"ஹலோ தலைவரே, போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தமிழக போலீசின் கில்லாடித்தனம் தெரிஞ்சதுதான். இப்ப வாட்ஸ்ஆப் வரைக்கும் போன் ஒட்டுக்கேட்பு உலகத்தையே கலக்குது.''
""பிரியங்காகவுக்கு வாட்ஸ்ஆப்பிலிருந்து எச்சரிக்கை மெசேஜ் வந்ததா காங்கிரஸ் தரப்பில் சொல்றாங்களே?''
""நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பிரியங்காவின் வாட்ஸ்ஆப் உரையாடல்களை பிகாசஸ்(pegasus)என்கிற உளவு பார்க்கும் இஸ்ரேல் சாஃப்ட்வேர் மூலம் பா.ஜ.க. அரசு உளவு பார்த்ததா, வாட்ஸ் ஆப் நிறுவனமே பிரியங்காவுக்கும் தகவல் கொடுத்து உஷார் பண்ணியிருக்கு. இதுபோல இந்தியாவைச் சேர்ந்த ஏறத்தாழ 40 பேரின் வாட்ஸ்ஆப் உரை யாடல்கள் வேவு பார்க்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் தெரியவந்திருக்கு. இந்த விவகாரம் தொடர்பா காங்கிரஸ் எம்.பி.க்களான சசிதரூர், ஆனந்த் சர்மா ஆகியோர் அடங்கிய நாடாளு மன்ற நிலைக்குழு விசாரிக்க இருக்குது. இந்தக் குழுவின் முதற்கட்ட விசாரணை, மத்திய உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் நடக்க இருக்குதாம்.''
""அடுத்தவர் உரையாடலை ஒட்டுக் கேட்பது என்பது தனிமனித உரிமை மீறல்ன்னு தெரிஞ்சும் கூட, மத்திய அரசு தன் அரசியல் எதிரிகளை வேவு பார்க்க தன் அரசு அதி காரத்தை பயன்படுத்தியிருப்பது குற்றம்தானே!''’
""ஒட்டுக்கேட்பு, ரெகார்டிங் இதெல்லாம் பா.ஜ.க. அதிகாரத்தில் இருக்கிற மாநிலத்திலேயே நெருக்கடியை உண்டாக்குது. கர்நாடக முதல்வரா இருந்த குமாரசாமிக்கு எதிரா பா.ஜ.க. காய்நகர்த்தி, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களைக் குதிரை பேரம் மூலம் இழுத்து, ஆட்சியையும் குறுக்கு வழியில் கைப் பற்றுச்சு. முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எடியூரப்பா, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அண்மையில் பேசிய ரகசியப் பேச்சு அம்பல மாகியிருக்கு. ஆபரேசன் தாமரைங்கிற பேரில் நாம் ஆட்சியைப் பிடிக்க உதவிய இந்தத் திட்டம், நம் தேசியத் தலைவர் அமித்ஷாவால் மேற்கொள்ளப் பட்ட திட்டம்ன்னு அட்சரம் பிசகாமல் சொல்லியிருக்கார். இதைக் கேட்ட காங் கிரஸ் கட்சியினர், பா.ஜ.க. குதிரை பேரம் நடத்தித் தான் எங்கள் ஆட்சி யைக் கவிழ்த்தது. அதனால் கர்நாடகா வில் இருக்கும் எடி யூரப்பா ஆட்சியைக் கலையுங்கள்ன்னு இந்த டேப்பை ஆதாரமா காட்டி, ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருக் காங்க. அதோடு சுப்ரீம் கோர்ட்டி லும் வழக்குத் தொடரத் தயாராயிட்டாங்க.''’
""மகாராஷ்டிராவில் கூட இந்தக் குதிரை பேர டெக்னிக்கைத்தானே பா.ஜ.க. கையில் எடுத் திருக்கு?''’
