dd

(59) ஏர்போர்ட்டுல தூக்கம்; ஸ்டுடியோவுல குளியல்!

த்யா ஸ்டுடியோ நிர்வாகி பத்மநாபனின் "மக்கள் திலகம் பிக்சர்ஸ்'ஸுக்காக விஷ்ணுவர்த்தனை வைத்து ‘"டிசம்பர் 31'’ கன்னடப் படத்தை கர்நாடக லொகேஷன்களில் இயக்கி வந்தேன்.

கன்னட திரையுலகில் ராஜ்குமாரின் முரட்டு ரசிகர்கள், பிற ஹீரோக்களின் படங்களை இயக்குபவர்களை மனுஷனாகக் கூட மதிப்பதில்லை.

Advertisment

ஒரு அச்சமான சூழ்நிலையில்தான் படப்பிடிப்பை நடத்தி வந்தேன். எந்தளவுக்கு அச்ச மென்றால்... நான் விஷ்ணுவர்த்தனை வைத்து படம் இயக்கிக்கொண்டி ருந்தபோது, ராஜ்குமார் படம் ஒன்றை பி.வாசு இயக்கிக்கொண் டிருந்தார். ஷூட்டிங் ஸ்பாட் பகுதிகளில் பி.வாசு என்னைப் பார்த்தால்கூட, பார்க்காதது மாதிரி போவார். நானும், அவர் யாரோ’ என்கிற பாவனை யில்தான் நடந்துகொண் டேன்.

இத்தனைக் கும் நாங்கள் இருவரும் டைரக் டர் ஆவதற்கு பல வருடங்கள் முன்பிருந்தே நெருங்கிய நண் பர்கள். நட்பைக் கூட காட்டிக் கொள்ள முடி யாத அளவுக்கு நிலமை அவ்வ ளவு பதட்டமாக இருந்தது.

ஒருநாள்....

Advertisment

படப்பிடிப்பை முடித்துவிட்டு, நாங்கள் தங்கியிருந்த கனிஷ்கா ஹோட்டலுக்கு வந் தோம். நான் ரிலாக்ஸ்டா லுங்கி கட்டிக்கொண்டு, ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்தேன். எங்கள் யூனிட்டைச் சேர்ந்த சிலரும் அங்கே நின்றிருந்தார்கள்.

அப்போது திபுதிபுவென ஒரு ஆவேசக் கூச்சலோடு ராஜ்குமார் ரசிகர்கள் ஒரு கும்பலாக ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள். கேமராமேன் பி.ஆர்.விஜயலட்சுமியோட அஸிஸ்டெண்ட் நல்ல சிவப்பா, ஸ்டைலா, பார்க்கிறதுக்கு ஒரு டைரக்டர் தோரணையோட இருப்பான். அவன்தான் டைரக்டர் என நினைத்து, அவனைச் சூழ்ந்துகொண்டு, கன்னடத்தில் கெட்ட வார்த்தைகளில் கடுமையாக திட்டினார்கள்.

அவன் பரிதாபமாக என்னைப் பார்த்தான்.

என் உடம்பு அடி தாங்குற உடம்பு இல்லையே... அதனால், "என்னைக் காட்டிக் கொடுத்தே, அப்புறம்...'’என பார்வையாலேயே அவனை எச்சரித்தேன்.

dd

அவனை அடி பின்னியெடுத்துவிட்டு, ஆவேசம் குறையாமலேயே “"ஷூட்டிங்கை கேன் ஸல் பண்ணிட்டு, மெட்ராஸுக்கு ஓடிடு'’என கன்னடத்தில் எச்சரித்துவிட்டுப் போனார்கள்.

"டெய்லி இப்படி ஏதாவது பிரச் சினைன்னா, எப்படி சார் படத்தை முடிக்கிறது?'' என பி.ஆர்.விஜயலட்சுமி கேட்டார்.

எனக்கும் அதே கேள்விதான் இருந்தது.

ராஜ்குமார் ரசிகர்கள் எங்கள் யூனிட்டை தாக்கி, எச்சரித்துவிட்டுப் போன விஷயம் விஷ்ணுவர்த்தனுக்கு எட்டியது.

அவர் தன்னோட பாடிகாட்களை எங்களுக்கு பாதுகாப்பா களத்தில் இறக்கினார்.

தினசரி யுத்தத்திற்கு போவதுபோல்தான் இருந்தது ஷூட்டிங் போவது. ஆனாலும் விஷ்ணுவர்த்தன் ஆட்கள் எங்களுக்கு பாது காப்பு அளிக்கத் துவங்கியதும், ராஜ்குமார் ரசி கர்களால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை .

