லோ தலைவரே, ஆகஸ்ட் 7-ந் தேதி கலைஞரின் இரண்டாம் வருட நினைவு நாள் மிகுந்த உருக்கத்தோடும் உணர்வோடும் கடைபிடிக்கப் பட்டிருக்கு.''

""ஆமாம்பா, சுயமரியாதை, இன உணர்வு, மொழி உணர்வு, சமூக நீதி, கருத்துச் சுதந்திரம்னு கலைஞர் எதையெல்லாம் காப்பாத்துறதுக்காக தன் 80 ஆண்டுகாலப் பொதுவாழ்கையை அர்ப்பணிச்சிக்கிட்டுப் போராடினாரோ, அதற்கெல்லாம் இப்ப இடையூறு வந்துக் கிட்டிருக்கு. அதனால் அவருடைய இழப்பையும், நினைவையும் உணர்வுப்பூர்வமா எல்லோரும் கடைபிடிச்சிருக்காங்க.''

d

""உண்மைதாங்க தலைவரே, உலகம் முழுக்க இருக்கும் தமிழுணர்வாளர்கள் ஒருமித்த உணர்வோடு கலைஞருக்கு நினைவஞ்சலி செலுத்தி இருக்காங்க. தி.மு.க. தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்க கலைஞர் பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளும் பரவலா நடந்திருக்கு. சென்னை மெரினாவில் இருக்கும் கலைஞரின் நினைவிடத்திற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சென்று மலரஞ்சலியும் செஞ்சிருக்காங்க.''’

Advertisment

""கோபாலபுரமும் கலைஞரின் நினைவுகளில் நெகிழ்ந்திருக்கே?''

""ஆமாங்க தலைவரே, 7ந் தேதி காலை கலைஞரின் கோபாலபுரம் இல்லத்துக்கு ஸ்டாலின், அவர் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட பலரும் போனாங்க. கலைஞரின் துணைவியார் தயாளு அம்மாள் உடல்நலிவோடு இருப்பதால், தொற்றைத் தவிர்க்கும் பொருட்டு முக்கிய பிரமுகர்கள் தவிர மற்றவர்கள் அங்கே அனுமதிக்கப் படலை. அங்கும் கலைஞருக்கு கண்ணீரஞ்சலி நடந்துருக்கு. கோபாலபுரத்தில் கலைஞருக்கு சிலர் சடங்குகளையும் செய்ததா கட்சி சீனியர்களுக்குள்ளே டாக். பெங்களூரிலிருந்த கலைஞரின் மூத்த மகள் செல்வியை கோபாலபுரத்துக்கு வரச்சொல்லி, சித்தரஞ்சன் சாலை இல்லம் தொடர்ந்து ஃபோன் போட்டு அழைத்தும், ஊரடங்கு காரணமாக அவர் வரலையாம்.''

rr

Advertisment

""விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை இரண்டாம் தாயாக கவனித்துக்கொண்டவர் அவரது மூத்த சகோதரி பானுமதி. அவரும் கொரோனாத் தொற்றில் மறைந்தது திருமாவளவனுக்கும் அவரை அறிந்தவர்களுக்கும் பெரும் துயரமா அமைஞ்சிடிச்சே...''

rr

""ஆமாங்க தலைவரே, தனது சகோதரி பானுமதியின் மரண நிமிடங்கள் பற்றி திருமா எழுதியிருந்த வரிகள் விடுதலைச் சிறுத்தைகள் தரப்பைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கு. கொரோனாவோடு போராடிய பானுமதியின் உயிர் சிம்ஸ் மருத்துவமனையில் பிரிஞ்சிருக்கு. அவர் உடலை தன் சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல விரும்பினாராம் திருமா. ஆனால், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷோ, உடலைக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கக்கூடாது. மந்தைவெளி இடுகாட்டில்தான் அடக்கம் செய்யனும்ன்னு சொன்ன தோட, அடக்க நிகழ்ச்சியில் 5 பேருக்கு மட்டுமே அனுமதின்னு கறாராகச் சொல்லிவிட்டார்.''

""பிறகு?''