""ஆமாங்க தலைவரே, ஏற்கனவே கோவா தொடங்கி பல மாநிலங்களிலும் இதே ஜனநாயகப் படுகொலை மூலம்தான் அரியணை ஏறியிருக்கு பா.ஜ.க. ஆனா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய ரெண்டு மாநிலங்களில் மட்டும் வி.ஐ.பி.க்களைத் துரத்துது. தமிழ்நாட்டில் ரஜினிக்கு வலை வீசிக்கிட்டே இருக்கு. அவர் இன்னும் சிக்கலை. வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குப் பிறகு அரசியல் நடவடிக்கைகள் எப்படி போகும்னு எதிர்பார்ப்பு எகிறியிருக்கு. மேற்கு வங்கத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலியை வளைக்கும் அசைன்மெண்டில் களமிறங்கிய அமித்ஷா, நீங்கள் மேற்குவங்க மாநில பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரும்பறீங்களா? இல்லை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு என் மகன் ஜெய்ஷாவோடு இணைந்து செயல்படுகிறீர்களா?ன்னு கேட்க, கங்குலியோ என் சாய்ஸ் கிரிக்கெட் வாரியம்தான்னு சொன்னார். இதைத் தொடர்ந்துதான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரா ஆக்கப்பட்டிருக்கார் கங்குலி. அடுத்ததா அவருக்கு அரசியல் வலை வீசப்படுமாம்.''’
""மத்திய அமைச்சரவையை மாற்றும் பா.ஜ.க.வின் திட்டம் என்ன ஆச்சு?''’
""மத்திய அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பா அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங்குடன் போன வாரம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்ப, தமிழகத்தில் இருக்கும் தோழமைக் கட்சிகளான பா.ம.க.வையும், த.மா.கா.வையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வது பற்றியும் விவாதிச்சிருக்கார். அன்புமணியை அமைச்சராக்கி, பா.ம.க.வை நம் கைப்பிடியிலேயே வைத்துக்கொள்வது நம் எதிர்கால அரசியல் திட்டத்துக்கு உதவும்ன்னும் சொன்ன மோடி, த.மா.கா. வாசனையும் நினைவூட்டியிருக்கார். அப்ப அமித்ஷா, அவர் கட்சியை பா.ஜ.க.வோடு இணைக்கும் பட்சத்தில் அவரை அமைச்சராக்குவது பற்றி யோசிப் போம்ன்னு அழுத்தம் கொடுத்துச் சொல்லி யிருக்கார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றியும் தீவிர டிஸ்கஷன் நடந்திருக்கு. அப்ப அவர் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் வருவதால் அமைச்சரவையில் இருந்து அவருக்கு கல்தா கொடுக்லாமான்னும் ஆலோ சனை பண்ணியிருக்காங்க. அதேசமயம் அவர் ஆதர வாளர்கள், நிர்மலாவின் பதவியைப் பறித்தால், அவரைத் தமிழக பா.ஜ.க. தலைவராக ஆக்கிடுங்கன்னு வலியுறுத்த றாங்களாம். ஏற்கனவே தமிழிசை என்ற பெண் தலைவர் அமர்ந்திருந்த அந்த நாற்காலியில் இன்னொரு பெண் தலைவரான நிர்மலா அமர்வது ஏகப்பொருத்தம். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்குப் பின் கட்சியின் தலைவராக ஒரு பெண்ணை அமரவைத்த பெருமை நம் பா.ஜ.க.வுக்குதான் உண்டுன்னும் சீனியர் தலைவர் களிடம் எடுத்துச் சொல்லப் பட்டிருக்கு.''
""உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் வேட்பு மனுவை வாங்க மாவட்டம்தோறும், தேர்வுக் குழுவை, பா.ஜ.க. அமைக்கத் தயாராகுது. பத்தாம் தேதி கூட இருக்கும் தி,மு.க. பொதுக் குழுவில் ஏதேனும் விசேஷம் உண்டா?''’
""இந்தப் பொதுக்குழுவில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட இருக்குதாம். அதேபோல், கட்சியின் பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் உடல்நிலை கருதி, அவர் பெயரில் வரும் அறிவிப்புகளுக்கு மாற்றுவழி பற்றியும் முடிவெடுக்கப்படு மாம். பொதுச் செயலாளருக்கு உதவியா, பொறுப்பு பொதுச் செயலாளர்ங்கிற பதவியை உருவாக்கலாமா அல்லது கட்சித் தலைவரே பொதுச் செயலாளரின் பணியையும் சேர்த்து கவனிப்பதாங்கிற ஆலோசனையும் நடந்திருக்கு. இது பற்றி பொதுக்குழுவில் ஒரு முடிவு எட்டப்பட லாம்ன்னு தெரியுது. பொறுப் புப் பொதுச் செயலாளர்ன்னா துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட சீனியர்களில் யாருக்குங்கிற ரேஸும் நடக் குது.''
