சிவகாசி பகுதியில் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 50 கிலோ அரிசிப் பைகள் 60 (3000 கிலோ) கைப்பற்றப்பட்டு, கலையரசன் மற்றும் காளிராஜன் மீது வழக்கு பதிவானது. காளிராஜன் தலைமறைவாகிவிட, கலையரசன் கைது செய்யப்பட்டார்.
நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், ""அருப்புக்கோட்டையில் ரைஸ் மில்களை நடத்திவரும் ரவி மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும், முக்கியப் புள்ளி ஒருவரது பின்னணியில், ரேசன் அரிசி சம்பந்தப்பட்ட அத்தனை தில்லுமுல்லுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்'' எனத் தகவல் தெரிவித்தார்.
மேலும் அவர், “""அருப்புக்கோட்டை, எஸ்.பி.கே. கல்லூரி சாலையில் உள்ள வேல்முருகனின் ரைஸ் மில்லுக்கு அந்தப் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இருந்து டூவீலர்களில் ரேசன் அரிசி கடத்திவரப்பட்டு, நாளொன்றுக்கு 200 குவிண்டால் வரை அரைத்து மாவாக்கப்படுகிறது. ரவியோ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து அரைப்பதற்காக வாங்கும் நெல்லை அப்படியே வெளி மார்க்கெட்டில் விற்கிறார். அதேநேரத்தில், ரேசன் கடைகளில் இருந்து பிளாக்கில் வரும் அரிசியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்கியில் சேர்த்துவிடுகிறார். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை அரசுத் துறையினர் கண்டுகொள்ளா மல் இருப்பதற்காக காவல்துறையினர், வருவாய்த்துறை யினர், குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறையின ருக்கு மட்டுமல்லாது, முக்கிய அரசியல் புள்ளிக்கும் கணிசமான தொகையை மாமூலாகக் கொடுத்து வருகின்ற னர்''’என்றார். நாம் வேல்முருகனைத் தொடர்புகொண் டோம். ""அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைல பாலிடிக்ஸ் ஓடிட்டிருக்கு. சுதாகர் கோஷ்டி, மனோகரன் கோஷ்டின்னு ரெண்டு கோஷ்டி இருக்கு. இந்த ரெண்டு கோஷ்டிலயும் நான் இல்ல. மனோகரன் கோஷ்டில ரவி இருக்காரு. ஆளும்கட்சில உள்ளவங்களுக்கு ரவி ரொம்ப நெருக்கம். ரவிதான் எல்லாம் பண்ணுவாரு. நாங்க ரைஸ்மில் ஓட்டுறோம். அந்த மாதிரி வேலை பார்க்கிறது இல்ல''’ என்றார்.
ரேசன் அரிசி விவகாரம் குறித்து நம்மிடம் விளக் கம் அளித்த எஸ்.கே.ஏ.பி. ரவி, ""கட்சிப் பிரமுகர் கே.கே.எஸ்.வி.டி. மில்லைத்தான் மொதல்ல லீசுக்கு எடுத்து நடத்துனேன். இப்ப எனக்கு யாரோட சப்போர்ட்டும் இல்ல. மந்திரி என்கிட்ட, "நான் தலையிட மாட்டேன். உன் பிரச்சினைய நீயே முடிச் சுக்க'ன்னு சொல்லிட்டாரு. கவர்மென் டுக்கு நெல்லை நேர்மையா அரைச்சுக் கொடுத்துருவோம். யாருக்கும் மாமூல் கொடுக்கிறது கிடையாது. என் மில்லுக்கு கலெக்டர் வந்தாரு. ஐந்தாறு ஐ.ஏ.எஸ். வந்தாங்க. எங்க மில் மாதிரி எல்லா மில் லும் அரைச்சு கொடுக்கணும்னு ஆர்டரே போட்டாங்க. அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை சொத்து ரூ.2000 கோடிக்கு மேல இருக்கு. 10 வருஷமா உறவின்முறை தலைவரா இருந்த சுதாகர், கிட்டதட்ட ரூ.40 கோடி வரை எடுத்துட்டாரு. பீரியட் முடிஞ்சபிறகும் 2 வருஷம் இல்லீகலா ஓட்டிட்டு இருந்தாரு. அ.தி.மு.