""திருமா தரப்பு, முதல்வர் எடப்பாடியைத் தொடர்பு கொள்ள, பெரும் தயக்கத்துக்கு பின் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கு. இதைத் தொடர்ந்து, மந்தைவெளி நோக்கிச் சென்ற பானுமதியின் உடல் பாதி தூரத்தில் திருமாவிடம் ஒப்படைக்கப் பட, அது அரியலூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்ப்டடது. இறுதி நிகழ்வுகள் ரொம்ப உணர்ச்சிகரமா இருந்த நிலையில், பா.ஜ.க. தரப்பு ஏகத்துக்கும் டென்ஷன் ஆக்கியிருக்கு. கொரோனாவால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினரிடம் கொடுக்க கூடாதுங்கிற விதியை, எடப்பாடி அரசு எப்படி மீறலாம்? அதிலும் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவுக்கு நம்ம தயவில் ஆட்சி நடத்தும் எடப்பாடி எப்படி உதவ லாம்?னு கேட்டு, சர்ச்சையை எழுப்பிக்கிட்டு இருக்காங்க.''

""டெல்லி தப்லிக் மாநாட்டு கூட்டத்துக்கு ஒரு அளவுகோல், அயோத்தி ராமர்கோவில் அடிக்கல் நாட்டுவிழா கூட்டத்துக்கு இன்னொரு அளவுகோல்ங்கிற மாதிரி அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே..?''

""தலைவரே, பா.ஜ.க. தரப்பின் கோபம் திருமாமீது அல்ல. எடப்பாடி மீதுதானாம். சமீபநாட்களாகவே உரசல் அதிகமாகிக்கிட்டிருக்கு. தனக்கு எதிரா பா.ஜ.க. தீவிரமாக்காய் நகர்த்துதுன்னு எடப்பாடி நினைக்கிறாராம். அதனால்தான் டெல்லித் தரப்பால் ஓ.பி.எஸ்.சுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுதுன்னும், அவர் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க ரெடியாகுறாங்கன்னும் ஆதங்கப்படறார். இவர்மேல் உள்ள எரிச்சலில் அ.திமு.க.வில் இருக்கும் பலரையும் பா.ஜ.க. தங்கள் பக்கம் இழுக்கவும் முயற்சிக்குதாம். அதனால் சசிகலா ரிலீசானதும், தன்னையும் தன் அமைச்சரவையில் இருக்கும் வெயிட்டானவர்களையும் ஊழல் புகாரின் பேரில் ஒடுக்கிவிட்டு, சசிகலாவை மேலே கொண்டுவந்துவிட்டால் என்ன செய்வதுன்னு பயப்படறாராம்.’அதனால்தான் தன் வீரத்தைக் காட்டும் வகையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ‘தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும்னு எடப்பாடி அறிவிச்சாரா?''

""ஆமாங்க தலைவரே, அது மட்டுமில்லாமல், சுற்றுச் சூழல் துறை கொண்டுவரும் அதன் "மதிப்பீட்டு வரைவு சட்டம் 2020' குறித்தும், மத்திய அரசின் புதியகல்விக் கொள்கை குறித் தும் ஆய்வுசெய்யக் குழுக்கள் அமைக்கப்படும்ன்னு அவர் அறிவிச்சி, டெல்லியைத் திகைக்க வச்சிருக்கார். ஒரு காலத்தில் தான் சொன்ன தற்கெல்லாம் தலையாட்டிய எடப்பாடி, இப்ப எந்ததைரியத்தில் தங்களுக்கு எதிராக வாய்திறக்கிறார்ன்னு டெல்லி பா.ஜ.க. அவரைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பிச்சிச்சிருக்குதாம்.''

rr

""இந்த பரபரப்புக்கு நடுவில், தி.மு.க. சீனியரான துரைமுருகன் அ.தி.மு.கவோடு இணக்கமா இருப்பதா செய்தி பரவுதே?''

""இந்த வதந்தியை பத்திரிகை-ஊடகம் வரியா கிளப்பி, துரைமுருகனுக்கு சங்கடத்தை உருவாக்க நினைக்குதாம் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பு. துரைமுருகன் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவில் இயங்கிவந்த டென்னிஸ் கோர்ட்டையும், எடப்பாடியிடம் பேசி, இழுத்து மூடிட்டாருன்னும் அமைச்சர் தரப்பு அடிஷனலா இன்னொரு கதையையும் பரப்புது. உண்மையில் அந்த பூங்காவில் இருந்த டென்னிஸ் கோர்ட், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே மூடப்பட்டுவிட்டதாம். சென்னையில் இருக்கும் பூங்காக்களை மேம்படுத்து வதற்கான டெண்டரை எடுத்திருக்கும் அமைச்சருக்கு நெருக்கமான நபர், துரை முருகன் வீட்டருகே இருக்கும் பூங்காவுக்குள், நுழைவதை துரைமுருகன் தரப்பு மேலிடங்களில் சொல்லித் தடுத்திருக்கு. அந்தக் கடுப்பில் கிளப்பிவிடப்பட்ட புரளிதானாம் இது.''’’

