"ஹலோ தலைவரே, ஏழுபேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரசை போலவே பா.ஜ.க. அரசும் செயல்படுவதை கவனிச்சீங்களா?''’

""ஆமாம்பா, நளினி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு அளித்த பதிலைப் பார்த்தேன்.. ''’

""ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 161 ஆவது சட்டப் பிரிவின் படி மாநில அரசுக்கு உரிமை உள்ளதுன்னு உச்சநீதிமன்றமே தெரிவித்த நிலையில், 2018 செப்டம்பர் 9-ல் தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைத் தும் இன்னும் விடுதலை கிடைக்கலை. இது தொடர்பா உயர்நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கில், சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் ஆஜ ராகி, அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வதில் லைன்னு 2018லேயே குடியரசுத் தலைவர் முடி வெடுத்து விட்டார்னு பதில் மனு தாக்கல் பண்ணி யிருக்காரு. மாநில அரசு என்ன செய்யப் போகுதுன்னு உணர்வாளர்கள் எதிர்பார்க்குறாங்க.''

“""7 பேர் உயிரும் வாழ்க்கையும் ஜெ. ஆட்சி யிலிருந்தே அரசியல் விளையாட்டா போயிடிச்சி.''

Advertisment

""தலைவரே.. அடுத்த செய்திக்கு வர்றேன். முகமூடி ரவுடிகளால் டெல்லி ஜே.எம்.யூ. மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாடு முழுக்க மாணவர்கள் அமைப்பு தீவிரமாகப் போராடி வருது. அவர்களுக்கான ஆதரவும் அதிகரிக்குது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தந்த ஆறுதல் பெரும் பரபரப்பானது. இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சம் ஏற்படுவதாக தீபிகா சொல்ல, அவர் தனது புதிய படமான "ஷப்பக்'குக்கு புரமோ பண்ணத்தான் வந்தாருன்னு பா.ஜ.க. தரப்பில் விமர்சனம் செய்து, படத்தைப் புறக்கணிக்கும்படி ஹேஷ்டாக் போட்டாங்க.''

deepika""தீபிகாவை விமர்சிப்பதால் உண்மையை மறைக்க முடியுமா?''

""முடியாதுங்க தலைவரே.. ஜே.என்.யூவில் படிக்கும் திருவாரூரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரான தமிழ் பரதன், அந்த கொடூர ஞாயிற்றுக்கிழமை என்ன நடந்ததுன்னு விரிவா பதிவு பண்ணியிருக்காரு. மாலை 6.30 மணியள வில் 50-க்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த நபர்கள் புகுந்து சபர்மதி விடுதி, தபதி விடுதி, உணவகம்ன்னு எல்லாவற்றையும் சூறையாடினார்கள்னும் மாண வர்கள், பேராசிரியர்கள்னு கண்மண் தெரியாமல் அடிச்சாங் கன்னும் நடுக்கம் மாறாம சொல்லியிருக்காரு. 8-ந் தேதி ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்துக் குப் போன தி.மு.க. எம்.பி. கனி மொழி, தாக்கப்பட்ட மாணவர் தலைவர் ஆயிஷா கோஷ் உள் ளிட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மர்ம நபர்களின் நட மாட்டத்தை உணர்ந்து அருகி லிருக்கும் வசந்த்கஞ்ச் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத் தும் நடவடிக்கை இல்லைன்னு ஆயிஷா கோஷ் சொல்லியிருக் காரு. நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை பெரிதாக எழுப்ப கனிமொழி தீவிரமான ஆத ரவைத் திரட்டுறாரு..''’

Advertisment

""ஜே.என்.யூ. தாக்குதலுக்கு ஹிந்து ரக்ஷா தளம்ங்கிற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறதாமே?''

