சென்னை, ஸ்டான்லி மருத்தவமனை டீன் அலு வலகத்தில், கடந்த ஆறாம் தேதி, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு திடீர் விசாரணையை மேற் கொண்டார். ஸ்டான்லி மருத்துமனையில் அ.தி. மு.க. ஆட்சியிலிருந்து இன்று வரையிலும் இயக்குநருக்குத் தெரியாமலேயே பல ஊழல்கள் நடந்துள்ளதாகப் புகார் வந்ததாலேயே இந்த விசாரணை நடத்தப் பட்டதாம்.

இந்த விவகாரத்தின் உள்ளே போவதற்கு முன்பாக, ஸ்டான்லி மருத்துவ மனையின் டீன் பாலாஜி யார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டிய தேவை உள்ளது. பூர்விகம் ஆந்திரா வாக இருந்தாலும். வளர்ந்தது வட சென்னையில்தான். தன்னுடைய தந்தை வழக்கறிஞர் என்பதால் தம்புச்செட்டி தெரு வில் தான் வசித்துவந்தார்.

st

Advertisment

மருத்துவர் படிப்பை சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் படித்துமுடித்து அதன் பிறகு சென்னை அரசு மருத்துவமனை யில் மருத்துவராகப் பணிபுரிந்து கொண்டே, அப்போலோ மருத்துவமனையிலும் பணிபுரிந்து வந்துள் ளார். அப்போலோ பிரதாப் ரெட்டியும், பாலாஜியும் ஒரே ஊர் என்பதாலும். இவர் ஸ்டான்லி மாணவர் என்ற காரணத்தாலும். கூடுதல் பலத்துடன் வலம் வந்துகொண்டிருந்தார்.

அப்போலோ மருத்துவமனைக்கு வருகின்ற உயரதிகாரிகள், அமைச்சர்கள் என அனை வரையும் பாலாஜிதான் கவனிப்பாராம். அந்த வகையில் அனைவரிடமும் மிகவும் நெருக்கமானவராகத் திகழ்ந் துள்ளார். ஜெ. அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது, திருப்பரங் குன்றம் இடைத்தேர்தலுக்காகப் போலி கைரேகை பெற்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டார். அந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அ.தி.மு.க. முதல்வராக ஈ.பி.எஸ். வந்தபோது, பாலாஜியை குஷிப்படுத்துவதற்காகவே, ஸ்டான்லி மருத்துவமனையில் மைக்ரோ சர்ஜரி என்கிற துறையை உருவாக்கி, அத்துறைக்குத் தலைவராக பாலாஜியை நியமித்தனர். 5 வருடம் துறைத்தலைவராகப் பணிபுரிந்தால் தான் டீனாக முடியும் என்ற விதியை மீறி, ஒரே ஆண்டுக்குள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு டீனாக உயர்த்தப்பட்டார். அவருக்காகவே உருவாக்கப்பட்ட மைக்ரோ சர்ஜரித்துறைக்கு அத்தோடு மூடுவிழா நடத்தப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தனக்கு தோதான நபராக இருப்பதற்காக, செங்கல்பட்டில் பணியாற்றிய பாலாஜியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு டீனாக பணிமாற்றம் செய்தார். பின்னர், ஸ்டான்லி மருத்துவமனையில் தீயணைப்பு சாதனம் பொருத்துவதற்கு பல கோடி ஒதுக்கப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட தாகப் பொய்க்கணக்கு காட்டி, இன்றுவரை இயங்காமலேயே உள்ளது. மேலும் சில கோடி ஒதுக்கப்பட்டதில், மின்சாரம், ஆக்சிஜன் தவிர மற்றவை அனைத்தும் தரமற்றே போடப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் தனியார் நிறுவனங்கள் வழங்கிய கோடிக்கணக்கான மதிப்புள்ள உபகரணங்களை, அன்றைய அமைச்சர் விஜயபாஸ்கர், தனது பினாமி கம்பெனிகள் மூலம் கொடுக்கப்பட்டதாக பில் தயாரித்து பணத்தைப் பெற்றுள்ளார். அதேபோல, எண்ணூர் துறைமுகம் வழங்கிய ரூ.65 லட்சம் மதிப்பிலான 8 பேட்டரி கார்கள், இயக்கப்படாமல் பழுதடைந்துள்ளன. மருத்துவக் கல்லூரியில் சி.சி.டி.வி. அமைப்பதிலும் கொள்ளை.