க. ஆட்சி நடந்தப்ப போலீஸையும் மந்திரியையும் வச்சு சுதாகர் ஆட்டம் போட்டாரு. சுப்ரீம் கோர்ட் வரைக்கும் இந்த விவகாரம் போச்சு. அஞ்சு மாசத்துக்கு முன்னால ரிட்டயர்ட் ஜட்ஜை வச்சு எலக்ஷன் நடத்தி காமராஜன் உறவின்முறை தலைவர் ஆயிட்டாரு. அந்த எலெக் ஷனுக்கு உயிர் கொடுத்தது நாங்க. உறவின்முறை கணக்கு எல்லாம் எடுத்து பத்து வருஷமா முறை கேடு பண்ணுன சுதாகர் மேல ஆக்ஷன் எடுக்க ரெடி பண்ணுறாங்க. என்னைய இன்சல்ட் பண்ணுற வேலையை சுதாகர்தான் பார்க்கிறாரு''’என்றார்.
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டின் முன்னாள் தலைவர் சுதாகரை தொடர்புகொண்டோம்.
""ஆளும்கட்சி முக்கிய புள்ளிகள வச்சு அந்த கோஷ்டிதான் விளையாடுது. காமராஜன் உறவின் முறை தலைவரானது இல்லீகல். சட்டப்படி வருஷத் துக்கு 500 ரூபாய் கட்டணும். அவரு 10 ரூபாய்தான் கட்டுறாரு. பைலாபடி அவரு தலைவரா வரமுடி யாது. தலக்கட்டுல இல்லாத மெம்பர் எல்லாம் வந்தி ருக்காங்க. 40 கோடி ரூபாய்க்கு கணக்கு கொடுன்னு கேட்க வேண்டியதுதான? எனக்கும் கணக்குக்கும் என்ன சம்பந்தம்? டிரஸ்ட் பார்த்துதான் முடிவு பண்ணும். நான் மீட்டிங்ல மட்டும் கலந்துக்குவேன். வேற என்ன இருக்கு? நான் தலைவரா இருந்தப்ப என் கைக்காச போட்டுத்தான் செலவு பண்ணிருக்கேன்''’என்றார்.
மாவு மில்களில் ரேசன் அரிசி முறைகேடுகள் நடப்பதாகச் சொல்லப் படும் விவகாரம், நாடார் உறவின்முறை தேர்தல் மற்றும் பண மோசடி எனத் திசை மாறிய நிலையில், உணவு பாதுகாப்பு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரியிடம் பேசினோம். நம்மிடம் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர், ""உடனடியாக அருப்புக்கோட்டை மாவு மில்களில் ஆய்வு மேற்கொண்டு, தவறு நடப்பது தெரிந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்''’என உறுதியளித்தார்.
தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தரப்பில் நம்மிடம் ""குடி மைப் பொருள் வழங்கல் குற்றப் புல னாய்வுத் துறை அளித்துள்ள புள்ளிவிபரங்களின் படி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியைக் காட்டிலும் தி.மு.க. ஆட்சியில் பலமடங்கு அதிகமாக வழக்குகள் பதிவாவதும், கடத்தப்படும் ரேசன் அரிசி கைப்பற் றப்படுவதும், குற்றவாளிகள் கைதாவதும் தொடர்ந்து நடக்கிறது. கடந்த 20 மாதங்களில் மட்டும், கடத் தப்பட்ட 1,04,015 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசி கைப்பற்றப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் 12,190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டஉந அரிசி, பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர், நெல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் 3069 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, 14,799 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலும் அரிசி ஆலைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அருப்புக்கோட்டையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே, அத்தியாவசி யப் பொருட்கள் சட்டத்துக்கு எதிராக குற்றம்புரி வோர் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றனர்.