""இந்துத்வா மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.தான் மொத்த பிரச்சினைக்கும் கார ணம்னு பாதிக்கப்பட்டவங்க சொல்றாங்க. அதை மறைக்க, புது அமைப்பின் தலைவர் பூபேந்திர தோமரை பொறுப்பேற்க வைத்திருப்பதா சந்தேகம் கிளம்பியிருக்கு. கலவரத்தில் சிக்கிய மாணவர் ஒருவர், நான் ஏ.பி.வி.பி.ன்னு சொன்னதும் முகமூடி ஆட்கள் என்னை விட் டுட்டாங்கன்னு சொல்லியிருக் காரு. எல்லாருடைய குற்றச்சாட் டும் ஜே.என்.யூ துணைவேந்தர் ஜெகதீஷ்குமாரின் பாரபட்சமான அணுகுமுறை மேலதான் இருக்குது.''’

""மாணவர்கள் உள்பட பலரும் எதிர்க்கின்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாராட்டிப் பேசி, மோடியின் மனதைக் குளிர வச்சிருக்காரே ஜக்கி வாசுதேவ்.''’

""ஆமாங்க தலைவரே, அது பற்றி நம்ம நக்கீரனில் ஏற்கனவே கட்டுரை வந்திருந்தது. ஜக்கியின் இந்த பா.ஜ.க. சேவை எதற் காகன்னு விசாரிச்சப்ப, ஏற்கனவே அவர் 160 கோடி ரூபாய் மதிப் பீட்டில் ஒரு மருத்துவக் கல்லூரி யைக் கட்ட முயன்றபோது, அதற்கான நிலம் தொடர்பாக அவர், ஏகப்பட்ட வழக்குகளை யும் சிக்கல்களையும் சந்திச்சார். அப்ப அதிலிருந்து விடுபடத் தான், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் அரசுக்கு ஆதர வாகப்பேசி, எடப்பாடி அரசின் மனதைக் குளிரவச்சார். அதே போல் இப்ப, "காவிரி காலிங்' என்ற பேரில், காவிரியாற்றங்கரை யில் மரம் நடும் திட்டத்துக்கும், அதற்காக நடக்க இருந்த மெஹா வசூலுக்கும் இடையூறா கர்நாடக ஹைகோர்ட்டில் ஒரு வழக்கு நடந்துக்கிட்டிருக்கு. அதில் நீதி மன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் கொடுக்கச் சொல்லி, நீதி மன்றம் அவரைக் கண்டிக்கவும் செய்திருக்கு. இப்படியொரு நெருக்கடி ஏற்பட்டதால்தான் அவர் மோடிக்காக குடியுரிமை திருத்தச் சட்டப் பாராயணம் பாடினார்னு தியான கிளாஸில் உள்ள ஆட்களே சொல்றாங்க.''

""கவர்னர் உரையும் அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் காரசாரமா நடப்பதோடு, பல மசோதாக்களையும் வேக வேகமா நிறைவேற்றுதே எடப்பாடி அரசு?''

rr

""உண்மைதாங்க தலைவரே, ஆங்கிலோ இந்தியருக்கான நியமன எம்.எல்.ஏ. பதவியை திடீர்னு ரத்து செய்திருக்குது. அதோட உள்ளாட்சி அமைப்பு களில் தலைவர் பதவிக்கு மறை முகத் தேர்தலை கொண்டுவரப் போகுதுங்கிற தகவலை முதன் முதலில் மக்கள் மத்தியில் போட்டுடைத்தது நம் நக்கீரன்தான். அதேபோல் இந்தக் கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதாவை எடப்பாடி அரசு நிறைவேற்ற இருப் பதையும் நக்கீரன்தான் சொல்லியிருந்தது. 9ந் தேதி எதிர்க்கட்சிகள் எதிர்த்தபோதும் இதற்கான மசோதாவை பா.ஜ.க. பாணியிலேயே நிறைவேற்றி விட்டது எடப்பாடி அரசு. இந்த நிலையில் உள் ளாட்சி அமைப்புகளில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு இருக்கும் ’செக்கில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து, அதை அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாமானு ஆலோசித்து வருகிறார் எடப்பாடி. தி.மு.க. அதிக இடங்களில் ஜெயித்திருப்பதால், அவர்களிடம் அதிகாரம் போயிடக்கூடாதாம். மறைமுக தேர்தலில் கவுன்சிலர் கடத்தலில் ஆளுந்தரப்பு ஈடுபட்டால் கண்டுக்க வேணாம்னும் வாய்மொழி உத்தரவாம்.''’