""அ.தி.மு.க. சைடிலும் பரபரப்பு தெரியுதே?''’
""தி.மு.க பொதுக்குழு வுக்கு முன்பாக கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டும் முடிவில் இருக்கா ராம் எடப்பாடி. சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. உள்ளாட்சித் தேர் தலை நடத்திவிட்டு, பிறகு சட்டமன்றக் கூட் டத்தை நடத்தலாமா? அல்லது சட்டமன்ற கூட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாமான்னு நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப் போறாங்களாம். அதேபோல் திருப்தியா செயல்படாத மா.செ.க்கள் சிலரை மாற்றும் முடிவிலும் இருக்காராம் எடப்பாடி. குறிப்பா, நெல்லை மா.செ.பிரபாகரனுக்கு பதிலா அந்தப் பதவியில் எக்ஸ் எம்.பி.சௌந்திரராஜனையும், கன்னியாகுமரி மா.செ.அசோகனுக்கு பதில், சிவ.செல்வராஜையும் புதிய மா.செ.க்களாக நியமிக்கவும் அவர் முடிவெடுத்திருப்பதா தகவல் வருது. அதேசமயம் அமைச்சரவை மாற்றத்தை உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு வச்சிக்கலாம்ங்கிற எண்ணமும் அவரிடம் இருக்குதாம்.''’
""முதல்வர் எடப்பாடியைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் பாரின் டூர் போறாரே?''’
""10 நாள் பயணம் போன எடப்பாடி, ஓ.பி.எஸ்ஸை அழைச்சிக்கிட்டுப் போகலை. இப்ப ஓ.பி.எஸ். தனியா 10 நாள் அமெரிக்காவுக்கு டூர் ஏற்பாட்டை செஞ்சிக்கிட்டார். அதிகாரிகள் சிலரும் போறாங்க. வீட்டு வசதித் துறையில் நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நோக்கமும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சியும் இந்த பயணத்தில் இருப்பதா கோட்டை வட்டாரம் சொல்லுது.''’
""போனமுறை நாம் பேசிக்கிட்ட மாதிரியே ஐ.பி.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் தொடர்பான மெஹா பட்டியல் வந்திருக்கே?''’
""ஆமாங்க தலைவரே, அந்த டிரான்ஸ்பர் தொடர்பா நம்மிடம் பேசிய ஐ.பி.எஸ். அதிகாரிகள், உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கும் நிலையில், சட்டம்- ஒழுங்கில் அனுபவம் உள்ள அதிகாரிகள் முக்கியமில்லாத பதவிகளிலும், சட்டம்- ஒழுங்கு தொடர்பான பதவிகளில் அனுபவம் இல்லாத அதிகாரிகளும் உட்காரவைக்கப் பட்டிருக்காங்கன்னு தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிச்சாங்க. அடுத்து ஐ.ஜி., ஏ.டி.ஜி.பி., டி.ஜி.பி. ஆகிய கேட்டகிரியில் இருக்கும் அதிகாரிகளுக்கான மாறுதல் உத்தரவுகளும் விரைவில் வரப்போகுது. இந்த நிலையில் மத்திய மண்டல ஐ.ஜி.வரதராஜும், தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரனும், வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜனும் சென்னைக்கு வர பெரும் முயற்சி எடுக்கறாங்களாம்.''’
""எனக்கு கிடைச்ச தகவலை சொல்றேன்.. 2ஜி அப்பீல் வழக்கை வேகப்படுத்தவும், சாதிக்பாட்சா தற்கொலை விவகாரத்தை தோண்டித் துருவவும் சொல்லியிருக்கிறதாம் பா.ஜ.க. மேலிடம். இதில் மு.க.ஸ்டாலினை சந்தித்த நபர்கள் பற்றியும் கிளறச் சொல்லியிருக்குதாம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தி.மு.க.வின் இமேஜை டேமேஜ் பண்ணிடணும்ங்கிறதுதான் பா.ஜ.க. வியூகமாம்.''