பிரபு சார், ரேகா நடிப்பில் ‘"மூடு மந்திரம்'’ படப்பிடிப்பு சென்னையில் ஒரு ஃபோர்ஷனும், ஊட்டியில் ஒரு போர்ஷனும் எடுக்கப்பட்டது. இன்னொருபுறம் விஜயகாந்த் சார், சுஹாசினி, ரேகா நடிப்பில் "என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான்'’படப்பிடிப்பு.

இந்த இரண்டு படங்களுக்கும் கலைமணி சார்தான் கதை.

மறுபுறம் ‘"டிசம்பர் 31'’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு.

மூன்று பட வேலைகளும் எனக்கு கிளாஷ் ஆனது.

காலையில் ஏழு மணியிலிருந்து ஒருமணி வரை விஜயகாந்த் சார் படம், மதியம் இரண்டு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை பிரபு சார் படம்.

ரெண்டு பட ஷூட்டிங்கையும் முடிச்ச தும், ஏழு மணிக்கு பெங்களூருவுக்கு ஃப்ளைட் டில் போவேன். அங்கே விடிகாலை நாலு மணி வரை விஷ்ணுவர்த்தன் சார் ஷூட்டிங். நாலு மணிக்கு பெங்களூரு ஏர்போட்டுக்கு வந்து அங்கேயே வெய்ட்டிங் ரூமில் தூங்கிவிட்டு, ஆறு மணிக்கு ஃப்ளைட் ஏறி, சென்னை. இங்கே ஏழு மணியிலிருந்து விஜயகாந்த் சார் படம்.

இப்படி ஓய்வில்லாமல் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருந்தேன்.

"என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' பட வேலைகள் தொடங்கியதுமே, படத்தின் வட-தென் ஆற்காடு, செங்கற்பட்டு பகுதிகளை உள்ளடக்கிய என்.எஸ்.சி. ஏரியா விநியோக உரிமையை ராதிகாவின் அம்மா கீதாம்மா வாங்கியிருந்தார்.

கீதாம்மா இப்படி ஏரியா விநியோக உரிமை வாங்கி, அதை வேறு விநியோகஸ்தர் களுக்கு கூடுதல் விலை வைத்து விற்றுவிடுவார் அல்லது அவரே ரிலீஸ் பண்ணுவார். விநியோக பிசினஸ் அவருக்கு கைவந்த கலை.

படத்தின் கதாநாயகி குறித்து பேச்சு வந்தது. அப்போது நான் வழக் கம்போல ராதிகாவின் பெயரைச் சொன்னேன்.

"ராதிகா ஓ.கே. ஆனா ஒரு மாறுதலுக்கு வேற கதாநாயகியை தேர்வு செய்யுங்க'’என என்னைச் சுற்றி இருந்தவர்களும், படக்கம்பெனி சார்பிலும் சொன்னார்கள். இந்த விவாதம் நடத்துகொண்டிருந்த நேரத்தில் விஜயகாந்த்திற்கும், ராதிகாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தனர்.

dd

சுஹாசினியையும், ரேகாவையும் படத்திற்கு ஒப்பந்தம் செய்தாலும்கூட, என் கவலை எல்லாம்... “"பெரிய பிசினஸ் ஏரியாவான என்.எஸ்.சி.க்கு படத்தோட விநியோக உரிமை யை வாங்கியிருக்கார் ராதிகாவின் அம்மா. படத்துல ராதிகா ஹீரோயின் இல்லேன்னு தெரிஞ்சா, ஏரியா வேணாம்னு சொல்லிடுவாரோ?'”என்கிற யோசனையாகவே இருந்தது.

ஆனால் அதற்கு பிரச்சினை வராதபடி இன்னொரு ஒப்பந்தம் அமைந்தது. அது... ராதிகாவின் சொந்தப் படத்தை நான் இயக்க வேண்டும் என்பதுதான்.

இப்படி பிஸியான படப்பிடிப்பிற்கு மத்தியில் நான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

உலகத் தமிழர்களால் மறக்க முடியாதது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் மரணம். அவரின் மரண நிகழ்வு எனது வாழ்க்கையிலும் சில சிரமங்களை உண்டாக்கியது. அது மட்டுமல்ல... என் சினிமா வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையை உண்டாக்கியது.

எம்.ஜி.ஆர் மீது மக்களுக்கு இருந்த அபிமானம் எல்லாரும் அறிந்ததுதான் என்றாலும், அந்த அபிமானம் அதிர்ச்சியூட்டத்தக்க வகையிலும் இருந்ததை நான் என் கண்ணால் கண்டேன். எல்லோர் கால்களும் ஒரே திசையில், ராஜாஜி ஹால் நோக்கி நடக்க... என் கால்கள் எதிர் திசையில் அடையாறு நோக்கி நடந்தது.

அதுபற்றிச் சொல்கிறேன்.

(பறவை விரிக்கும் சிறகை)