""என்னதான் எடப்பாடி இப்படியெல்லாம் சட்டத்தை வளைத்தாலும், மதுரை மாவட்டம் மஞ்சம்பட்டி ஊராட்சி உறுப்பினர் பார்வதி பதவியேற்கும்போது, "கடவுளறிய'ன்னு அலுவலர் சொன்னபோதும், கலைஞர் அறிய உளமார உறுதி கூறுகிறேன்னு சொன்னது அடிப்படை ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தி வைரலாயிடிச்சே..''

""நானும் பார்த்தேங்க தலைவரே.. வேறொரு செய்தி சொல்றேன். சட்ட விரோதமா கோவை மாவட்டத்தில் நிறைய செங்கல் சூளைகள் செயல்படுது. கோவை யின் வடக்குப் பகுதியில் இயங்கிவரும் இப்படிப்பட்ட சூளைகள், அங்கங்கே விருப்பத் துக்கும் மண்ணைத் தோண்டி எடுக்கின்றன. இவற்றைக் கண்காணிக்கும் கோவை வடக்கு தாசில்தார் மகேஷ், அப்படிப்பட்ட பள்ளத்தை எல்லாம் கர்ம சிரத்தையாக மூடிவிடுகிறாராம். தோண்டினாலும் மூடினாலும் இவருக்கு லாபமாம். இதற்கெல்லாம் கோவை மாவட்ட மந்திரியான உள்ளாட்சித்துறை வேலுமணி ஆசி வழங்கிக்கிட்டு இருக்கிறாராம்.''’

""வேலுமணிதான் எடப்பாடிகிட்டே ரொம்ப செல்வாக்கா இருக்காரே..''’

""வேலுமணியோட உள்ளாட்சித் துறை சார்பிலான மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவாக, இட்லி, தோசை, பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இதை தமிழகம் முழுவதுமான பள்ளிகளில் விரிவுபடுத்தினால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்னு எடப்பாடி யுடன் விவாதித்திருக்கிறார் வேலுமணி. இதற்கு 900 கோடி ரூபாய் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டு இருக்கிறது.''’

rr

""எல்லாத்திலும் ஒரு கணக்கு உண்டு..''

""ஆமாங்க தலைவரே, அ.ம.மு.க. மாநில நிர்வாகிகளிடம் விவாதித்த தினகரன், நம் கட்சி 27 மாவட்டங்களில் 1216 இடங்களில் இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறது. நமக்குக் கிடைத்த வாக்கு கள் அ.தி.மு.க. மீதான அதிருப்தி வாக்குகளும், இன ரீதியிலான வாக்குகளும்தான். நாம் போட்டியிடா மல் போயிருந்தால், நம் ஆதரவு வாக்குகள் எடப் பாடி சைடுக்கு போயிருக்கும். நாம் போட்டியிட்ட தால 1,500 இடங்களில் நம்முடைய வேட்பாளர்கள் தான் வெற்றி தோல்வியைத் தீர்மானித்து, தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்துவிட்டதுன்னு சொல்லியிருக்காரு.''’

""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக் கறேம்பா. முதல்வர் எடப்பாடி தரப்பு "தர்பார்' பட விநியோகம் மூலம் சினிமா பிஸ்னஸில் இறங்கியிருப்பதா நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். இதற்கான முதலீடுகள், பொ.ப.து. டெண்டர் விவகாரங்களைக் கவனித்துவரும் அவரது பி.ஏ.சேகர் மற்றும் காவல்துறை தொடர்பான நியமனங்களை முடிவு செய்யும் சேலம் ஜிம் அருண் ஆகியோர் மூலம் ஆவின் பார்ட்டிக்குப் போய், அதுதான் கோலிவுட்டில் முதலீடாகிறதாம். அதேபோல் எதிர்க்கட்சித் தரப்புக்கும் எடப்பாடியின் நிதி முதலீட்டு உதவி போகிறதாம். அண்மையில் தேசத் தலைவர் ஒருவரின் பெயரைக் கொண்ட மைய மாவட்டத்துப் பிரமுகர் தரப்புக்கு 50 சி லம்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.''