதில்லை. எல்லார்கிட்டயும் சர்ட்டிபிகெட் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது. மற்றபடி எங்கள் மலை பாதுகாப்பாகத்தான் இருக்கு'' என்றார்.

ooty

Advertisment

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி, ஆந்திரா வெதுருகுப்பம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நடனக் கலைஞர் ஹீமா, தனது தோழிகள் 7 பேர், ஆண் நண்பர்கள் இருவருடன் வந்து ஏலகிரியில் உள்ள அத்தனாவூரில் ஒரு பிரபல விடுதியில் தங்கி யுள்ளார். நள்ளிரவில் இவர்கள் அவசரஅவசரமாகக் கிளம்பி, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஹீமாவை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து பரி சோதிக்க, ஹீமா இறந்தவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ஏலகிரி போலீஸார் இதனை விசாரித்ததோடு விவகாரம் ஊத்தி மூடப்பட்டது.

"இருநூறுக்கும் அதிகமான தங்கும் விடுதிகள் இருக்கு. இங்க வர்றவங்க குடும்பத்தோடோ அல்லது குழுவாகவோ தான் வரமுடியும். விடுதி களில் சி.சி.டி.வி. கேமரா இருக்கு. அதனால் தப்பு நடப்பது குறைவு. ஆனால் நிறைய காட்டேஜ், தனிநபர் வீடுகள் இருக்கு. அங்கே தங்குபவர்களால் தவறுகள் நடப்பதாகச் சொல்கிறார் கள். அதற்கும் ஆதாரங்கள் ஏதுமில்லை'' என்கிறார் பிரபல ஹோட்டல் மேலாளர்.

ooty

Advertisment

ஏலகிரியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன், "இங்க பெரிய பெரிய விடுதிகள் இருக்குங்க. வீடுகளையே அப்படி மாத்திடுறாங்க. இவற்றில் முறையான அனுமதியில்லாத விடுதிகள் அதிகம். ஏழைகள் வந்து தங்குமளவுக்கு எந்த விடுதியிலும் விலை கிடையாது, பணக்காரர்கள் மட் டுமே தங்க முடியும். வாடகைக்கு வரைமுறையே கிடையாது. இஷ்டத்துக்கு வாங்குகிறார்கள். இங்குள்ள விடுதிகளில் கலாச்சாரச் சீர்கேடுகள் நிறைய நடக்குது. அதனை ஹோட்டல்காரர்கள் கண்டுகொள்வதில்லை. காலேஜ் பசங்களிடம் போதைப் பொருட்கள் அதிகமாகிடுச்சி. வெளியூர் களிலிருந்து போதைப் பொருட்களை மலைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்காங்க. விடுதியில் தங்கிய ஒரு பொண்ணு தற்கொலை செஞ்சிடுச்சு. எதுக்காக தற்கொலை செஞ்சதுன்னு தெரியல. காவல்துறையும் பெருசா அதைக் கண்டுக்கல. போலீஸ் விடுதிகளை கண்காணிக்கறதே இல்லை'' என்றார்.

வேலூர், சென்னையை சேர்ந்த பிரபல தனியார் பொறியியல், மருத்துவ பல்கலைக்கழக மாணவ -மாணவிகள், பெங்களுரூவை சேர்ந்த ஐ.டி. துறை இளசுகள், கல்லூரி மாணவ -மாணவிகளே அதிகளவு ஏலகிரிக்கு வந்துசெல்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் ரெய்டு நடத்தி போதைப்பொருட்களோடு கல்லூரி, ஐ.டி. துறை பசங்களை பிடித்தனர். அதன்பிறகு அப்படியொரு ரெய்டு இங்கு நடக்கவில்லை. அதற்காகத் தவறு நடக்கவில்லை என்பதில்லை. போலீசுக்கு செல்லவேண்டிய மாமூல் சரியாகப் போகிறது. பல அரசியல் பிரபலங்களுக்கு இங்கே ரிசார்ட் இருக்கிறது. எனவே இங்கே ரெய்டு நடத்துவதற்கு போலீசுக்கு தைரியம் இல்லை. அதனால் ஏடாகூட ரூம் வாடகையிலிருந்து, சட்டவிரோதச் செயல்கள் வரை கேட்பாரில்லாத நிலை என்கிறார்கள்.