"ஹலோ தலைவரே, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் டெல்லி விசிட் ஆளும்கட்சித் தரப்பில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கு.''’

""ஆமாம்பா. அவரை முக்கியமான ஃபைல்களோடு டெல்லி அழைத்திருப்பது பற்றி ஏற்கனவே நாம பேசியிருந்தோமே!''’

vv""ஆமாங்க தலைவரே, முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் மீதான புகார்கள், இதற்காகவே தூசு தட்டப்படுதுன்னும், அவர்கள் தொடர்பான சி.பி.ஐ.யின் ரிப்போர்ட்டுகளும் அமித்ஷா கைக்குப் போக இருக்குதுன்னும் நாம பேசிக்கிட்டோம். டெல்லி அழைப்பின் பேரில் 7-ந் தேதி இரவு கவர்னர் பன்வாரிலால் புரோகித், சில ரகசிய ரிப்போர்ட்டுகளுடன் டெல்லிக்குப் பறந்திருக்கார். தமிழக அமைச்சர்கள் தொடர்பாக வருமான வரித்துறையிடமும் உள்துறை அமைச்சகம் கோப்புகளைக் கேட்டு வாங்கியிருக்குதாம். இதன் அடிப்படையில் சில அதிரடி நடவடிக்கைகள் வேகம் பெற இருக்குதாம். குட்கா விவகாரத்தில் சிக்கிய சிலரின் சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களும் அவரது பதவியும் குறிவைக்கப்பட்டு இருக்குன்னும் டெல்லியிலிருந்து ஒரு ஹாட் தகவல் சொல்லுது. அடுத்தடுத்து பல மந்திரிகள் சிக்குவாங்களாம்.''’

""தமிழகத்தில் ரொம்ப நாளைக்கப்புறம் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் என்ன ஹாட் டாபிக்?''’

Advertisment

""ஆகஸ்ட் 8, 9 ஆகிய தேதிகளில் கலெக்டர்கள் மாநாட்டை நடத்தியிருக்கார் முதல்வர் எடப்பாடி. பல்வேறு துறைகளுக்காக மத்திய அரசு அனுப்பிய 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை எடப்பாடி அரசு பயன்படுத் திக்காமல் திருப்பி அனுப்பிடுச்சுன்னு சி.ஏ.ஜி. கொடுத்த அறிக்கையால மத்திய அரசு செம கோபத்தில் இருக்குது. இது சம்பந்தமா தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் விளக்கம் கேட்டிருக்கு. பதறிப்போன எடப்பாடி, கலெக்டர்கள் மாநாட்டைக் கூட்டி விவாதிச்சாரு. அதோடு, அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் ரெடியா இருக்கு. அதுக்குள்ள உள்ளாட்சி அமைப்புகள்ல தேங்கி யிருக்கும் திட்டங்களை எல்லாம் முடிக்கணும்னு இந்தக் கூட்டத்தில் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கு.''’

""கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள்ல, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முரசொலி அலுவலகத்தில், கலைஞரின் கம்பீரமான சிலையைத் திறந்துவச்சாரே, அதுக்குப் போயிருந்தியா?'’

vg

Advertisment

""நேரில் போயிருந்தேங்க தலைவரே.. ஏற்கனவே அறிவாலயத்தில் கலைஞர் சிலையை சோனியா திறந்த விழாவுக்கும் போயிருந்தேன். அதில் ராகுல், சந்திரபாபுநாயுடு, பினரயி விஜயன் எல்லாரும் கலந்துக்கிட்டாங்க. ஆனா, மம்தா அப்ப வரலை. தன்னை பிரதமர் வேட்பாளரா நியமிக்க, மற்ற கட்சிகள் ஒப்புக்கொள்ளாத ஆதங்கத்தில் அவங்களோடு அவர் கலந்துக்கலை. இப்ப மம்தா திறந்து வைத்த சிலை திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் உள் ளிட்ட கட்சிகளின் அகில இந்தியத் தலைமை வரலை. ஆனா, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தமிழகத் தலைவர்கள் கலந்துக்கிட்டாங்க. அதுபோல, அழைப்பு கொடுக்கப்பட்டும் சென்னையில் இருந்த ரஜினியும் வரலை. தி.மு.க. சைடில் வற்புறுத்திக் கூப்பிட்டா போவோம்ன்னு ரஜினியும், அவர் வந்தா வரவேற்போம்ன்னு தி.மு.க. தலைமையும் நினைச்சதால் இந்த நிலைமையாம்.''’

amitsa

""சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் விவகாரத்தில், போலீஸ் பலரையும் குறிவைக்குதாமே?''’

""உண்மைதாங்க தலைவரே, மணற்கொள்ளைக்கு எதி ரான போராட்டக் குழுவில் இருந்த விஸ்வநாதன் என்பவரை 8-ந் தேதி காவல்துறை கைது செய்திருக்கு. முகிலன் தலைமறைவாக இருக்க, இந்த விஸ்வநாதன் உதவினார்னு அவர்மேல் வழக்கையும் காவல்துறை பதிவு செய்திருக்கு. பழைய வழக்குகளையும் தேடி எடுக்குறாங்களாம். மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் பொதுவுடமைத் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட யாரும் இனி போராட்டக் களத்துக்கு வரக்கூடாதுங்கிறதுதான் எடப்பாடி அரசின் வியூகமாம்.'’

""ஆர்.எஸ்.எஸ். வியூகம் பற்றி போன முறையே பேசியிருந்தோமே''’

""அது உண்மைதான்னு கமலாலயம் ஆட்கள் சிலரே சொன்னாங்க தலைவரே.. காஷ்மீர் நடவடிக்கைக்குப் பிறகு, அமித்ஷாதான் ஆர்.எஸ்.எஸ். பார்வையில் சூப்பர்மேன்னு சொல்றாங்க. காஷ்மீர் சிறப்பு சட்டத்தை ரத்து செய்யும் திட்டத்தை அமித்ஷாவின் ஆலோசனையின்படி, உலக நாடுகள் சிலவற்றின் காதில் போடப்பட்டிருக்கு. இது அமெரிக்கா மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காதுக்கும் போய்ச் சேர்ந்துடுச்சாம். இதனால் அதிர்ந்து போன இம்ரான், தன் அமைச்சரவையைக் கூட்டி இது பத்தி சுடச்சுட விவாதிச்சிருக்கார். இப்படி எதிர்முகாமின் ரியாக்ஷனைக் கவனிச்ச பிறகுதான், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கு.''’

""ஓ..''’

""இது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வில் ஏற்படுத்திய ரியாக்ஷனை நான் சொல்றேன். காஷ்மீர் பிரச்சினையைக் கையாண்டது அமித்ஷாவின் சாதுர்யமா பார்க்கப்படுது. அதோடு, மோடிக்கு இப்போது 69 வயது ஆகுது. அமித்ஷா வுக்கோ 57தான். வயதில் மூத்தவர்ங்கிறதாலதான் சீனியர் களான அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்களுக்குப் பதவி கொடுக்காமல், அவர்களை ஆலோசகர்களாக மட்டுமே பா.ஜ.க. வைத்திருக்கிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடிக்கும் 70 வயது தாண்டிடும். அதனால்தான், ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடுத்த சாய்ஸ் அமித்ஷான்னு பா.ஜ.க.வினர் சொல்றாங்க.''