stt

மேலும், மருத்துவக் கல்லூரி ஆடிட்டோரியத்தில் குளிர்சாதன வசதி அமைப்பதற்காக, முன்னாள் மாண வர்கள் நிதியாக ரூ.40 லட்சமும், மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின்கீழான தொகையிலிருந்து ரூ.35 லட்சமுமாக மொத்தம் 75 லட்சம் ரூபாயைச் சேகரிக்க, டீனால் உருவாக் கப்பட்ட கமிட்டி முடிவெடுத்தது. இப்பணியை பொதுப் பணித்துறையின் மின்சாரத்தின்மூலம் செயல்படுத்தாமல், டென்டர் கொட்டேசன் எதுவுமின்றி, ஒரு தனியார் நிறு வனத்தைத் தேர்ந்தெடுத்து, 75 லட்சமும் செலவழிக்கப் பட்டதாகக் கணக்கு காட்டி, கணிசமான தொகையை ஸ்வாஹா செய்துள்ளார்கள். இந்த விவகாரத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் போனால் மாட்டிக்கொள்வோமெனப் பயந்து, பதிவு அலுவலரும், கல்லூரி ஏ.ஓ.வும் தாமாகவே பணியிட மாற்றம் செய்துகொண்டனர். எனவே இவை அனைத்தையும் சிறப்பு ஆடிட்டிங் மூலம் விசாரித்தால் பல உண்மைகள் வெளிப்படும் என்று மருத்துவர்கள் குமுறலாக வெளிப்படுத்தியதால் தான் டி.எம்.இ. இயக்குனர் நாராயணபாபு விசாரணையில் இறங்கியுள்ளாராம்.

இப்படி ஸ்வாகா போட்ட பணத்தை வைத்து அடுத்த நகர்வுக்குத் தயாராகியுள்ளனராம். தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவின் பணி மூப்பு அக்டோபர் மாதத்தோடு முடிவடையும் நிலையில். அதற்கு உட்பட்ட நாட்களுக்குள்ளேயே டாக்டர் நாராயணபாபு விடுப்பில் சென்றால், அந்த இடத்தை டி.எம்.இ. தற்காலிக இயக்குனர், ஸ்டான்லி மருத்துவ மனையின் டீன் பாலாஜி அமர்வதற்கானபடி அனைத்து பணியையும் அமைச்சரின் பி.ஏ.வை வைத்து கச்சிதமாக முடிக்கவுள்ளாராம். அதற்காக சுகாதாரத்துறை அமைச்ச ருக்கே தெரியாமல், அமைச்சரின் பி.ஏ. மூலமாக நாரா யணபாபுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.

ஏற்கெனவே சீனியாரிட்டிப்படி பார்த்தால், டாக்டர் மீனாட்சிசுந்தரம், டாக்டர் சாந்தி மலர் ஆகியோருக்குத் தான் இந்த இயக்குனர் பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மீனாட்சி சுந்தரம் வந்தால் நம்மால் எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது என்ற கண்ணோட்டத்தோடு, தனக்கு ஆதரவாளரான நாராயணபாபுவைக் கொண்டு வந்தார். தற்போது சீனியாரிட்டியைத் தாண்டி, ஜூனியரான பாலாஜியைக் கொண்டுவர காய் நகர்த்தி உள்ளார்களாம். புழுவைப் போட்டு மீன்பிடித்த காலம் சென்று, அதே மீனைப் போட்டு சுறாவைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்.