""பா.ஜ.க.தலைவர் நட்டாவை சந்தித்த தி.முக. எம்.எல்.ஏ.வான கு.க.செல்வம், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்பும், ’உள்ளிருப்புப் போராட்டத்தை’ நடத்தறாரே?''

""உண்மைதாங்க தலைவரே, கட்சியை விட்டு நீக்குவதற்கு முன்பு, முறைப்படி கு.க.செல்வத்துக்கு தி.மு.க.தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கு. அதுக்கு பதில் சொல்லும் விதமா ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கு.க.செல்வம், ‘தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மற்ற கட்சி தலைவர்களைச் சந்திக்கக் கூடாதுன்னு கட்சி விதி எதிலும் குறிப்பிடப்படலை. அதனால் நான் கட்சியின் மாண்புகளை மீறியதாகக் கூறுவது சரியல்ல. அதனால் தங்கள் நோட்டீசை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்னு குறிப்பிட்டிருக்கார். பா.ஜ.க.வின் விருப்பப்படி அவர் இபப்டி சச்சரவு செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட தி.மு.க. தலைமை, அமைதி காக்குது.''

""தமிழக சட்டசபை கூடும்போது எல்லா விவகாரங்களும் பரபரப்பாயிடுமே?''

""ஆமாங்க தலைவரே, அடுத்த மாதம் மோடி, நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டுவது போல், தானும் சட்டமன்றத்தைக் கூட்டனும்ங்கிற முடிவுக்கு வந்திருக்கார் எடப்பாடி. அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களுக்கான ஒப்புதலை சட்டப்பேரவையிடம் பெறவேண்டி இருக்குதாம். அப்போதுதான் நிதி ஒதுக்கீடுகளைச் செய்து, டிசம்பருக்குள் தங்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றிக்க முடியும்ங்கிறது அவர் எண்ணம். சட்டமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இல்லாத குறையை கு.க.செல்வம் குரல் மூலமா சரிபண்ண நினைக்குதாம் டெல்லி மேலிடம். அ.தி.மு.க. சைடிலும் கு.க.செல்வத்துக்கு பேரவையில் வரவேற்பு இருக்குமாம். இதற்கிடையில், சமூக இடைவெளியுடன் எம்.எல்.ஏ.க்களை இப்போதுள்ள பேரவை வளாகத்தில் அமரவைக்க, இடநெருக்கடி இடம் கொடுக்காது என்பதால், கூட்டத்தை கலைவாணர் அரங்கத்தில் நடத்தலாமாங்கிற ஆலோசனையிலும் எடப்பாடி இருக்காராம்.''

rr

""இப்படிப்பட்ட இடநெருக்கடிகளைத் தவிர்க்கத்தான் புதிய தலைமைச் செயலகத்தை சட்டமன்ற வளாகத்தோடு கட்டினார் கலைஞர். ஏரிமேல் கோபித்துக்கொண்டு எதையோ கழுவாமல் போனதுமாதிரி ஜெ ஆட்சியில் அதை ஆஸ்பத்திரியாக்கிட்டாங்க. இப்ப கலைஞர் ஆட்சியில் டிசைன் செய்யப்பட்ட கலைவாணர் அரங்கம் இப்போதைய ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படுது.''

""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கந்தசஷ்டி கவசத்தை விமர்சனம் செய்ததற்காக கறுப்பர் கூட்டம் யுடியூப் சேனல் நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்காங்க. இந்த நிலை யில், கறுப்பர் கூட்ட விவகாரத்தில் என்ன நடந்தது? அதற்கு நிதி உதவி செய்தவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்றெல்லாம் தங்களுக்கு ரிப்போர்ட் கொடுக்கும்படி, மத்திய உளவுத்துறையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருக்கிறது. நடவடிக்கை எடுத்தபிறகும் எதற்கு ரிப்போர்ட்னு அரசியல் கோணத்தில் யோசிக்குது மத்திய உள்துறை.''